போகனின் சிறுகதை தொகுப்பான திகிரி, பெண்ணின் உணர்வுகளையும் ஆணுடனான உறவுகளும் அதில் அவள் கொள்ளும் இன்னல்கள் என பெண்களின் வெவ்வேறு சுழல்களையம், துயரங்களையும் சித்தரிக்கிறது. இந்த எல்லாக் கதைகளும் கிட்டத்தட்ட ஒரே விதமான கருவைகொண்டுள்ளது என்றேதோன்றுகிறது. இந்த எண்ணத்தாலேயே பொதுவான பலதரப்பட்டகருக்களை கையாளும் தொகுப்புகளை விட இதுவேறுபடுகிறது. ஒரே கரு வெவ்வேறு சூழலில் படைப்பாளியால் எப்படி கையாளப்படுகிறது என்பது ஒரு நல்ல அனுபவம். எழுத்தாளர் ஒருகவிஞரும்என்பது இன்னும் சிறப்பு உவமைகள், படிமங்கள்மொழி அழகுடன் கதைகளை இன்னும் அணுக்கமாக்குகிறது.
போகன் சங்கர் (பிறப்பு: மே 19, 1972) தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர். இயற்பெயர் கோமதி சங்கர். திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்தவர் நாகர்கோயிலில் வசிக்கிறார். சுயஎள்ளலும், உணர்ச்சிகளை மிதமாக வெளிப்படுத்தும் தன்மையும் அகத்தேடலும் கொண்ட கவிதைகளுக்காகப் புகழ்பெற்றவர்.
விருதுகள்
கவிஞர் ராஜமார்த்தாண்டன் விருது
சுஜாதா விருது
ஆத்மா நாம் விருது (2018)
நெய்வேலி இலக்கியச் சிந்தனை விருது
கனடா இலக்கியத் தோட்ட விருது
கண்ணதாசன் விருது
திகிரி என்பதற்கு தமிழ் அகராதி தரும் பொருள்கள் வட்டம், மலை, மூங்கில்,சூரியன், தேர்.
நமது இன்றைய வாழ்வின் அன்றாடங்களை நிச்சயிக்கும் நிகழ்வுகள் என்றோ நடந்திருக்கும். இந்த கதைகள் அதைப் பற்றியது தான்.
நேற்று நடந்தது என்பது நெடுங்காலம் முன்பு நடந்ததாய் இருக்கலாம், போன பிறவியாய் இருக்கலாம். எது இன்றை வழிநடத்தகிறது என்பதை யார் தீர்மானிப்பது?
இவைகள் எல்லாம் எதோ ஒரு தவறினால் நடப்பது அல்ல, இவை பிறழ்வுகள். பிறழ்வுகள் உள்ள மனிதர்கள் தனி பிறவி கிடையாது, எதோ பிறழ்வு என்பது ஆணிற்கு மட்டுமே உண்டு என்பது போல பொதுபுத்தி வரையறை செய்துள்ளது. பெண்களும் அவ்வகையில் உண்டு அவர்கள் காலம் கடந்து, வர்கபேதமற்று, வயது வித்யாசமின்றி நீக்கமற இக்கதைகளில் நிறைந்ததிருக்கிறார்கள்.
இந்த திகிரி, இன்றையும் நேற்றையும் சுழழ வைத்துக் கொண்டே இருக்கிறது.
Short stories related to different genres like men-women relationship, magical realism, horror etc. Makes a good impression with his different narrative style. Nanjil tamil + few malayalam words/slang may hinder reading flow for readers who didn't used to it. But overall a good read!