ஐ-போன் (i-Phone) போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்களைத் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனம் ஆப்பிள் (Apple) ஆகும். இதன் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs). இவர் தகவல் தொழில்நுட்பத்தை ஒவ்வோர் அமெரிக்கரின் உள்ளங்கையிலும் சேர்த்த பெருமைக்கு உரியவர். "மூன்று ஆப்பிள்கள் முக்கியமானவை. முதல் ஆப்பிள் ஏவாள் உண்டது. இரண்டாவது ஆப்பிள் நியூட்டனின் சிந்தனையைத் தூண்டியது. மூன்றாவது ஆப்பிள் மனித சமூகம் அனைத்தையும் வசீகரித்தது" - என்று உலகில் பேசப்படுகிறது. இதில் மூன்றாவது ஆப்பிள், “ஆப்பிள்” நிறுவனத்தைக் குறிக்கிறது.