Jump to ratings and reviews
Rate this book

ஊச்சு: Oochchu (The Fear)

Rate this book
ஜாஸ்மின், நகுல், சுமித் மற்றும் மனிஷ், நால்வரும் நெருங்கிய நண்பர்கள். ஆவணப் படம் எடுப்பதற்காக மர்மங்கள் நிறைந்த மேல்பாறை நோக்கி பயணப்படுகிறார்கள். அந்த காட்டின் அமானுஸ்யத்தை அவர்கள் முழுவதுமாக உணர்ந்துகொள்வதற்குள், ஒவ்வொருவராக காணாமல் போகிறார்கள். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் அவர்களைத் தேடி சென்னையிலிருந்து புறப்படுகிறார். ஒருபுறம், நண்பர்கள் தொலைந்து போனதைப் பற்றி ஊரில் ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்கிறார்கள். மறுபுறம், மேல்பாறை போலீசாரோ ஒத்துழைக்க மறுக்கிறார்கள். எல்லா தடைகளையும் மீறி அர்ஜுன் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கிறார். ஆனால் வழக்கு மேலும் சிக்கலாகிக் கொண்டே போகிறது. மேல்பாறையின் மர்மங்களை தேடிச் சென்ற யாரும் உயிருடன் திரும்பியதில்லை என்பத

184 pages, Kindle Edition

Published December 13, 2018

7 people are currently reading
19 people want to read

About the author

Aravindh Sachidanandam

20 books43 followers
Aravindh Sachidanandam is an engineer turned writer based in chennai. He is the tamil translation author of best seller "conversations with maniratnam." He is the pioneer in online tamil self-publishing.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
24 (40%)
4 stars
25 (41%)
3 stars
8 (13%)
2 stars
3 (5%)
1 star
0 (0%)
Displaying 1 - 6 of 6 reviews
Profile Image for Saravanan.
356 reviews20 followers
January 2, 2019
பைசா வசூல்! கொடுத்த பணத்திற்கான திருப்தியை உங்கள் விறுவிறுப்பான நாவல் அளித்தது, நன்றி அரவிந்த். சிறு எழுத்துப் பிழைகள், தமிழ் எங்கு என்று தேட வேண்டிய இக்காலத்தில் ஆங்கிலத்தை குறைத்துக் கொண்டு, தமிழ்ப் பெயர்களை பயன்படுத்தினால் நன்று.

சமீபத்தில் பரவலான வாக்கியங்கள், GOT கதாபாத்திரம், காதலிக்க நேரமில்லை தொடரின் பாடல், இன்னும் பல போல கடைசியில் I am waiting யை பயன்படுத்தி இருக்கலாம். பள்ளிப்பருவத்தில் ஒரு தொலைக்காட்சித் தொடரில் ஒரு வாரம் நடந்ததை கனவு என்று இழுத்ததும், Final Destination னும் கதையின் தொடக்கம் ஞாபகப்படுத்தியது.

அர்ஜுனின் அடுத்த அதிரடிக்கு I am waiting!
2,121 reviews1,109 followers
January 1, 2019
மனிதர்களின் வக்கிரங்களும் கொடூர எண்ணங்களுக்கும் எல்லை என்பதே கிடையாது.

ஒவ்வொருவனும் அடிமனதில் உண்டாகும் எண்ணங்களுக்கு உருவம் கொடுக்கும் போது அது பலநேரத்தில் சகஉயிர்களின் வதையாகவே மாறுகிறது.

நான்கு நண்பர்கள் புறப்படும் பயணத்தின் தொடக்கத்திலே உண்டாகும் இடர்பாடுகள் அவர்களைக் காட்டில் இருக்கும் அமானுஷ்ய வீட்டின் உள்ளே அடைத்து விடுகிறது, அங்கிருந்து தப்பிக்கவும் வழியில்லை. ஒவ்வொருவராக இறந்து கொண்டே வர அதன் பழி முழுவதும் அக்காட்டின் விலங்கு மேல் விழுகிறது.

தீயவைகளில் மனிதன் காட்டும் தன் அறிவின் வீச்சு அபிரிமிதமான உள்ளமைப்பை கொண்டது.தான் வாழ தனக்கு உதவும் இயற்கையையே அழித்து அதன் மீது பழியைச் சுமத்தும் வல்லமையே அதற்கு உதாரணம்.

காணாமல் போன நான்கு நண்பர்களைத் தேடி வரும் போலீஸ் அதிகாரி அர்ஜுன் பார்வையில் அங்கே இருக்கும் தவறுகள் ஒவ்வொன்றும் தெளிவாக விழுந்தாலும் அதைச் சாதாரணமாக அவர் எடுத்துக் கொண்டதற்குப் பதில் பல உயிர்களின் இழப்பை சந்திக்க நேர்கிறது.

எதிர்பாரா நபரே குற்றவாளியாக அடையாளம் காணப்படுகிறார் அதற்குக் காரணமாகச் சொல்லப்படும் விஷயம் மனித மனம் வக்கிரங்களின் உச்சம்.

திகில் கதையின் இலக்கணத்தை இம்மியளவும் மாறாமல் எழுத்தப்பட்ட இப்படைப்பில் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை,காட்சி படுத்தப்பட்ட வார்த்தைகளின் வழியே வாசிப்பவர்களும் அக்காட்டில் உலா வந்த உணர்வை கொடுக்கிறது.

