இயற்கையின் பிரம்மாண்டத்தோடு தனி மனித விடுதலையையும் இணைத்துப் பின்னப்பட்டிருக்கும் இந்நாவல், தமிழில் இதுவரை பேசப்பட்டிராத நிலங்களையும் மனிதர்களையும் அவர்களின் தனித்துவமான சிக்கல்களையும் காட்சிப்படுத்த முன் வந்திருக்கிறது.
ஹிப்பிகளும், விளிம்பு நிலை மனிதர்களும் சேர்ந்து உருவாக்கும் இக்கதைவெளியெங்கும் கஞ்சா நெடி விரவிக் கிடக்கிறது. ஒரு புள்ளியில் நிலைபெறாத நாடோடி மனங்களில் உள்ள காமமும், போதையும், கைவிடப்பட்ட அன்பும், கொண்டாட்டமும் வாசிப்போரைக் கனவுத் தன்மைக்குள் தள்ளுகிறது.
அய்யனார் விஸ்வநாத்தின் தனித்துவமான மொழியும் பின் நவீனத்துவக் கதை கூறலும் இந்நாவலின் அலாதியான வாசிப்பின்பத்திற்கு வலு சேர்க்கின்றன.
மாரியோ பர்கஸ் யோசாவைப் படிக்கும் போதெல்லாம் இந்த அளவு சுவாரசியமாகக் கதை சொல்ல தமிழில் யாருமே இல்லையே என்று வருத்தப்படுவேன். இங்கே இலக்கியம் என்றாலே ‘டல்’லாக இருக்க வேண்டும் என்று ஒரு தவறான எண்ணம் இருந்து வருகிறது. அய்யனார் விஸ்வநாத்தைப் படித்த போது அந்த என் எண்ணம் மாறி விட்டது. பிரமாதமான கதைசொல்லி. அதே சமயம் Content-உம் பல உள்ளடுக்குகளைக் கொண்டதாக இருக்கிறது. அய்யனார் வெறும் கதைசொல்லி மட்டும் அல்ல. மீண்டும் மீண்டும் வாசிக்கக் கோருபவை அவர் நாவல்கள். அந்தத் தன்மைதான் பொழுதுபோக்குக் கதைகளுக்கும் இலக்கியத்துக்குமான வித்தியாசம். அய்யனார் விஸ்வநாத்தின் ஹிப்பி நாவலைப் படித்து விட்டேன். அற்புதம். எடுத்தால் கீழே வைக்க முடியாது. நல்லவேளை, அய்யனார் ஏற்கனவே வெளிநாட்டில் இருக்கிறார். இல்லாவிட்டால் கதையின் முடிவுக்காக அவரை நாடு கடத்தியிருப்பார்கள். மிரட்டும் நாவல். இதை உடனடியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும்.
திருவண்ணாமலையைச் சொந்த ஊராகக் கொண்ட அய்யனார் விஸ்வநாத் கவிதை, சிறுகதை மற்றும் நாவல் என புனைவுகளிலும் இலக்கிய விமர்சனங்கள், சினிமாக் கட்டுரைகள் என புனைவல்லா எழுத்திலும் எழுதி வருபவர். மலையாளத் திரைப்படங்களிலும் சர்வதேச மாற்றுத்திரைப்படங்களிலும் திரைக்கதைகளில் பணியாற்றியுள்ளார்.
அய்யனார் விஸ்வநாத் 2007 முதல் தனது வலைப்பதிவுகளில் கவிதைகள், நாவல்கள், ரசனை குறிப்புகள் மற்றும் விமர்சனங்களை எழுதி வருகிறார். அவரது நூல்கள் வம்சி, கிழக்கு, சீரோ டிகிரி ஆகிய பதிப்பகங்களின் மூலம் வெளியாகி உள்ளன. திருவண்ணாமலையை பின்னணியாகக் கொண்டு தொடர் நாவல்களை எழுதுகிறார். மனிதர்களையும் வரலாற்றையும் பிறழ்வுகள் மற்றும் கூறப்படாத களங்கள் வழியாக எழுதும் பின்நவீனத்துவ பாணி எழுத்தாளராக அறியப்படுகிறார்.
அய்யனார் விஸ்வநாத் அவர்களின் கதை சொல்லும் பாங்கு விறுவிறுப்பாகவும்,ஒரே sittingல் படிக்க வைக்கும் அளவுக்கு புதினம் சிறப்பான முறையில் உள்ளது. Forrest Gump படத்தில் கதையின் நாயகி ஒரு கட்டத்தில் ஹிப்பியாக இருப்பார்.எனக்கு அவ்வளவாக தெரியாத ஹிப்பிகளின் வாழ்வியல் மிக அற்புதமான கதையில் உலாவ விட்டிருக்கிறார். இந்நூலை அறிமுகப்படுத்திய Book tag forum சதீஸ்வரனுக்கு என் அன்புகள்.
