Jump to ratings and reviews
Rate this book

Sool சூல்

Rate this book
மிளகாய், பருத்தியை நேர்த்தியாக சேகரித்து விதைகளாக்கும் பணியும், பிரசித்திப் பெற்ற தேனி, பெரியகுளம், சோழவந்தான், ஆத்தூர் வெற்றிலையைப் போன்று, உருளைக்குடி வெற்றிலையைத் திருத்தி பயிர்செய்வதற்காக மகாலிங்கம் பிள்ளை பகீரத பிரயத்தனம் செய்து கிணறு வெட்டி அந்தக் கிணற்றிலேயே இறந்த நிகழ்வும், தன் நிலத்தில் மேய்ந்த ஆட்டை துப்பாக்கியால் சுட்டு அதனால் ஏற்பட்ட ஊர்ப் பிரச்னையால் பொதுமக்கள் பல மைல் தூரம் சுற்றிச் செல்லும் நிலைமை ஏற்பட்டும் ஒற்றுமையுடன் செயல்பட்ட உருளைக்குடி மக்களின் மனநிலை என பல நிகழ்வுகள் வெகுநேர்த்தியாக விவரிக்கப்பட்டுள்ளன. நீர்நிலைகளை நம்பியே விவசாயம், அதை எவ்வாறு பராமரித்து தங்களுக்குச் சாதகமாக்கி கொள்வது என்பதை விவசாயிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் தெரிந்து கொள்வதற்கு இந்த நாவல் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். பக்கங்களின் எண்ணிக்கை அதிகம் என்றாலும் சொல்லும் பாங்கில் உள்ள நயமும், அள்ளித் தெளிக்கப்பட்டுள்ள சொலவடைகளும், கிராமத்து நையாண்டிகளும் வாசிப்பவர்களுக்கு இந்த நாவல் நிச்சயம் திருப்தியைத் தரும் என நம்பலாம்.

500 pages, Paperback

First published January 1, 2016

51 people are currently reading
602 people want to read

About the author

Cho. Dharman

11 books33 followers
Cho Dharman (born 8 August 1953) is an Indian Tamil writer. He was born in Kovilpatti Taluk in Tuticorin district of Tamil Nadu. The real name is S. Dharmaraj. Cho Dharman's novel Koogai, a stunning account of Tamil lives in post-independence India, was translated into English as The Owl. Cho, has authored nine books, won several awards and much critical acclaim for his novels, non-fiction and short stories. He won the Sahitya Akademi award in 2019 under Tamil language category for his novel Sool.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
77 (43%)
4 stars
52 (29%)
3 stars
34 (19%)
2 stars
8 (4%)
1 star
6 (3%)
Displaying 1 - 30 of 31 reviews
Profile Image for P..
528 reviews124 followers
June 4, 2017
இரு கைகளிலும் ஆறேழு பைகளில் 50க்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் “இதற்கு மேல் உறுதியாக எதையும் வாங்கப் போவதில்லை” என்ற உறுதியுடன் இந்த ஆண்டின் புத்தகக் கண்காட்சியை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் போது “அடையாளம்” பதிப்பகத்தின் ஸ்டால் வழி வருகையில் அங்கே புத்தகங்கள் அடுக்கியிருந்த விதத்தைப் பார்த்ததும் கவர்ந்திழுக்கப்பட்டேன். தமிழில் உள்ள பதிப்பகங்களிலேயே மிகவும் classy ஆன, முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்புகளும் புத்தகங்களும் கொண்டவற்றில் அடையாளம் முதன்மையானது. அவர்கள் வடிவமைத்த கைப்பையிலும் கூட அசத்தியிருந்தார்கள். (அடையாளம் என அடர்கறுப்புப் பையில் வெள்ளை எழுத்தில் பொறிக்கப் பட்டிருந்த பையை இன்னும் பத்திரமாக சேமித்து வைத்துள்ளேன்) அங்கே 2016க்கான சிறந்த நூலாக விகடன் இதை அறிவித்திருப்பதைப் பார்த்ததும், முற்றிலும் பரிச்சயம் இல்லாத கேள்விபட்டிராத நூல்களை வாங்கியதே இல்லை என்ற குறையைத் தீர்க்க எதிர்பார்ப்பு ஏதும் இல்லாமல் இதனை வாங்கினேன். அப்போது நான் படிக்கப் போகும் நூல்களில் மிக முக்கியமான ஒன்றாக இது அமையும் என்றோ, இதன் மூலம் நான் அறியப் போகும் வரலாற்றின் ஆழத்தைப் பற்றியோ, நினைவை விட்டு இதை எளிதாக நீக்க முடியாதென்பதையோ நான் அறிந்திருக்க வாய்ப்பில்லை. படித்து இரண்டு மாதங்கள் கழித்தும் கதையின் பெரும்பகுதி நினைவில் தெளிவாக இருப்பது ஒரு அரிய நிகழ்வு.

