‘மனிதன்’ பரிணாம வளர்ச்சியின் ஓர் சிறந்த படைப்பு மனிதப் பிறவி. மிக அறிய சக்திகளை உள்ளடக்கியது மனிதனின் ஆழ் மனம். அந்த ஆழ்மனதின் அற்புதங்களை அன்பெனும் தூரிகையால் இசை, நடனம், பாரம்பரியம், விஞ்ஞானம், தத்துவம், நாட்டுப்பற்று, சாகசம் ஆகிய வண்ணங்கள் கொண்டு தீட்டிய என் முதல் படைப்பு “மார்பில் ஊறும் உயிரே”
அதீத அன்பு கொண்ட உறவுகளுக்குள் பிரிவு கூட ஒரு பொருட்டே அல்ல, மனதால் இணைந்திருப்பவர்களுக்கு அம்மனமே ஒரு சமிக்கையை எழுப்பும்.
அப்பா மகளான விஜயகுமாரும் அபூர்வாவும் பாச இழையிலே எப்பொழுதும் பயணப்படுபவர்களுக்கு விஜயகுமாரின் இழப்பு அவளின் மனதை துவள செய்தாலும் ஆறுதலாக இருக்கும் சித்தார்த்தின் துணை அவளுக்குப் பலத்தைக் கொடுக்கிறது.
சிறுவயதில் கடவுள் தனக்கான தேவதையாக அபூர்வாவை அனுப்பி வைத்திருக்கிறார் என்று கொண்டாடும் சித்தார்த் அவளுக்குப் பாசத்தில் மற்றுமொரு தந்தையாகவே போகிறான். அபூர்வாவின் குடும்பமும் சித்தார்த்தின் குடும்பமும் அன்பாலே பிணைக்கப்பட்டு ஒரு குடும்பமாக வாழ்கின்றனர்.
இராணுவ வீரனான விஜயகுமார் தீவிரவாத செயல்களை முறியடித்துத் திரும்பும் போது விபத்தில் மாட்டி தன் சுயநினைவை இழந்தவருக்கு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நினைவுகள் மெல்ல எட்டி பார்க்கும் போது தான் இருக்கும் இடத்தில் பெரும் அழிவுக்குத் திட்டமிடப்படுகிறது என்பதைத் தெரிந்து அதை அரசாங்கத்திற்குக் கொண்டு செல்ல ஆழ்மனதில் தன் மகள் ஆபூர்வாவிற்கு செய்தி அனுப்ப அது சித்தார்த் மூலம் சேர வேண்டியவர்களுக்குச் சென்று தீவிரவாத செயல்கள் முடிவுக்கு வருவதுடன் விஜயகுமாரின் உழைப்புக்கான அங்கீகாரமும் வந்து சேர்கிறது.
தற்காலச் சம்பவங்களைச் சொல்லும் போது உடனடியாக அது தொடர்புடைய கடந்த காலத்தில் நடந்ததைச் சொல்வது மாதிரி எழுதப்பட்டதால் கதைக்கும் வாசிப்பவர்களுக்கும் இடையில் எழுத்தாளர் வந்து கதையில் வாசிப்பவர்களுக்கான இடத்தை முற்றிலும் தானே ஆக்கிரமித்துக் கொள்வது தவிர்க்கப்பட்டிருக்கவேண்டும்.