படிக்கப்படிக்க நானே ஒரு ஹிப்பியாக ஆசைப்பட்டேன். ஆசிரியரின் மொழிநடை சிறப்பாக இருந்தது. போதைப்பொருள் பயன்பாடு, சாமியார்கள் நடத்தும் ஆசிரமம் சார்ந்து இயங்கும் குழுக்களில் அதிகம் என்பதை இந்த நூலில் ஆசிரியர் தெளிவாக விளக்கியுள்ளார். அவசியம் வாசிக்க வேண்டிய நாவல்.
குறுநாவல். தமிழ் இலக்கியத் தளத்தில் புதிய கதைக்களம். அருமையான மொழிநடை. நாவலை வாசித்து முடிக்கையில் ஒரு ஹிப்பியாக வாழ்ந்து முடித்த அனுபவம் நிச்சயம் கிடைக்கும்.
I have travelled solo to some places in India which is frequented by foreigners. There is a place in Hampi called as Hippie island. There are such places in Goa, Gokarna, Varkala, Pondicherry and Tiruvanamalai too. I have interacted with couple of these folks who are traveling for a couple of years continuously. I always envied them and felt some day I will have that courage to do something like that.
This book takes you to one such trip. A camp inside the forest where everything is unlimited. And then there is reality too which you can't escape. A nice read. The book cover art is amazing. Even though the book started in a slower pace, it slowly picked pace and I finished it in a single sitting.
இக்கதையின் போக்கு மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது மிகவும் சுதந்திரமாக உணர முடிந்தது Ari Aster-இன் midsommar படத்தில் வரும் அந்த நீளமான சமவெளியை கதை நடக்கும் சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அதிக ஈடுபாட்டுடன் வாசிக்க முடிந்தது, இந்த கதைக்கும் அந்த படத்திற்கும் ஒற்றுமை இல்லை என்றாலும் அந்த படத்தின் கதைக்களம் இந்த நாவலில் உணர முடிந்தது. Satisfying-ஆன enjoyable reading-ஆக இருந்தது.
கதையின் முடிவும் நன்றாகவே இருந்தது. இசையுடனும், போதையுடனும், இயற்கையுடனும் நாமும் பிணைந்திருப்போம் வாசிக்கையில்...
புத்தகத்தின் பெயர் : ஹிப்பி எழுத்தாளரின் பெயர் : அய்யனார் விஸ்வநாத் @ayyanarviswanath பதிப்பகத்தின் பெயர் : எழுத்து பிரசுரம் பக்கங்கள் : 120 🔅 எனக்கு இந்த எழுத்தாளரை அறிமுகப்படுத்தி இந்த புத்தகம் என்னுடைய புத்தக அரங்கில் இடம் பெற காரணமாயிருந்த நண்பர் @iamsatheeshwaran நன்றி. 🔅 எழுத்தாளர் தனது சொந்த ஊரில் இருக்க முடியாத காரணத்தால், அவரது படைப்பு திருவண்ணாமலையில் இருந்து தொடங்குகிறது . 🔅 தன் தாயை இழந்து பிறகு , கல்லூரி படிப்பில் நாட்டம் இல்லாமல் இருக்கும் ஒருவன், ஆட்டோ ஓட்டுனராக தன் வாழ்க்கையைத் தொடங்குகிறான். அவனுக்கு அறிமுகமான வெள்ளைக்காரர்களுடன் ஜவ்வாது மலைக்கு செல்கிறான். 🔅அங்கே அவனுக்கும் நமக்குமான ஹிப்பி பயணம் தொடங்குகிறது. 🔅அங்கே நடந்த சம்பவங்கள் , ஜோன், மீரா, நிவேதா, மேக் இவர்கள் யார் ? அலமேலு இவன் வாழ்வில் வந்தது எப்படி ? என்பது மீதி பக்கத்தில் காண்பீர்கள் . 🔅 ஒரு ஹிப்பியாக முழுமையாக வாழ்ந்த அனுபவத்தைக் கொடுத்தது . 💥 எழுத்தாளரின் மற்ற படைப்புகளை வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிய புத்தகம், எழுத்தாளருக்கு எனது வாழ்த்துகள்.
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி . Happy reading …..
