வாழ்வில் ஒவ்வொருவருக்கும் எதிர்பாராவிதமாக எத்தனையோ நிகழ்கிறது. ”கபாலா” இந்த பூமிக்கு உண்மையாக நிகழவிருக்கும் ஓர் அற்புத நிகழ்வுக்கு அழைத்துச் செல்லும் அறிவியல் கலந்த கற்பனைப் பாதை... சென்னையில் பணிபுரிந்து கொண்டு இருக்கும் ஐடிக் கம்பெனியின் “மாஜிக் ஆஃப் மார்க்கெட்டிங் “ ப்ராஜெக்ட் சம்பந்தமாகப் புதுவையில் இரண்டு மாதம் தங்கியிருக்கத் தனுஷ் வந்தான். தனுஷ் கல்லூரியில் படிக்கும் காலத்தில் கலைபொருட்கள் மீது ஒரு தீராத மோகம் வைத்து இருந்தான். எந்த ஒரு சின்னக் கலைப்பொருளையும் அது எந்தக் கலாச்சாரப் பின்னனி கொண்டது என்ற தேடல் அவனுக்குள் இருந்தது. அவனுடைய ஆர்வத்திகேற்ப ஒரு கலைபொருள் அங்காடியில் எதிர்பாராதவிதமாகப் பகுதி நேர வேலை&