ஒவ்வொரு மனிதனுக்கும் இரு குணங்கள் உண்டு என்பதைப் புரிந்து கொள்ளாதவர்கள் தனக்குச் சாதகமாகக் காட்டும் மற்றவர்களின் முகத்தை மட்டுமே உண்மை என்று நம்பி அவர்களைப் புகழ்வதும் அதிலிருந்து சில விலகல் ஏற்படும் போது பதட்டம் அடைந்து ஏமாந்து போய்விட்டோம் என்று துவளுவதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
படிக்க வெளிநாட்டிற்கு வந்தவளுக்குச் சொகுசான வாழ்வு கிடைத்த போது உண்டான மகிழ்ச்சி அதற்காகத் தான் செலுத்த வேண்டிய கட்டணத்தின் வழியை நிர்ணயம் செய்ததில் கோபம் ஏற்படுகிறது.அதன் பிறகே தான் இருக்கும் நிலையைப் புரிந்து கொண்டு தனக்குப் பொருந்திப் போகும் வாழ்விற்கு மீண்டும் திரும்புகிறாள் சாருமதி.