நான் இந்த உலகில் வாழ எந்த காரணமும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருப்பவன். எதர்ச்சையாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கிடைக்கும் வெள்ளைக்காரர்கள் உடனான நட்பு. அவர்களுடனான மலைப் பயணம். அவர்களுடன் சேர்ந்து ஹிப்பி மன நிலையை அடைந்து மறுபடியும் தன் இருப்பிடத்திற்கே திரும்புவது என்று ஒருவனின் மனநிலையில் பயணமாக எழுதி இருக்கிறார்.
மிக சுவாரஸ்யமான விருவிருப்பானமொழி நடையில் எழுதப்பட்டிருக்கும் நாவல் . சமீபமாக வாசித்த நாவல்களில் மிகவும் புத்துணர்ச்சியாக இருந்தது.
அய்யனார் விஸ்வநாதனின் ஓரிதழ்ப்பூ மற்றும் பசி நாவல்களும் தமிழ் புதினங்களில் ஒரு சிறப்பான முயற்சி. இந்த நாவலுக்கும் ஓரிதழ் பூவுக்கும் தொடர்புள்ளது, ஓரிதழ்ப்பூ வாசிக்கப்பட வேண்டிய நாவல்.
இந்த நாவலை அறிமுகப்படுத்தி படிக்கத் தூண்டிய Book Tag Fourm Youtube channel https://youtu.be/2-8vVvk2wUY அவர்களுக்கு நன்றி .
தமிழ் புனைவுலகில் புதுமையான கதைக்களம். சுவாரஸ்யமான கதை சொல்லல் முறை. நிலம், நீர், தாவரங்கள் என இயற்கையின் ஒவ்வொரு அங்கத்தையும், இசையையும் வார்த்தைகளின் வழியே வாசகனை உணர வைத்து விடுவது சிறப்பு. வாசித்து முடிக்கும் போது ஹிப்பியாய் வாழ்ந்து விட்ட ஒரு துண்டு நினைவும், சொற்களால் விவரிக்க இயலாத ஒரு மெல்லிய துயரும் எஞ்சி நிற்கின்றன.
ஹிப்பி இவ்வாறு ஒரு வகை மனிதர்கள் இங்கே இருக்கிறார்கள் என்பதே இந்த புத்தக வாயிலாக தான் நான் அறிந்து கொண்டேன்!! எல்லைகள் அற்ற நிலையில் இருக்கும் வாழ்வு!! நான் என்னை இந்த கட்டமைப்புக்குள் இருக்க வேண்டும் என்ற எந்த ஒரு கோடுபடுகள் இல்லாமல் வாழ்.. ஹிப்பி உடைய வாழ்க்கை எதார்த்த வாழ்வோடு கலந்து சொன்ன நாவல்!! திருவண்ணாமலை, பஸ் டிப்போ, மாரியம்மன் கோவில் தெரு, ஜவ்வாது மலை.. நம்மை அந்த எதார்த்த உலகம் கொள்ளும்!! அய்யனார் விஸ்வநாதன்!! நன்றி இந்த நாவல் தந்த வாசிப்பு அருமை!!
மிகவும் சுவாரசியமான கதை சொல்லல். ஹிப்பிகளின் வாழ்க்கை முறையை இயற்கையோடும் மனித வாழ்க்கையோடும் அழகாக சொல்கிறார். இரு வேறு பகுதிகளாக நகரும் கதை ஒரே இடத்தில் சேரும் விதம் நான் சற்றும் எதிர்பார்த்திராதது. ஒரே தடவையில் வாசித்து முடிக்கும் அளவிற்கு மிகவும் சிறப்பான, தனித்தன்மையான எழுத்து.
இந்த வருடத்தின் முதல் நாவல் ஓரே மூச்சில் படித்து முடித்துவிடும்படியான ஒரு எழுத்து நடை கதையும் கதைகலமும் இதுவரை தமிழ் இலக்கியங்களில் இல்லாத அளவு புதிதான ஒன்று...
முதலில் இந்த ஹிப்பிக்களைப்பற்றி சொல்வதென்றால்
"ஹிப்பி என்பது அமெரிக்காவில் 1960 களில் தோற்றங்கண்ட ஓர் எதிர்ப் பண்பாட்டு வாழ்வுமுறையைக் குறிக்கின்றது. 1960 களில் விடுதலை மனப்பாங்குடன், பெரும்பாலும் மைய அதிகார பண்பாட்டுப் போக்குகளுக்கு எதிரான நிலைப்பாடுகளுடன், அக்கால மாணவர்கள், இளையோர் மத்தியில் இடம்பெற்ற பல்வேறு தேடல்களின் வெளிப்பாடாக அமைந்தது.
Singer of a modern Hippie movement in Russia தலைமயிரை நீளமாக வளர்த்தல், போதைப் பொருட்களை நுகர்தல், வீடுகளை விட்டுவிட்டு ஒருவித நாடோடி வாழ்க்கை வாழ்தல், சமூக குடிமங்களை அமைத்தல் போன்றவை குறிப்பிடத்தக்க ஹிப்பிக்களின் போக்குகள் ஆகும்."
