அந்நிய தேசத்தில், சுயநினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மெரைன் இஞ்சினியர் தமிழ்ச்செல்வன்! நாயகி மதுராவுடன் முகிழ்க்கும் அலாதி அன்பின் அழகிய தருணங்கள் - ஸ்பெயினின் அல்கேசிராஸ் துறைமுகம் துவங்கி தென்சீனக் கடல் வரையிலுமான, டேங்கர் கப்பல் பயணத்தில் நிகழும், கடற்கொள்ளையரின் தாக்குதல்கள் - இயற்கையின் சீற்றங்கள் - தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளென, முன்பின்னாகத் தொடர்ச்சியற்று அவனது ஆழ்மனப் பதிவுகளிலிருந்து விரியும் காட்சிக் கோர்வைகள்! அதற்கும் சிலமாதங்களுக்கு முன்பாக நிகழ்ந்த விடுமுறைக்கால நிகழ்வுகள்! பதின்பருவத்து மாணவர்களின் இன்றைய சூழலியல் சிக்கல்கள்! கரையும் கடலுமாக மாறி மாறிப் பயணிக்கும் சுவ