இமையம் (Imayam, nom de plume of Ve. Annamalai), என்ற புனைப்பெயரில் எழுதும் வெ. அண்ணாமலை நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர். இமையம் முதுகலைப் பட்டம் பெற்றுப் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தனது முதல் புதினமான கோவேறு கழுதைகள் மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானார். இவர் எழுதிய செல்லாத பணம் என்ற புதினத்திற்கு 2020-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. எனினும் இராசு கௌதமன் போன்ற தலித் சமூக அறிஞர்கள் தலித்து சமூகத்தின் அவலநிலைகளை மட்டுமே முன்னிறுத்துவதாகவும் மேல் சாதியினர் புகழக்கூடிய வகையானதாகவும் இப்புதினம் உள்ளதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.
He is also the recipient of the Agni Aksra Award, the Tamil Nadu Progressive Writers Association Award, the N.L.C. Award, and the Thamizh Thendral Thiru.V.Ka. Award, among others, and has been honored by the governments of Kerala, TamilNadu and India.
கீழ் சாதிக்காரன் மாடு பந்தயத்துல செயிச்சுப் புட்டதால அவனையும் அவன் மாட்டையும் இந்த ஊர் பெரிய சாதிக்காரனுங்க குத்தி கொண்ணுபுட்டாங்க(நன்மாறன் கோட்டைக் கதை), கீழ் சாதிக்காரன் பொணத்த அதிகாரி தூக்க சொல்ல, அத தூக்குன மேல் சாதி போலீஸ் ஒருத்தன் அவமானம் தாங்காம வேலையில ரிசைன் பண்ணிட்டான்(போலிஸ்), அஞ்சு வயசுல ஆரம்பமான காதல அம்பது வயசுல செட்டியார் பணியாரக்காரம்மா கிட்ட சொன்னாரு(பணியாரக்காரம்மா), நான் அமைச்சாரகனும்னா உங்க தொகுதியில நிக்கிற எங்க கட்ச்சிகாரன் தோக்கனும் நம்மாளுங்க பாத்து பண்ணுங்க(நம்பாளு), நிலத்த அடமானம் வச்சு வாங்குன நக காணம போச்சு அத கண்டுபுடுச்சு கொடு சாமி(பிராது மனு), கூத்தியாவ கூட்டிக்கிட்டு சுத்தறான் எம் பிரிசன் கோட்டா என்ன தெருவுல போட்டு அடிக்கிறான் அத்துவுட்டுங்க(தலைக்கடன்), கட்டிடத்தல வேல பாக்கும் சித்தாள் சாந்தாவ ஆச நாயகியாக்கிக்க ஆசப்படுவனுக்கு சித்தாள் சாந்தா சொல்லும் முடிவு (சாந்தா), வேல செய்யிற இடத்தில மாதவிடாய் வந்த புள்ள பஸ்ல ஏறி வூடு போரதுக்குள்ள பஸ்ல நடக்கும் பிரச்சன(ஆலடி பஸ்), கட்சியின் உண்மயான சீனியர் & விசுவாசி, கையில் காசு பணமில்லாதவர். ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சீட்டு கேட்க்க காசு இருக்கவனுக்கு தான் தேர்தல்ல நிக்க சீட்டு தர சொல்லிருக்காங்க இல்லாதவனுக்கு இல்ல (கட்சிக்காரன்). இந்த 9கதகளின் தொகுப்பு நன்மாறன் கோட்டை கதை புத்தகம் -கலைச்செல்வன் செல்வராஜ்.
9 சிறுகதைகள் சாதிய அடுக்குகளின் அவலத்தைக் கூறும் நன்மாறன் கோட்டைக் கதையே நூலின் தலைப்பு. மிராண்டோடிய மாடு போட்டியில் பெற்ற வெற்றி தாங்காமல் உரிமையாளரின் சாதி கண்டு மாட்டையும் அவரையும் குத்திக் கொல்கிற சமூகம் இன்றும் நம்மிடையே இருக்கிறது என்பதே உண்மை. கீழ்சாதி பிணத்தைத் தூக்க வைத்து விட்டதற்காகப் போலீஸ் வேலையை விடத் துடிக்கும் மேல்சாதி எனக் கூறிக்கொள்ளும் ஒருவன், அவனுக்கு அறிவுரை சொல்லும் இடத்தில், போலீஸ் வேலை தரும் பணமும் அதிகாரமும் பற்றியும் மெல்ல ஊசி ஏற்றும் தொனியில் கூறுகிறார் ஆசிரியர். வேலை இடத்திலும் அதற்காக எத்தனை சிரமங்களுக்கிடையே தினமும் பயணிக்கும் பெண்கள் அங்கேயும் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்படுவது.. ஆண் எத்தனை பெரிய தவறு செய்திருப்பினும், அதை ஊர் நாட்டமைகள் ஆகிய பிற ஆண்களிடம் கொண்டு போய் நியாயம் கேட்பது மட்டுமே அந்த பெண்ணின் மனைவியின் பதிவிரதா தர்மம் என்பதும், மீறி பெண் போலீசிடம் சென்றவள் வாங்கும் பெயரும், அவள் அளவில் அவனுக்குத் தரும் தண்டனையும் ஆணாதிக்க சமூக அவலம் தோலுரிக்க படும் இடம். அரசியல் வாழ்வில் கட்சிப் பணிக்காகவே வாழ்வை அர்ப்பணிக்கும் ஒருவர் பணம் காரணமாக அற்பமாக்கப்டும் நிதர்சனம்..
#இமையம் அண்ணாமலை அவர்களின் சொற்கள் வழி சமூகத்தின் சுரண்டல்கள் வெளிப்படும் அருமையான படைப்பு. 4/5
This entire review has been hidden because of spoilers.