கதையில் இந்த ஹிப்பி குழுக்களுடன் நம்ம கதையின் ஹீரோ எப்படி போய் சேர்கிறான் அங்கு அவன் அவர்களுடன் எப்படிபடியான புரிதலை உள்வாங்குகிறான் என்பதெல்லாம் நாவலில் மிகவும் சுவாரஸ்யம் மிக்கதாக நம்மை நம் இருப்பை பற்றி புரிந்து கொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்டிருப்பது பிரம்மிக்க தக்கது...
கதை இரு வேறு கதைகளாக தொடர்ந்து ஒன்றில் முடிகிறது...
அலமேலு,கன்னியம்மா,மாரியம்மா,ஜோன்,மெக், போன்ற கதாபாத்திரங்களுடன் நாமும் பினைந்திருப்போம் வாசிக்கையில்....
முக்கியமாக ஆசிரியர் நாவலில் தொட்ட இசை குறிப்புகள்,உபயோகித்த வார்த்தைகள் வர்ணனைகள் இவையெல்லாம் நாவலை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்கிறது...
நிச்சயமாக அனைவருமே வாசிக்க வேண்டிய ஒரு நாவல்
நன்றி.. எழுத்தார் #அய்யனார்_விஸ்வநாத்
This entire review has been hidden because of spoilers.
வாழ்க்கை ஒருவனை துரத்திக்கொண்டே இருக்கிறது. ஓடிக்கொண்டே இருந்த அவனுக்கு அனைத்து வகையான இன்பமும் ஒரு சேர கிடைக்க பெற்று..தீடீர் என்று ஒரு நாள் புடுங்கப்படுகிறது.. வாழ்வில் முக்கியமானவர்கள் இறப்பிற்கு பின்னர் தான் வாழ்வதற்கு ஒரு காரணமும் இல்லை என்று கருத்துபவனின் கதை... இரண்டு தனி கதையை கடைசியில் ஒன்று சேர்த்து முடித்தது அற்புதம்...மிகவும் மாறுபட்ட கதை. ✌️ hippie போல் வாழ்ந்த ஒரு அனுபவத்தை நிச்சயம் பெறுவீர்கள்.... அறிமுக படுத்திய booktag forum youtube channel ku nandri..https://youtu.be/2-8vVvk2wUY
இருவேறு மனிதர்களின் வாழ்க்கையும் பல அனுபவங்களை சந்தித்து பின் தெளிவடைந்து ஒன்று சேர்கிறது..! ஹிப்பி எனும் சொல்லும், நடைமுறைகளும் படிப்பவர்களுக்கு புதிதாக இருக்கும். ஆயினும் ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்க்கையில் சந்திக்கும், சந்திக்க வேண்டி இருக்கும் காதல், காமம், இழப்பு, துறப்பு என அனைத்தையும் கூறி ஹிப்பியுடன் சில நேரம் கரைய வைக்கிறது.
புத்தகம் : ஹிப்பி எழுத்தாளர் : திரு. அய்யனார் விஸ்வநாத்
Amazing Writing Style...Sometimes We Worry About The Wrong Decision...But Its The Best Time Given To Understand Our-self When People Around Us Leave. No Matter Whatever The Situation Is , Life Always Has Different Moves.
இந்த உலகின் சமூகத்தின் அழுத்தங்களுக்கும் / பொறுப்புக்களுக்கும் மத்தியில் இருந்து வளர்ந்த தனி மனிதன்… இவை அனைத்தையும் துறந்து பொது சமூக கட்டுப்பாடுகளின்றி மனம் சொல்வதை மட்டும் கேட்டு அதன் போல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஹிப்பிகளின் மத்தியில், அந்த ஒருவன் பயணிக்கப்பட்டால் அவனுடைய உணர்வுகளும் செயல்களும் மனநிலையும் எவ்வாறு மாற்றங்கொள்ளும் என்பதே இந்த ஹிப்பி…
ஹிப்பிகளின் உலகத்தை எனக்கு அறிமுகம் செய்த அய்யனார் விஸ்வநாத்-க்கு நன்றி
கதை நாயகன் ஹிப்பிகளுடன் இனைத்து பயணம் செய்யும் போது நானும் அந்த பயணத்தின் மூல்கினேன்... காமம் பற்றிய இனிமையான அனுபவத்தை தந்த ஆசிரியர்கு பாராட்டுகள்... எளிய உரைநடை.. 3 நாட்களில் படித்த புத்தகம்..