Harichandra Stories (நமது பாரத தேசத்தில் உலாவிவரும் பழம்பெரும் கதைகளில் ஒன்று அரிச்சந்திரனுடைய கதை. அரிச்சந்திரன் சூரிய வம்சத்தில் தோன்றிய அரசன். பின்னாளில் இவன் வம்சத்தில் இராம, இலட்சுமணர்கள் தோன்றினார்கள். அரிச்சந்திரன் சொன்ன சொல் தவறாதவன். சத்தியத்தை உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவன். ஒருவர் நல்ல நிலையில் இருக்கும்போது சொன்ன சொல்லைக் காப்பாற்றுவது எளிது. ஆனால் அவரோ வறுமையை அடைந்துவிட்டால், "சொன்னதைச் செய்வாறா?" என்றால் சந்தேகம்தான். அரிச்சந்திரன் இராஜாவாக இருந்தபோதும் சரி, எல்லாம் இழந்து ஆண்டியாகவும், அடிமையாகவும் ஆனபோதும் தன் சத்தியத்தில் தவறாமல் நடந்து கொண்டான். நம்முடைய தேசத்தந்தை மகாத்மா காந்தியை, அவர் மகாத்மாவாக மாற முதற்காரணமாக இருந்தது,