வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு மொழிகள் என்றாலும் இந்தச் சிறுகதைகள் எல்லாவற்றிலுமாக வேரடி நுட்பமாக இழையோடிக் கொண்டிருக்கிறது ஒரு பேரழுத்தம். கதை 'செய்வதை' விடவும் காணும் காட்சிகளும் அனுபவங்களும் கதைகளாகும்போது கிடைக்கும் பெரு வலு இது. தேடித் துழாவிப் படிக்க வேண்டிய சிறுகதைகளின் தேர்ந்த தொகுப்பு 'இறக்கை முளைத்த விதி'.