இலக்கியமும் வரலாறும் வாழ்வியலோடு தொடர்புடையவை. அவை மறைக்கப்படவில்லை. புதைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், தற்போது பல தடங்களின் வழியாக அவை வெளியேறி மீண்டும் செய்தியாக நம் தலைமுறையினரிடம் வந்து சேர்ந்துகொண்டிருக்கின்றன. காரணம் மனிதனின் மரபு, உணர்வு, வீரம், பழக்க வழக்கம், செயல்பாடு, சிந்தனை என இவற்றோடு பின்னிப்பிணைந்திருப்பதால்...
பாட்டி சொல்லும் கதை வழி, ஒரு குழந்தை ஒரு செய்தியை அறிந்துகொள்கிறது. அதுபோல் இன்று பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா, செல்போன் என பல ஊடகங்கள் வழியாக அறிந்துகொள்கிறோம். புதைந்திருக்கும் வரலாற்றுக் கதைகளும்... கதைகளாக சொல்லப்படும் வரலாற்று உண்மைகளும் இன்று மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அது ஓர் எழுத்தாளனின் எழுதுகோல் வழியே எழுந்த தமிழர்களின் மரபே இந்த நூல். பரங்கியர் படையை நடுங்கச்செய்த தென் தமிழகத்து போர் ஆயுதங்களின் குறியீடான வளரி முதல் மரணத்தொழில் செய்யும் போக்கிரிகள், மோசடி செய்யும் கும்பல்களின் அட்டகாசங்கள், கீழடி செய்திகள், மாடோட்டிகளின் மரபு விளக்கங்கள், கல்வெட்டுச் செய்திகள் இலக்கியம், வரலாறு, கணக்கு...
இவற்றினூடே நுழைந்து கதைகளின் கதைகளைத் தொட்டெடுத்திருக்கும் ஆசிரியர், அவை அன்றாடம் நிகழும் நிகழ்வுகளினூடே கலந்துரைந்திருப்பதை இலைமறைகாயாக வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு. கண்களை அகலச்செய்யும் ஆச்சர்யத் தகவல்களை திரட்டித் தரும் கதை கேட்போமா, கதைகளின் கதையை...
Su. Venkatesan (சு. வெங்கடேசன்), also known as S. Venkatesan, is a Tamil writer from Tamil Nadu, India and Tamil Nadu State Committee member of Communist Party of India (Marxist). His debutant novel Kaaval Kottam published in 2008 was awarded the Sahitya Academy Award for Tamil in 2011. The Tamil film 'Aravaan' is based on it. The Sahitya Academy-winning writer is also the president of the Tamil Nadu Progressive Writers Association. His second novel 'Veerayuga Nayagan Velpari' was serialised in Tamil popular magazine Ananda Vikatan. 'Veerayuga Nayagan Velpari' is the second Novel after Ponniyin Selvan to make a big craze between the readers at that time.
வரலாற்றில் மறைக்கப்பட்டதும் அழிக்கப்பட்டதும் தான் அதிகம். அப்படி நமக்கு இதுவரை தெரியாத, புதிர் போன்ற 12 வரலாற்று சுவடுகளை கட்டுரைகளாக எழுதியுள்ளார் வெங்கடேசன்.
1. வளரி : "பூமராங்" - பழங்குடியின ஆஸ்திரேலியர்களால் வேட்டையாட பயன்படுத்தப்பட்ட ஆயுதம். அதுபோல தமிழர்கள் வளரி எனும் ஏரியாயுதத்தை வெள்ளையர்களுக்கு எதிராக போர்க்காலத்தில் பயன்படுத்தியுள்னனர். 1801 ஆயுதத்தடை சட்டத்தின்மூலம் பல ஆயிரக்கணக்கான வளரிகளை கைப்பற்றி அழித்து, பின் அது ஒரு அருங்காட்சிப்பொருளாக மாறிய சோகக்கதை உண்டு.
