கிருஷ்ண பகவான் நமக்கு அளித்த ஒரு மாபெரும் அற்புத புனித நூல் பகவத்கீதை ஆகும். கிருஷ்ணர், அர்ஜுனனுக்கு அறிவுரைகளை கூறுவது போல, இந்த உலகத்திற்கே உபதேசம் செய்கிறார். உயிரினங்களின் பிறப்பு, இறப்பு, இன்பம், துன்பம், மனிதன் பின்பற்ற வேண்டிய கடமைகள், நீதி, நேர்மை, தர்மம், கடவுள் வழிபாடு, போன்றவற்றையும், விருப்பு, வெறுப்பு, பேராசை மனிதனின் பல வித குணங்கள் முதலிய பல விஷயங்களைப் பற்றி கிருஷ்ணர் தெளிவாக கூறுகிறார். ஒரு மனிதன் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால், அந்த மனிதனின் மனதை அவன் வெற்றி கொள்ள வேண்டும். மனிதனின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் மன தடுமாற்றம் ஆகும். இந்த மனத்தடுமாற்றத்தை ஒழித்து வாழ்க்கையில் எவ்வாறு வெற்றிகளை அடைய வேண்டும் என்று கிருஷ்ணர் பல வ