மனதிற்கு பிடிக்காத பெண்ணை மணந்துகொள்ளும் ஜீவன், வாழ்க்கை பயணத்தில் ஏற்படும் பல இடர்பாடுகளை அவளோடு சேர்ந்து கடந்து வருகிறான். அந்த பயணத்தின் போது அவர்களுக்குள் இயல்பாய் மலரும் காதல் அவர்களுடைய வாழ்க்கையை எந்த அளவுக்கு அழகாக்குகிறது என்பதை எதார்த்தம் குறையாமல் சொல்லியிருக்கும் கதை... //எப்பொழுதும் வெளியே சென்றால் உடுத்துவது போல் தான் உடை அணிந்திருந்தான்... ஆனால் அன்று அந்த உடையில் அவனை பார்க்கும் பொழுது அவளுக்குள் ஏதோ பாய்ந்தது... இதயத்தை யாரோ கையிலெடுத்துக் கசக்குவது போல் மனம் வலித்தது... இமைக்கவும் மறந்து அவனை பார்த்துக் கொண்டே நின்றாள். அவன் தலையை அசைத்து அவளை உள்ளே அழைத்தான். பார்வையை அவன் கண்களிலிருந்து விளக்காமல் அவனிடம் நெருங்கி வந&#