எனது பெயர் ஶ்ரீகலா... இல்லத்தரசி. பொழுதுபோக்கிற்காக எழுத வந்தது. இப்போது எழுத்து உயிர்மூச்சாகி விட்டது. இதுவரை 38 நெடுநாவல்களும், 6 குறுநாவல்களும் எழுதி உள்ளேன். சொந்த தளம் மற்றும் சொந்த பதிப்பகம் வைத்துள்ளேன். என்னுடைய கதைகளில் காதல், குடும்பம், உறவு சிக்கல்கள், உளவியல் ரீதியிலான பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள், மனித உணர்வுகளை அவர்களின் நிலையில் இருந்து படம் பிடித்துக் காட்டுவது மற்றும் சமூகக் குற்றங்களைச் சுவைபட எழுதுவது, அதற்கான நீதி இவை எல்லாம் கலந்து இருக்கும். கதைகளில் மட்டும் சமூகச் சிந்தனை எழுதுவது அல்லாது உண்மையிலும் சமூகத் தொண்டு ஆற்ற வேண்டும் என்பது ஆவா... அதை எஸ்எம்எஸ் குழுமம் மூலம் செய்து வருகிறேன்... நன்றி :)