சில கதைகள் எழுதியிருக்கிறேன். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள். முதல் சிறுகதை அலுவலக வலைப்பூவில் இருந்த ஒரு சிறுகதைப்போட்டிக்காக எழுதப்பட்டது. தொடர்ந்து அப்போட்டி நிகழும் மூன்று மாத இடைவெளிகளில் ஒவ்வொருமுறையும் கலந்து கொள்வேன். எதிலும் வென்றதில்லை. ஆனாலும் முன்கதைகள் எழுதும் சோம்பேறித்தனங்களும், பின்கதைகளுக்காக விட்டுச்செல்லும் இடைவெளியின்றி எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். பிறகு இணைய இதழ்கள். பிறகு வார இதழ்கள். பெரும்பாலும் நண்பர்கள். அவர்கள் கேட்டபிறகு எழுதத்தொடங்கி, அவர்களுக்குத் தேவையில்லாத நேரத்தில் முடித்து, இந்தக்கதைகள் சில வெளியாகியிருக்கின்றன. பல வெளியாகவில்லை. இலக்கிய இதழ்களில் நண்பர்கள் இல்லை. ஆக அந்த இடங்களில் எனக்கும் வேலைய