குற்றவாளிக்கு முடிவு வரலாம் ஆனால் குற்றங்களுக்கு முடிவு என்பதே இல்லை அதன் தொடக்கம் மட்டுமே வரையறைக்குள் வரும்.
Profile Image for Mayooresan.
43 reviews3 followers
February 6, 2019
கிட்டத்தட்ட கடந்த இரண்டு வருடங்களாக ஒரு புத்தகமும் வாசித்து முடிக்கவில்லை. ஊச்சு புத்தகமே மீளவும் முழுமையாக வாசித்து முடித்த புத்தகம். கதை சினிமாவிற்கு கொஞ்சமும் சளைக்காமல் பரபபர வென்று நகர்கின்றது. அனைத்தும் சிறப்பு பின்வரும் விடயங்களைத் தவிர.

1. கதையின் பாத்திரங்களுக்கு சினிமா பாணியில் பெயர் வைக்காமல் நல்ல தமிழ் பெயர்களும் கலந்து வைத்திருக்கலாம். குறிப்பாக பிரதான கதாபாத்திரங்களுக்கு.
2. மொழிப் போராட்டம் மூலம் பெற்றெடுத்த தனித் தமிழ் இயக்கத்தின் விளைவுகளை கொஞ்சம் நையாண்டி செய்யும் பாணியில் ஒரு பாத்திரம் பேசும். வடக்கில் தனி ஹிந்தியில் வைத்து வாட்டும் அவர்களை என்ன செய்வது அப்போ? அவர்களுக்கு வந்தால் இரத்தம் தென்னிந்தியருக்கு வந்தால் சட்ணியா? இது கதையை வாசிக்கும் போது தொடர்ந்து நெருடிய விடயமாக இருந்தது.

இவை இரண்டையும் தவிர புத்தகம் அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
Profile Image for Sakthi Vel.
10 reviews1 follower
December 12, 2019
Good thriller with expected twists and turns,
Overall readable but falls bit on the side of a movie script.
Profile Image for Aishwarya.
43 reviews15 followers
January 15, 2020
The plot was good but writing not so much.

Interesting plot but writing could've been better. The conversation between the group of friends was boring and forced. But did enjoy reading.
Profile Image for Boje Bhojan.
31 reviews
February 12, 2023
ஊச்சு - அரவிந்த் சச்சிதானந்தம் - திரில்லர் நாவல் - கிண்டில் வெளியீடு - பக்கங்கள், 186 - முதல் பதிப்பு 2018


ஊச்சு - திகில் நிறைந்த ஒரு மர்மம் நாவல்

புத்தகம் பற்றி :

மொத்தம் 186 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் ஒரு திரில்லர் வகை என்று சொல்வதை விட சைக்கோ திரில்லர் வகை என்று சொல்லலாம். பொதுவாக சைக்கோ திரில்லர் வகை என்பது ஒரு horror survival போல் ஒரு அடர்ந்த காடு அங்கு பயணம் வரும் . சில பேர் வழியில் மாட்டி கொள்வார்கள் பக்கத்தில் இருக்கும் ஒரு அடர்ந்த வீட்டில் ஒரு இரவு தங்க போகும் பொது எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கு அதன் பின்னணியில் ஒரு பிளாஷ் பக் இருக்கும் கடைசியாக சில பேர் தப்பிப்பார்கள். ஆனால் இது சற்று வித்தியாசமாக இருந்தது.

நகுல் , மனிஷ் , ஜாஸ்மின் , சுமித் என்ற நான்கு நண்பர்களும் ஒரு ப்ராஜெக்ட் காக மேல்பாறை என்னும் இடத்தை வந்து கொண்டு இருக்கும் பொது எதிர் பாரத விதமாக அவர்களின் கார் பஞ்சர் ஆகிறது. உதவிக்கு யாரும் இல்லாத இடத்தில் ஒரு வீடு தெரிகிறது அந்த வீட்டுக்குள்ள நுழைந்த நான்கு பெரும் ஒருவர் பின் ஒருவரராக காணாமல் போகிறார்கள். இந்த வழக்கை விசாரிக்க இன்ஸ்பெக்டர் அர்ஜுன் மற்றும் அவரது உதவியாளர் ஜோதி மணி அவர்களும் மேல்பாறைக்கு செல்கிறார்கள். அங்கு அவர்கள் சென்ற பொது எதிர்பாராத சில விஷயங்கள் நடக்கிறது அதில் இருந்து மீண்டு இந்த வழக்கை முடித்தார்களா. அந்த 4 பேருக்கு என்ன நேர்ந்து உண்மையில் அந்த ஊரில் நடப்பது அமானுஷ்யமா அல்லது குற்றமா போன்ற கேள்விகளுக்கு விறுவிறுப்பாக விடை சொல்லி இருக்கிறார் ஆசிரியர். பொதுவாக இந்த புத்தகத்தை படித்த
பொது நான் தெரிந்து கொண்ட விஷயம் snuff film. அப்படி என்றால் என்ன அதன் பின்னணியில் இருக்கும் கொடூரம் என்ன என்பதை சொல்லி இருப்பார் ஆசிரியர்.

கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு நாவல் இது.




Displaying 1 - 6 of 6 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.