கதை நிகழ்விடம்: தஞ்சாவூர் பகுதி (கீழ தஞ்சாவூர் பகுதி) தஞ்சாவூர் பகுதி கள்ளர்களிடத்தில் இந்த சாதிக்குள் சாதி பார்க்கும் பழக்கம் இன்னும் கூர்மையாக இருப்பதை இந்த நாவல் வழியாக சி. எம். முத்து அருமையாக எடுத்துக் காட்டுகிறார்.
அதென்ன ' சாதிக்குள் சாதி பார்க்கும் பழக்கம்? ' ஒவ்வொரு சாதியிலும் பல பிரிவுகள் இருக்கின்றன. அந்த பிரிவுகளில் ஒரு குறிப்பிட்ட பிரிவு தாங்கள் உயர்ந்தவர்கள் என்றும் மற்றவர்கள் தாங்கள் சாதியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் எங்களுக்குக் கீழே என்று நம்புவது//நினைப்பது. உதாரணமாக: 1. வண்ணார்களில் பாண்டிய வண்ணார் ஒசத்தி என்றும் புதிரை வண்ணார் அவர்களில் கீழ் மட்டம் என்று சொல்வது.... 2. பனையேரி நாடார்களை மற்ற நாடார்கள் தாழ்வாக பார்த்தது....
இது எல்லா சாதியிலும் உண்டு. ஆனால் காலப்போக்கில் சாதிக்குள் சாதி பார்க்கும் பழக்கம் மெல்ல அருகிப் போனது அல்லது போய்க் கொண்டிருக்கிறது. இன்று பொருளாதாரம் அனைத்தையும் தீர்மானிப்பதாக இருக்கிறது. ஆனால் தஞ்சாவூர் கள்ளர்கள் மத்தியில் இந்தப் பழக்கம் இறுகிப் போய் இருந்ததை அடிப்படையாக வைத்து கதை எழுதியுள்ளார் சி. எம். முத்து.
" சாதியே தப்பு....இதிலே சாதிக்குள்ள சாதி பார்க்கிரானுங்க " என்று சி. எம். முத்து தனது விமர்சனத்தை அங்கங்கே வைக்கிறார். மற்றபடி அந்த பழக்க வழக்கம் கள்ளர்கள் மத்தியில் எவ்வளவு இறுகிப் போயிருந்தது என்பதையும் அதனால் ஒரு கள்ளர் ஊரில் ஏற்படும் பிரச்சனைகளையும் சுவாரசியமான கதை வழியாக வெளிப்படுத்தி இருக்கிறார் சி. எம். முத்து.
Casteism is a crime but there are many subclasses like shattered mirror pieces. A good effort by the author to show the subdivisions of these castes and the problems arise from that.