நாற்காலிக்காரர் நாடகத்தில் இவ்விரு கோஷ்டிகளுக்கு இடையே உருவாகும் போட்டி, அதன் வெற்றி தோல்வி எல்லாமே நாற்காலியில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பவன் கையில் என்பதன் மூலம் யார் ஜெயித்தாலும் தோற்றாலும் வாக்குப் போடுபவன் என்றும் பாதிக்கப்படுபவன் என்பதன் குறியீடாக உருவகிப்பதன் மூலம் எல்லாமே ஓர் விளையாட்டு; அரசியல் விளையாட்டு (Political Game) படிமத்தை உண்டாக்கியிருந்தார். -செ. ரவீந்திரன் *** சாதாரணப் பேச்சுக்களைச் செதுக்கிச் செதுக்கி நாடகப் பிரதிக ளாக்கிடும் வித்தையை முத்துசாமி கைவரப்பெற்றவராக விளங்குகிறார். இளைஞர்கள் விளையாடும் சீட்டுக்கட்டு விளையாட்டையும் சிறுவர்கள் விளையாடும் கோலிக்குண்டு விளையாட்டையும் காட்டி ஜெயித்த கட்சி, தோல்வியுற்ற கட்ĩ
ந. முத்துசாமி என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புஞ்சை என்ற கிராமத்தில் பிறந்த இவர் 2000 ஆண்டின் சங்கீத நாடக அகாதமியின் விருது பெற்றிருக்கிறார். தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்களுள் இவரும் ஒருவர். இவரது "கூத்துப்பட்டறை" என்ற நாடக அமைப்பு தமிழில் பரிசோதனை நாடகங்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறது. "கசடதபற", "நடை" போன்ற இலக்கிய இதழ்களில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். நீர்மை உட்பட 5 நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய "ந. முத்துசாமி கட்டுரைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. 2012 ஆம் ஆண்டில் இவரது கலைச்சேவையை பாராட்டும் வண்ணம் இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி பெருமைப்படுத்தியது.
Both the plays offer a great satirical look at the constructs of our society in a very absurdist way. The greatness of these plays is the fact that it still looks relevant. Na.Muthusamy is not just prescient genius