ஜெயலலிதா பேசுகிறார்…….. “என் அப்பா மட்டும், தாத்தா சேர்த்துவைத்திருந்த செல்வத்தைச் சரியாக நிர்வகித்திருந்தால்... நிச்சயம் என் வாழ்வில் பல துயரங்களை அனுபவித்திருக்க மாட்டேன்”. ‘‘நான் பல நரகங்களைத் தாண்டித்தான் இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன்’’ "நான் பதவியை, செல்வத்தை விரும்புபவள் அல்ல. பதவியை அடைய நான் திருட்டுத்தனமாக எதுவும் செய்யமாட்டேன். ஆனால், அதே நேரம் என்னை நோக்கி பொறுப்பும், கடமையும் வந்தால், நான் பின்வாங்கமாட்டேன். அதை என் தோள்களில் சுமப்பேன்" 1988-ம் ஆண்டு. “என் மீதான விசுவாசத்தின் காரணமாகவே, மற்றவர்களால் மிகத்தவறாகச் சித்தரிக்கப் பட்ட, புரிந்துகொள்ளப்பட்ட ஒரு பெண் சசிகலா. எனக்காக அவர் மிகச் சிரமப்பட்டிருக்கிறார்.