ஒரு திருவுரு புனிதமாவது அதைப் படைத்தவனால் அல்ல; அதை வழிபடுபவனால். மக்கள் தன்னை நாடி வருவதையே அறிவுமிக்கவன் விழைவான். நன்றி சொல்லி வருபவர் மீது அவனுக்கு நாட்டம் இருக்காது. நாடி வருவோரை எதிர்பார்ப்பின் வாசற்படியிலேயே கிடத்தி வைப்பது சாதுர்யம். அவர்களது விசுவாசத்தில் நம்பிக்கை வைப்பது பட்டிக்காட்டானின் வேலை. எதிர்பார்ப்புக்கு ஒரு நல்ல நினைவாற்றல் உண்டு; நன்றியுணர்வுக்கு கிடையாது.