எதிர் எதிர் குணங்கள் ஒன்றை நோக்கி மற்றொன்றை ஈர்க்கும் என்றாலும் அதைத் தக்கவைக்க ஏதோ ஒன்றின் ஆழம் தேவைப்படுகிறது.
தாழ்வுமனப்பான்மையே பல மனத் தடைகளை உருவாக்கி அச்சூழலில் இருந்து வெளி வர முடியாமல் ஓர் இணைப்பை உண்டாக்கிவிடுகிறது.
காலில் சிறுகுறைபாடுள்ள திஷானியை விரும்பி மணக்கும் அபினவ் அவளின் மனதில் இருக்கும் சஞ்சலத்தைக் களைய நேரத்தையும் வழங்குகிறான்.இத்திருமண உறவு எதை நோக்கி நகரப்போகுது என்ற ஆழ்மன பயத்தில் இருக்கும் திஷானியின் சந்தேகத்தை வாழும் சூழலின் மூலமே நிவர்த்திச் செய்யும் கணவனால் பயங்கள் அனைத்தும் உள்ளுக்குள்ளே அமிழ்ந்து போகிறது.
பேசி பேசியே பக்கங்கள் போகுது வாசிப்பவர்களுக்கான காட்சியமைப்பின் கட்டமைப்புக்கு உண்டான வார்த்தைகள் கதையில் ஒரு சின்ன இடத்தில் கூடக் காணப்படவில்லை.