ஜனவரி 2019ல் அச்சில் வெளியான இந்தக் கட்டுரைத் தொகுப்பு இப்போது Extended Kindle Version எனும் சிறப்பு டிஜிட்டல் பதிப்பாக வெளிவந்திருக்கிறது. அரசியல், தமிழக வரலாறு, சினிமா, சமகால அரசியல், தேர்தல், தலைவர்கள், நுண்ணரசியல் எனப் பலவற்றைப் பேசும் இந்நூலின் அச்சுப் பதிப்பில் இல்லாத புதிய கட்டுரைகளோடு இந்த ’நீட்டிக்கப்பட்ட பிரத்யேகப் பதிப்பு’ வெளிவந்திருக்கிறது. இந்நூலுக்கு சுபவீ அவர்கள் அளித்திருக்கும் அணிந்துரையில் சிறுபகுதி கீழே, ”2012 தொடங்கி இன்றுவரையிலான எட்டு ஆண்டுகளில் தான் எழுதிய 32 கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலாக்கியுள்ளார், நண்பர் டான் அசோக். இந்நூலின் நடை என்பது நவீனமானது என்று சொல்ல வேண்டும். வெகு மக்களை விட்டு விலகாமல், அங்கங்கே திரைப்பட எடுத்துக்காட்டு