கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் எனும் ஊரில் 1965ஆம் ஆண்டில் பிறந்தவர். மதுரை சட்டக் கல்லூரியில் 1983 ஆண்டு முதல் 1988 ஆண்டு வரை ஐந்தாண்டு இளங்கலை சட்டமும், சொத்துரிமைச் சட்டத்தில் முதுகலை சட்டமும் பயின்று பின்னர் தற்போதைய இந்திய தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கட்ரமணியுடன் உச்சநீதிமன்றத்தில் ஏழு ஆண்டுகள் பயிற்சி பெற்று, அதன்பின் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஏழு ஆண்டுகள் பயிற்சிக்குப் பின், மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராகப் பயிற்சி செய்கிறார்.
2023 முதல் மாதத்திலிருந்து சீனியர் வழக்கறிஞராக மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டார். மேற்கு வங்காளம் ஹூப்ளி மாவட்ட ஆட்சியரான துணைவியார் ஸ்ரீபிரியா ஐ.ஏ.ஏஸ். அவர்கள் மறைவிற்குப் பின் மருத்துவக் கல்லூரி மாணவரான மகன் அகிலன் ராய், சட்டப்பட்டதாரி மகள் கயல் ராய் ஆகியோருடன் மதுரை, புது தாமரைப்பட்டியில் வசிக்கிறார்.
The book is much need to shed light on the forgotten history of Nadar people. The false pride and doctored history of Nadar community is acting against their own interests. Yet the people are gullible enough to accept these pseudo-histories as they can't handle real history. Lajapathi Roy has unearthed many historical documents from court proceedings to long forgotten magazines in British archives to make light shine on the raw truth. Hats off!
The book has some repetitive section which could have consolidated in appendix. Also there are some spelling mistakes and oddly formed sentences. They could have corrected it in third edition at least.
வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட சமூகம் எப்படி இருந்து என்று எழுதுவது தவறில்லை. என்னமாதிரியான ஒடுக்கு முறையில் இருந்தனர் என்பதை வழக்குகள் மூலமும், வாய்மொழி வரலாறு மூலமும் சொல்லி இருக்கிறார். ஆனால் கடைசியில் இப்படியாபட்ட நீ இப்படி செய்யலாமா என்று ஒற்றை வசனத்தில் வில்லனை திருத்தும் நாயகன் போல எழுதி இருக்கிறார். எப்படி இந்துத்துவம் அவர்கள் மத்தியில் வந்து என்று ஒரு விளக்கமும் இல்லை. அதிலும் வளர்ந்த அல்லது வளர போகும் எல்லா சாதியும் இப்படித்தான் போகும் என்று ஒரு வரியில் சொல்ல வேண்டியதை citizen பட அஜித் போல் எல்லா சாதி பெயரையும் 5 பக்கத்துக்கு எழுதி வைத்து இருக்கிறார்.
"கறைபடாத உண்மை வரலாற்றை நினைவு கூர்ந்தார்வதன் மூலம் மட்டுமே அதே வரலாறு மீண்டும் நிகழாதிருக்கவும், வரலாற்று வன்முறைகளில் இருந்து புதிய தலைமுறையினரைக் காப்பாற்றவும் இயலும்." அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.