சூலில் கதையானது கதைமாந்தர்களுக்குள் தன்னை சுருகிக் கொள்ளாமல், உருளைக்குடி என்ற நிஜ கிராமத்தின் 100 ஆண்டு கால வரலாற்றை விரிக்கிறது. 200 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த வாழ்க்கையை ஆழமான ஆரய்ச்சியின் உதவியோடு, அவ்வாழ்வின் சின்னஞ்சிறு நுணுக்கங்களைக் கூட தவற விடாமல் நம் கண்முன் நிறுத்துகிறது. நாம் கிராமங்களில் வழிபடும் பெரும்பாலான கடவுளர்கள் நம் முன்னோர்களாக வாழ்ந்தவர்களையே என்பதையும், நம் வாய்மொழி மரபில் கதைகள் (legends) எவ்வாறு உருவாகின்றன என்பதையும் உணர்ந்து கொள்ள சூல் மிகவும் உதவி புரிகிறது. நம் மூதாதையர்களின் வாழ்வு இயற்கையுடன் எந்த அளவுக்கு பிண்ணிப் பிணைந்திறுந்தது என அறியும் போது ஏற்படும் வியப்புக்கு அளவில்லை.

மனிதர்களைவிட இயற்க்கைக்கே பெரும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள இப்புதினத்தில் வரும் தாவரங்களின் பெயர்களும், மிருகங்களின் பெயர்களும், பறவைகளின் பெயர்களும், பூக்களின் பெயர்களும் எண்ணில் அடங்கா. இவ்வளவு செழுமையாக இருந்த நம்முடைய சுற்றுச்சூழலில் இப்போது இந்த உயிரினங்கள் எல்லாம் எங்கே சென்றன என்ற கேள்வி தவிர்க்கமுடியாமல் எழும் போது தலைகுனிவே ஏற்படுகிறது.

இயற்கை – குறிப்பாக வேளாண்மை குறித்த நடைமுறை அறிவு இந்நூலில் கொட்டிக் கிடக்கிறது. தீவிர ஆராய்ச்சியினால் சாத்தியமாக்கப்பட்ட இந்த சாதனை பெருமளவில் கவனிக்கப்படவேண்டும். பனைகளில் ஆண் பனை, பெண் பனை என்று இருவகை இருப்பதிலிருந்து, எந்த வகையான பனையில் குருவிகள் கூடு கட்டினால் மழை வரக்கூடும் என்பதிலிருந்து, அரிதாகத் தென்படக்கூடிய நாமக்கோழிகளின் வருகையின் பொருளிலிருந்து, கிராம நீர்நிலைகளின் பராமரிப்பில் இருந்து, வறட்சிக் காலத்தில் மக்கள் என்ன செய்தார்கள் என்பதிலிருந்து, 19ஆம் நூற்றாண்டில் தமிழ் வாழ்க்கையின் சராசரி நிலையிலிருந்து, ஆங்கிலேயர்களால் நம் சுற்றுசூழலில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களிலிருந்து, இப்போது பெரும் தலை வலியாய் இருக்கும் சீமைக் கருவேல மரங்கள் எப்படி இந்தியாவில் நுழைந்தது என்பதிலிருந்து, நம் பாரம்பரிய மீன் வகைகள் ஏதுமே இப்போது நம் நீர்நிலைகளில் இல்லை என்பதிலிருந்து, சுதந்திரம் கிடைத்ததால் நம் கிராம்ங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் வரை இந்த நூலை வாசிப்பதால் நீங்கள் அறியப்போகும் அரிய உண்மைகள் பலப்பல.

