ஜோதி கணேசனின் எழுத்து நடை எளிமையாகவும், சுவாரசியமாகவும் இருக்கும். (மற்றவர்களின்) அந்தரங்கம் கேட்பதற்கும்/படிப்பதற்கும் சுவாரசியமாகயிருக்கும், அதுவும் ஜோதிஜி எழுத்தில் இரட்டிப்பு சுவையாயிருக்கும். ஆரம்பமே, பாலுமகேந்திராவின் கதாநாயகி போலிருக்கும் நாகமணி அவர்களின் சுவரில்லாத சித்திரங்களின் கதை (நன்றி:K.பாக்கியராஜ்). அதில் நாகமணி, அவரது அம்மாவை கடலளவு நேசித்து பின்னர் மலையளவு வெறுத்தது (நன்றி: நா.முத்துகுமார்) முக்கிய கருவாயிருந்தாலும், இடையிடையே ஆசிரியர் கூற்றாக ஜோதிஜி சொல்லும் செய்திகள், அருமையான வாழ்வியல் உண்மைகள். உதாரணமாக, “இரு நபர்களை ஒன்று சேர்க்க ஓராயிரம் காரணங்கள் இருக்கலாம்... திரைப்படம், பாடல்கள், ...