Jump to ratings and reviews
Rate this book

நைவேத்யம்

Rate this book
நைவேத்யம் பூமனியின் மற்றுமொரு மண்வாசனை நிறைந்த நாவல்.கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் வாசகர்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை தமிழ்ச் சிறுகதைகளுக்கும் நாவல்களுக்கும் சொந்த முகம் கொடுத்தவர்கள் என்று சிலரை வரிசைப்படுத்தினால் அதில் பூமணிக்கும் இடமுண்டு ,மொழிவளம் நிறைந்த இவரது புனைவுகளில் மண்மீதான ரசனையும் பிரியமும் அமுங்கி அடித்தட்டு மக்களின் குரல்கள் ஓங்கியோலிப்பதைக் கேட்கலாம். கரிசல் மக்களின் வாழ்க்கையை நுட்பமாக தனது படைப்புகளில் பதிவு செய்தவர் எழுத்தாளர் பூமணி. யதார்த்த வாழ்வின் நெருக்கடிகளை இயல்பான மொழியில் பேசுபவை இவருடைய எழுத்துக்கள்

160 pages, Paperback

Published December 1, 2017

2 people are currently reading
19 people want to read

About the author

Poomani

11 books154 followers
From Wikipedia:

Poomani (Tamil: பூமணி) (born 1947) is a Sahithya Academy Winning Tamil writer from Kovilpatti in the south Indian state of Tamil Nadu.He won Sahithya Academy Award for his novel Agnaadi in 2014.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (16%)
4 stars
9 (75%)
3 stars
1 (8%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Arun Datchan.
63 reviews14 followers
January 8, 2025
அக்ரஹாரத்தின் கதையை நான் இந்த நோக்கில் இதுவரை கண்டதோ, கேட்டதோ இல்லை. ஆனால் இப்படி மனிதர்கள் இருந்திருப்பார்கள் என்று உணர முடிகிறது. பூமணி ஐயாவை படிக்கும் போதெல்லாம், வரலாற்றில் மறக்கப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையும் அவர்களின் பாடுகளும் நம்மால் இப்போதும் உணர முடிகிறது.
Profile Image for Nagarajan.
76 reviews23 followers
August 27, 2020
yet another classic from Poomani. True and authentic to its roots, he re-creates the Agrahara in front of us, the characters and their life. It is equally interesting yet informative on life and changes happening over the period as to how Agrahara looses its charm and new people come-in. The interesting adult relationship between Seetha & Sankaraiyar is fresh and adds life to the story. Talks about the structure and construction of village, Agrahara and how Thalayari moves across these 2 factions. Interesting read.
14 reviews
April 21, 2021
பூமணியின் மண் வாசம் நிறைந்த நாவல்.
பஞ்சத்தால் பாதிக்கப்படும் கிராமத்தில் உள்ள கோவில் அய்யரின் கதை .
வாசிக்கும் போது பெரும்பாலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் மோசமாக இல்லை.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Dhanaraj Rajan.
533 reviews363 followers
January 25, 2025
ஒரு அக்ரஹாரத்தின் கதை.
இன்னும் சரியாகச் சொன்னால் ஒரு அக்ரஹாரம் எப்படி சிதைந்து போகிறது என்பதைச் சொல்லும் கதை.

அக்ரஹாரத்தில் உள்ள பிராமணர்களுக்கு வயல் நிலங்கள் உள்ளன. அவற்றை விவ்சாயம் செய்ய மற்ற குடியானவர்கள் பக்கத்து ஊரில் இருக்கிறார்கள். அறுவடை நேரத்தில் வயலுக்குச் சொந்தமான பிராமணர்களுக்கு கொடுக்க வேன்டிய பங்கைக் கொடுத்துவிட்டு அவர்களுக்குறிய கூலியையும் பெற்றுக் கொள்கிறார்கள்.

பஞ்சம் வராத வரை எல்லாம் நன்றாகவே நடக்கிறது. மழை பொய்க்கிறது. பஞ்சம் ஆரம்பிக்கிறது. எல்லாம் மாறி விடுகிறது. வயலில் விவசாயம் இல்லை. பிராமணர்கள் தங்களுக்குறிய நெல் வராததால் பசியின் கொடுமைக்கு ஆளாகிறார்கள்.
தங்களது நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்குகிறார்கள். நிலத்தை இழக்கிறார்கள். பிழைக்க வழி தேடி வேறு ஊருக்கு பயணப்படுகிறார்கள். அக்ரஹாரம் மெதுவாக சிதைந்து போகிறது.

ஒரு பொற்காலம் சிதைந்து போகிறது என்ற நோக்கில் இக்கதை எழுதப்பட்டுள்ளது. அந்த மான்ய நிலங்கள் எவ்வாறு பிராமணர்களுக்கு சொந்தமானது என்பதைப் பற்றிய குறிப்பு இல்லை.
குடியானவர்கள் பிராமணர்களை 'சாமி, சாமி' என்று அழைப்பதைப் பற்றி ஒரு விமர்சனம் இல்லை. அன்றைய காலத்தில் அவ்வாறுதான் இருந்தது என்பதாக கூறி அதையும் நியாயப்படுத்தலாம்.

வாசிப்பவர்களுக்கு இப்படி ஆகி விட்டதே என்று பதைபதைப்பு வருமாறு எழுதி இருக்கிறார் பூமணி. அந்த வகையில் எழுத்தின் வலிமை தெரிந்தவர்தான் பூமணி.

வாசித்துப் பாருங்கள்.
ஒரு சில கதாபாத்திரங்கள் மனதில் கனத்தை ஏற்படுத்தத்தான் செய்கின்றன.
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.