புதிதாக சுதந்திரம் பெற்ற இந்தியாவின் கிராமங்களில் நம்முடைய பாரம்பரிய தாவரங்களும் மீன்வளமும் எப்படித் திட்டம் போட்டு அழிக்கப்பட்டன என்ற உண்மையை அறிந்த அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவில்லை. நம் வரலாற்றை, இயற்கையை, மக்களை, நம்மை ஆளும் மறைமுக சக்திகளை – எதையுமே பற்றி நமக்கு உண்மையான, தெளிவான புரிதல் சுத்தமாக இல்லை என்பதைத் தெளிவாக்கியது சூல். அந்த அறியாமையிலிருந்து மீள முயற்ச்சிப்பதற்க்கான உந்த்துதலையும் ஏற்படுத்தியுள்ளது.

நம் வரலாறு, இயற்கை, வேளாண்முறைகள் இவற்றைப் பற்றிய முக்கியமான தவல்களையும், பல வாழ்க்கை விசித்திரங்களையும் சுவாரசியங்களையும் அடக்கியுள்ள அரிய பொக்கிஷமான இந்நூல் தவிர்க்கப்படக்கூடாத ஒன்று!
Profile Image for Satheeshwaran.
73 reviews222 followers
March 4, 2020
நீர் மேலாண்மை பற்றி நம் முன்னோர்கள் கொண்டிருந்த இயற்கை சார்ந்த அறிவை, நவீனமயமாதலின் பயணத்தில் தொலைத்துவிட்ட நம் சமூகத்தை கேள்வி கேட்கும் நாவல் சூல்.

இயற்கையோடு இயைந்த வேளாண்மை, முன்னோர்களின் பாரம்பரியங்கள், ஏரி, குளம், கண்மாயென நீராதாரங்களைப் பராமரித்த முறைகள் ஆகியவற்றைப் பற்றி ஆழமான ஆராய்ச்சியின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது நாவல். வாசிக்கும்போதே அவற்றை நம்மால் புரிந்துகொள்ளவும் முடிகிறது.

இருப்பினும் நாவலின்மீது சில விமர்சனங்களுமுண்டு. வாசித்து முடிக்கையில், இந்நாவல் மறைமுகமாக குலத்தொழில் முறையை ஆதரிப்பதுபோன்றும், மக்களாட்சி முறை நடைமுறைக்கு வந்ததும்தான் எல்லாமே சீர்குலையத் துவங்கியது போன்றும் ஒரு பிம்பம் உருவாவதைத் தவிர்க்க முடியவில்லை. இது மிகவும் ஆபத்தானது.

மேலும் நாவல் பற்றி YouTube பதிவாக:
https://youtu.be/g-TvBwr_B-E
Profile Image for Muthu Vijayan.
37 reviews14 followers
April 4, 2023
ஒரு கண்மாய் - மக்களின் கதை:

மன்னராட்சியில் இருந்து மக்களாட்சி வரை அதிகாரம் எவ்வாறெல்லாம் மாறுகிறது என மண் வாசம் குறையாமல் விவரிக்கிறார் ஆசிரியர். உருளைக்கூடி ஊர் மக்களை இணைக்கிறது இந்த நிறைசூலியான கண்மாய் தான், நாவலில் ஆங்காங்கே சாமிகள்,முனிகள்,பேய்கள் என வந்தாலும் கொஞ்சம் கூட சலிப்பு தட்டாமல் இருந்தது. கதைக்குள் கதை கதைக்குள் கதை என கரிசல் நிலமே கதைகளால் உருவானதாக இருக்ககிறது. நாவலில் ஒவ்வொரு காலமும் அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீர்ப்பாய்ச்சி, கொப்புளாயி என நாவலில் இன்னும் பல கதாப்பாத்திரங்கள் மனதில் நிறைந்துள்ளனர்.

நிறைவான வாசிப்பு அனுபவம் ✨
Profile Image for Arunmozhi Ganesan.
108 reviews24 followers
January 7, 2021
இந்த புத்தகத்தை துணையை பிரிந்தும் "வேறினை" தவிர்த்தவர்களுக்கு சமர்ப்பித்திருக்கிறார் தர்மன். இது ஒன்றும் குடும்ப கதை அல்ல. சமர்பிப்பதற்கு வேறு காரணங்கள் உண்டா என்றும் தெரியவில்லை. ஆனால் அவர் குறிப்பிட்டிருக்கும் வரிகள் இந்த புத்தகத்தின் கருத்துக்கள் எதை நோக்கி இருக்கப்போகிறது என்பதை குறிப்பால் உணர்த்துகிறது

