வணக்கம்.. இது குடும்ப பின்னணி கலந்த குறுநாவல்.. "சோ இப்ப வர உங்க வீட்டுல யாரு கிட்டயும் விசயத்த சொல்லாம தான் இருக்கியா ஜஸ்மிகா?" என்று கேட்க அவளிடம் பதில் இல்லை. அந்த அமைதியே பதிலை சொல்லி விட "இதுக்கும் மேல மறைக்குறது முட்டாள் தனம் ஜஸ்மிகா." என்று கூற அப்போதும் அவளிடம் பதில் இல்லை."உன்னால நானும் சொல்ல முடியாத நிலமையில இருக்கேன். தயவு செஞ்சு நீயா சொல்லிடு" என்று மருத்துவர் வேண்டுவது போல் கட்டளை வைக்க "வேணாம் மேடம். தெரிஞ்சா யாரும் தாங்க மாட்டாங்க. முக்கியமா வது தாங்க மாட்டான்" என்றாள் அமைதியாக."எப்படினாலும் தெரிஞ்சு தான் ஆகனும். டெலிவரி டைம் அவங்க கேள்வி கேட்டா என்ன சொல்ல? ""எதுவும் சொல்லாதீங்க மேடம். எல்லாம் கடவுள் பார்த்துப்பார்.