பித்ரு என்றால் யார்? பித்ரு என்றால் இறந்து விட்ட - இறைவனின் திருவடி அடைந்து விட்ட நம் முன்னோர்களைத் தான் பித்ருக்கள் என்று கூறுகிறார்கள். நாம் பித்ரு பூசை என்னும் வழிபாட்டினை முறையாகச் செய்ய வேண்டும். முன்னோர் கடனை அடைக்க வேண்டும். அவர்கள் மூலமாக இயற்கைக்கு பட்ட கடனை அடைக்க வேண்டும். அப்படிச் செய்தால் நம்முடைய குலம் தழைத்தோங்கும். எதிரிகளின் தொல்லை நீங்கும். பிணிகள் வராது. வந்தாலும் விரைவில் நீங்கும். புகழ், நீண்ட நாள் வாழ்வு, நல்ல மகப்பேறு, வீடு-வாகன வசதி, பதவி உயர்வு, இறுதியில் வீடு பேறு தானாக தேடி வரும். குடும்பம் தழைத்தோங்கும். இதை நாம் படித்தால் மட்டும் போதாது. வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்.