போக்கிரி : பொதுவாக இந்தப்பெயரை திருட்டுத்தனமோ, மோசடிக்கோ பயன்படுத்துவதுண்டு. ஆனால் வரலாறு சொவ்லதோ வேறு. போக்கிரி ஒரு குறிப்பிட்ட தொழிலை சேர்ந்த மக்கள் கூட்டத்தின் பெயர். ஆங்கில ராணுவத்திற்கு எதிராக குரல் கொடுத்ததால், ஒட்டு மொத்த கூட்டத்தையும் அழிக்க "குற்றப்பரம்பரை சட்டத்தை" உருவாக்கினார்கள். ஒரு ரத்த சரித்திரத்தை பற்றி அறியாத நாம் அதை ஒரு வசைச்சொல்லாக பயன்படுத்தி வருகிறோம்.
கீழடியின் அரசியல், மாயக்காள் என்னும் பெண்ணின் போராட்டம், புகையிலை வரலாறு, மோசடியை பற்றி தமிழில் எழுதப்பட்ட முதல் புத்தகத்தின் வரலாறு என சுவாரஸ்யமான மற்றும் வலி மிகுந்த கட்டுரைகள் உள்ளது. அவசியம் தவற விடக்கூடாத புத்தகம் என்றே சொல்வேன்.
புத்தகம் : கதைகளின் கதை எழுத்தாளர் : சு. வெங்கடேசன் பதிப்பகம் : விகடன் பிரசுரம் பக்கங்கள் : 128 நூலங்காடி: Amazon விலை : 165
🔆 நமது பயன்பாட்டில் இருக்கும்/ மறைந்து போன சில பெயர்கள்/ கருவிகளைப் பற்றிய தேடல் தான் இந்த புத்தகம்.
🔆 புத்தகத்தில் முதல் கட்டுரையை நமக்கு மிகவும் பிரம்மிப்பை கொடுக்கும். வெள்ளையர்களுக்கு எதிரான போரில் தமிழர்கள் பயன்படுத்திய ஒரு முக்கியமான ஆயுதம் தான் வளரி. இதைக் கண்டு பயந்த வெள்ளையர் கூட்டம் போருக்குப் பிறகு எல்லா வளரிகளையும் கைப்பற்றி அழித்தது அப்படி அவர்கள் அழித்த வளரிகளின் எண்ணிக்கை மட்டும் 22,000. ஆஸ்திரேலியாவின் பூர்வ குடிமக்கள் பயன்படுத்திய பூமரங்குக்கு முன்னோடியாக இந்த வளரி பார்க்கப்படுகிறது. இந்த வளரிகள் நமது நாகரிகத்தில் இருந்து அழிந்து விட்டதாக பயப்பட வேண்டாம்.மதுரை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பட்ட சாமி கோயில் நூற்றுக்கணக்கான வளரிகளை வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் நடந்து வருகிறது.
🔆 அடுத்த கட்டுரை நல்லதங்காளும் பென்னிகுவிக்கும். பஞ்சத்தின் காரணமாக தனது குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்ட நல்லதங்காளின் கதை நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அப்போது இருந்த பஞ்சத்தைப் போக்க பென்னிகுக் செய்த வேலைகள், இப்போதும் தென் மாவட்டத்தில் அவருக்கு சிலைகள் இருப்பதை பார்க்க முடியும். நாட்டார் மரபில் பல கதைகள் நல்ல தங்காளை பற்றி இருக்கிறது பஞ்சத்தின் தெய்வமாக நல்ல தங்காள் இருக்கிறாள்.
🔆 பல நல்ல தகவல்களை அறிந்து கொள்ள இந்த புத்தகம் மிகவும்.
