அன்பில் சிறந்தவர்களே, தூவல் (பேனா) தூறல் என்னுடைய முதல் கவிதை தொகுப்பாகும். மழைத்தூறலை போல் என் மனதிற்கு தோன்றிய கருத்துக்களை ஆங்காங்கே முத்தாய்ப்பாக பதித்திருக்கிறேன். அத்துளிகள் சிப்பிக்குள் முத்தாய் மாறுவதை போலவும், மலருக்குள் மதுவாய் மாறுவதை போலவும், உங்கள் மனதிற்குள் மனோகரமாய் நிலைத்திருக்க வேண்டும் என்பதே என் அவா. எனக்கு தொடர்ந்து ஊக்கமும், ஏற்றமும் அளித்து வரும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