நம் ஊரில் ஒரு தாத்தா இருப்பார். அவருக்கு வரலாறு தெரியும், அதை நன்���ாக கதையாக சொல்ல தெரியும், விவசாய முறைகள் தெரியும், கை வைத்தியம் தெரியும். ஆனால் சாதி வெறியராக இருப்பார், தன் கையை விட்டு அதிகாரம் நழுவியதால் கோபம் கொண்டிருப்பார், ஒடுக்கப்பட்டோரின் உழைப்பை சுரண்டியதை பற்றிய பிரக்ஞை இல்லாது இப்பல்லாம் கூலிக்கு யார் கிடைக்கிறா என்று அங்கலாய்ப்பார். இங்கு கதை சொல்லியான சோ தர்மனும் அப்படி பட்டவர் தான்.

சோ தர்மன் நன்றாக கதை சொல்லுகிறார். கொப்புளாயியின் கதை, சித்தாண்டியின் கதை மகாலிங்கம் பிள்ளையின் கதை, புதையல் காக்கும் எலியன் பிச்சை ஆசாரியின் கதை என்று முதல் பாதி முழுக்க நம் காது குளிர கதைகள் கேட்கிறோம். பின் தான் தர்மனின் வன்மம் கரை புரண்டு ஓடுகிறது.

பள்ளர்கள் காலங்காலமாக சம்சாரிகள். அவர்கள் நாடார், சக்கிலியர், வண்ணார்களை விடவும் உயர்ந்தவர்கள். அவர் நிறுவ முற்படுவது இதை தான். மதம் மாறும் இச்சியனை நக்கலடிப்பவர் அடுத்த சாதிக்கு அடிமையாய் இருக்கணுமா என்ற அவன் கேள்விக்கு பதிலளிக்கவில்லை. மாறாக அங்கு சென்றாலும் நீ இப்படி தானே என்று கேலி பேசுகிறார். வரலாற்றில் சாதியை பற்றி பேசும் பொழுது பிற சாதிகள் பள்ளர்களை நடத்தியதையும் அல்லவா பேச வேண்டும். உயர் சாதிகள் பள்ளர்களின் வேளாண் அறிவுக்கு கொடுக்கும் அங்கீகாரமே அவருக்கு போதுமாகிறது. அய்யர் சாபம் தாங்குவோமா என்று சொல்ல முடிகிறது. கூச்சமே படாமல் பகடை, சக்கிலி தாயோளி என்றெல்லாம் எழுத முடிகிறது.

வரலாற்று திரிப்பிலும் ஈடுபடுகிறார் தர்மன். வெள்ளைக்காரன் ஆட்சிக்கு பிறகு நேரடியாக திராவிட ஆட்சிக்கு வந்து விடுகிறார். கடவுள் மறுப்பாளர்கள் வெள்ளைக்காரனிடம் இருந்தா அதிகாரத்தை கைப்பற்றினார்கள், ஆண்டைகளிடமும் பண்ணையார்களிடமும் இருந்தல்லவா பெற்றார்கள். அவர்களா சீமை கருவேல மரத்தை பரப்பினார்கள்? அவர் வன்மம் உச்சம் பெறுவது சுச்சி நாயக்கருக்கு பிள்ளை இல்லை என்ற இடத்தில் தான்.

ஜெயமோகன் இதில் என்ன இலக்கியத்தை கண்டார் என்று தெரியவில்லை. "உத்திரத்து தூண் தான் என்றாலும் உள்ளுக்குள் உளுத்து போய்விட்டால் பலமத்து தானே போகும்" என்பதை தவிர்த்து என் கண்ணனுக்கு எதுவும் படவில்லை. வேண்டுமானால் உங்காத்தா கவிட்டுக்குள்ள என்பதை சேர்த்து கொள்ளலாம்.

மந்திரம், முனி, பேய் என்று பேசி தீர்க்கிறார். அவர் இதை fantasy, science fiction என்று எழுதியிருந்தால் பிரச்சனையில்லை. தர்க்க ரீதியாக நிரூபிக்க முடியாததை நீங்கள் எவ்வளவு கூப்பாடு போட்டாலும் எந்த காலத்திலும் அறிவியல் உலகம் ஏற்று கொள்ளாது தர்மன்

2019ல் சாகித்ய அகாடெமி விருது அளித்ததில் எந்த ஆச்சர்யமும் இல்லை. இவருக்கு வாழ்த்து தெரிவித்த திராவிட ஆதரவாளர்களை தான் மெச்ச வேண்டும்.
Profile Image for Vadivel C.
24 reviews2 followers
August 29, 2023
சூல் நாவலின் இறுதியில் நாவலை விட்டு சென்று கொண்டிருக்கும் வேளையில், உருளைக்குடி ஊருக்குள் செல்வது போல கட்சி அமைப்பாக எழுதிருப்பார் சோ.தர்மன்.