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
வீரயுக நாயகன் வேள்பாரி புத்தகத்தை படித்ததில் இருந்து சு.வெங்கடேசன் அவர்களின் எழுத்திற்கு பெரிய ரசிகனாக மாறிப்போன நான் புத்தக கண்காட்சியில் என்ன கதை என்றும் பாராமல் சு.வெங்கடேசன் என்ற பெயருக்காக மட்டுமே வாங்கிய புத்தகம் இது. நான் எடுத்த முடிவு சரி என்பதை இந்த புத்தகத்திலும் இவர் நிரூபித்துவிட்டார்.
ஒரு நல்ல புத்தகம் என்பது வாசகரை புது அனுபவத்திற்கு கொண்டு செல்வதோடு புது விஷயங்களையும் கற்றுத்தரவேண்டும். அப்படி பார்க்கையில் "கதைகளின் கதை" மிக நல்ல புத்தகமாகவே கருதுகிறேன்.
17ம் நூற்றாண்டில் தென்தமிழகத்தில் "வளரி" என்னும் ஆயுதம் வீரத்தின் குறியீடாக இருந்து பின்னர் அது ஆங்கிலேயர்களால் அழித்தொழிக்கப்பட்டு, முற்றிலும் நாம் மறந்த ஒரு கலையின் கதையில் தொடங்கி, கீழடியின் அரசியல், அந்தக் காலத்தின் குற்றங்களும் அதற்கான தண்டனைகளும், தமிழகத்தில் காவலர்களால் கொல்லப்பட்ட முதல் பெண் மாயக்காளின் கதை, புகையிலையின் வரலாறு என பல கதைகளும் அதற்காக இவர் செய்துள்ள கள ஆராய்ச்சிகளும் ஆச்சர்யமூட்டுகிறது.
இந்த புத்தகம் படித்ததில் தெரிந்துகொண்ட ஒன்று, வரலாற்றில் நமக்கு சொல்லப்பட்ட பல கதைகளில் பல உண்மைகள் மறைக்கப்பட்டோ/மறுக்கப்பட்டோ தான் நமக்கு கூறப்பட்டுள்ளன.
கதைகளின் கதை - வெளிப்படையான பொய்களும், ஒளிந்திருக்கும் உண்மைகளும்.
Su Venkatesan never fails to excite and educate. His hard work and field work is well reflected in this Historic/ Anthropological literature. History of unsung common man and things is well articulated in lucid language. Left me with deeper thinking and impressions. Must read one!
The name of the book itself defines what this book talks about. A lot of insights which surprise us in many ways. Be it a small receipt or a cruel incident, Su. Venkatesan never missed to take us back to those periods. For those who are new to reading, it's little difficult to understand and travel with the story.
வழக்கத்தில் உள்ள பல விசயங்களின் வரலாற்றை உணர்த்த்துகிறது.12 கட்டுரைகளை உடைய புத்தகம்.ஒவ்வொரு கட்டுரையும் அறிய தகவல்களை தந்து புருவத்தை உயர்த்த செய்கிறது.தகவல் விட அவருடைய எழுத்து நடை நன்றாக உள்ளது.வளரி,நல்லதங்காள்,மாயக்காள்,போக்கிரி என்று நாம் நினைவிருந்து மறந்தவற்றை பதிவு செய்து உள்ளார்.கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
இந்த நூல் 12 கட்டுரைகளின் தொகுப்பாகும். ஒவ்வொரு கதைக்கு பின்னால் உள்ள வரலாற்றை ஆசிரியர் தெளிவாகவும், வாசிப்பதற்கு எளிமையாகவும் விளக்கியுள்ளார். சுருக்கமாக இந்த நூல் 12வரலாற்று நிகழ்வுகளை கொண்ட நூல் ஆனால் 12 கட்டுரைகளும் நாம் எந்த வரலாற்று புத்தகத்திலும் படித்திருக்க வாய்ப்பில்லை.
Some articles were clear and had more explanation on it. But most of the articles were little bland and uninteresting as usual from this author. Not a must read but can read if you have time to waste.
Nice book with short stories on different topics focussed on human behaviour, anthropology. His research helps us to understand the missing pages in Tamil history