அன்பு நெஞ்சங்களுக்கு, நான் உங்கள் ரியா மூர்த்தி, காதலில் கரைந்திட வா என்னுடைய முதல் நாவல். இக்கதையில் காதலெனும் போதையை அள்ளித்தர வருகின்றான் உங்களின் ஆட்ட நாயகன் ஆரவ். உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்குமா? அப்படி என்றால் நிச்சயமாக இந்த கதையையும் ரொம்ப பிடிக்கும். எதிரிகளால் கடத்தப்படும் ஒரு கூல் கேப்டன் தப்பிச்செல்லும் வழியில் பொக்கிஷமாக கிடைக்கிறாள் பெண் ஒருத்தி. தன் அறிவுத்திறன் மூலமாக தன் உயிரையும் தன்னால் ஆபத்தை அடைந்த அவள் உயிரையும் காப்பாற்றுகிறான் நாயகன் ஆரவ். ஆனால் ஆட்டமே அதன் பிறகுதான் ஆரம்பிக்கிறது. நொடிக்கு நொடி விறுவிறுப்பும் காதலும் போட்டி போட்டுக்கொண்டு முன்னேற, நாயகன் காதலியின் கரம் பற்றுவானா என்று காண வாருங்கள்.
excellent story with suspense,love and fight chasing... its a very first story of this author... really this story swallow us once we start to read... everyone get ready to enter into cricket man love.....