கட்டாயங்களுடனே வாழும் வாழ்க்கை மெல்ல அதனுடன் ஒன்ற செய்துவிடும்.
பல காதல் தோல்விகளைக் கண்டாலும் தனக்கு ஒரு காதலி மீண்டும் தேவை என்பதைக் கடவுளை பார்க்கும் போதெல்லாம் கோரிக்கை வைக்கும் ஜானகிராமனை கட்டாயப்படுத்திப் போலி மிரட்டல் மூலம் அவனுக்குப் பிடிக்காத மாமன் மகள் எழிலரசியைத் திருமணம் செய்து வைத்துவிடுகின்றனர்.
பள்ளியில் படிக்கும் எழிலரசிக்கு ஒரே பொழுது போக்கு பார்க்கும் போதும் பேசும் போதும் ஜானகிராமனுடன் சண்டை போடுவது தான். தாத்தாவின் உடல்நிலையைக் காரணம் காட்டி மிரட்டி பிடிக்காதவனுடன் தனக்குத் திருமணம் செய்து வைத்தாலும் தன் இயல்புடனே அவனிடம் இருக்கிறாள்.
திருமணம் ஜானகிராமனுக்குள் மேஜிக் செய்து எழிலரசிக்குத் தன்னைப் பிடிக்க வேண்டும் தனக்குள் அவள் அடங்க வேண்டும் என்ற ஆவல் உந்த அவள் பள்ளிக்கே ஆசிரியராக வந்தவன் எழிலின் மனதில் கணவனாக நிலைத்துப் போகிறான்.
இரண்டு முக்கியக் கதாபாத்திரமும் சண்டை போட்டுப் பேச்சை வளர்த்துக் கொண்டே போவதுடன் அப்போ அப்போ வந்து போகும் குடும்ப உறுப்பினர்களும் ஒருவருக்கொருவர் கலாய்த்துக் கொண்டே கதையை முடித்து வைக்கின்றனர். பேச்சை தவிர வேறு இல்லை அதுவே கதையுடன் ஒன்றவிடாமல் தடுத்துவிடுகிறது.