குழப்பமில்லா வாழ்க்கையை நீட்டிக்கச் செய்வதற்குத் தெளிந்த அறிவு தேவை என்றாலும் அடுத்தவர்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப தன்னை முன்னிறுத்துபவர்களுக்கு எவ்வகைப் பாதகமும் சுலபத்தில் வருவதில்லை.
பள்ளி பருவத்தில் தான் ரசித்த ரிஷி தந்தையின் தொழில் எதிரியின் மகன் என்றாலும் அவனுக்கு ஆபத்து ஏற்படும் வேளையில் காப்பாற்ற வந்த சாதானா உள்ளுக்குள்ளே பல ஆண்டுகளாக அவனின் மீது வைத்து இருந்த காதல் மற்றவர்களின் கண்ணில் விழுகிறது.
இரு குடும்பங்களின் தலைவர்களும் அரசியல்வாதியாகப் போனதால் தேர்தலை முன்னிட்டு சம்பந்தியாகுகின்றனர்.
பெண் எடுத்துப் பெண் கொடுத்ததால் சாதனாவின் அண்ணன் வெற்றியும் ரிஷியும் ஒருவர் மீதான மற்றவரின் வெறுப்பை உள்ளுக்குள்ளேயே மூடி வைக்கின்றனர்.
வெற்றிக்கும் ப்ரீத்திக்கும் திருமண வாழ்வு இனிமையாகக் கழிகிறது.
வேறு ஒரு பெண்ணைக் காதலிக்கும் தன்னை சாதனா வேண்டும் என்றே இக்கட்டில் மாட்டி திருமணம் செய்து கொண்டால் என்று வெறுப்பைக் காட்டும் ரிஷியை திருமணக் காதல் மாற்றிவிடுகிறது.
கவனக்குறைவால் வயிற்றில் இருக்கும் பிள்ளை அழிந்து போனது சாதனாவை பலவீனமாக்கி இல்லாத கற்பனைக்குள் அவளை அமிழ்த்தி ரிஷியிடம் இருந்து தள்ளி போவதை அவளின் மெல்லுணர்வே தடுத்துவிடுகிறது.
நேர்மறையாக மட்டுமே சிந்திக்கும் மனிதர்களின் வாழ்வில் நடந்தேறும் சம்பவங்களின் தொகுப்பாகிறது.