அய்யோ நாகரிகம் வளர்ச்சி என்ற பெயரில் என்ன இவ்வளவு மாறி போய் விட்டது இந்த உருளைக்குடி என்று நினைக்க வைத்தது தான் இந்நூலின் வெற்றி.

கரிசல் கதைகள் என்றுமே எளிய மக்களின் உலகத்திற்குள் அழைத்துச் சென்று பிரமாண்டத்தை காட்டுபவை.

அதில் ' சூல் ' உம் ஆகச் சிறந்த ஒன்று....
Profile Image for Anandhakannan.
7 reviews2 followers
October 15, 2022
2019-ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுடன் மேலும் 4 விருதுகளை வென்ற சோ. தர்மன் அவர்கள் எழுதிய நூல் சூல். இதை 500 பக்கங்களுக்கு எழுதியிருந்தாலும் நாவல் என்று குறிப்பிடமுடியாது.

எட்டையபுரத்திற்குட்பட்ட உருளைக்குடி என்ற ஊரில் உள்ள கண்மாய், அதிலிருந்து நீர்பாய்ச்சும் மற்றும் கண்மாய் மடையை பரம்பரையா பராமரிக்கும் மடைக்குடும்பன் மற்றும் கண்மாயை காவல் காக்கும் காவல் தெய்வங்களாக கருப்பன் இவர்களோடு உருளைக்குடியில் 18-ம் நூற்றாண்டின் கடைசியிலிருந்து 19-ம் நூற்றாண்டின் கடைசி வரை நிகழும் மாற்றங்களை அந்த ஊரிலேயே வசித்து பார்ப்பது போன்ற உணர்வை தரும் நாவல்.

நாம் புதிதாக ஒரு ஊருக்குள் நுழையும்போது நம் முன்னே எதிர்படும் பெயரற்ற, புதிய மனிதர்களை பார்ப்பது போல இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களை ஆசிரியர் எந்த விவரணைகளிம் இல்லாமல் அறிமுகப்படுத்துகிறார். முதலில் அந்த கிராமத்தின் வனப்பும் அதில் கண்மாயின் பங்கும் அதை பராமரித்தல் பற்றியும் தொடங்கி அங்கே வாழும் ஒவ்வொரு மனிதனின் பின்னால் இருக்கும் கதைகளாக கூறிக்கொண்டு வருகிறார். வேறு வேறு கதைகள் - தொடர்புகளும் முடிவுகளும் இல்லாத சிறுகதைகள் போல.. “இது என்னடா கதையே இல்லாமல் கதாபாத்திரங்கள் மட்டுமே நிரம்பி வழிகின்ற கதையாக போகிறதே என 100பக்கங்களுக்கு மேல் படித்துவிட்டு எடுத்து வைத்துவிட்ட புத்தகத்தை, மறுபடியும் 3மாதங்கள் கழித்து அந்த புத்தகம் என்னை அழைத்ததால் திரும்பவும் முதலிலிருந்து படித்தேன். ஆனால் இம்முறை வேறு உணர்வுகளை கடத்தியது. ஒவ்வொரு கதைகளும் அந்த கதைகளில் வாழும் மனிதர்களும் நெஞ்சில் நிற்கிறார்கள்.

குழந்தை இல்லாத கொப்புளாயி அம்மா ஊரையே தன் குழந்தையாக்கி ஊரில் நடைபயணமாக அம்மன் கோவில் செல்லும் பக்தர்களுக்கு மோரும் அவர்களுக்கு நிழல் தர மரங்களாக நட்டு அதை பராமரித்து வனமாக மாற்றியதாகட்டும் அவளின் கூடவே இருந்து அவள் விட்டு சென்ற கடமைகளை ஆற்றிய காட்டுப்பூச்சி என்பவனின் கதையாகட்டும் பல இடங்களில் சிந்திக்க வைக்கிறது. காட்டுப்பூச்சி ஒரு முறை கோவித்துக்கொண்டு பட்டணம் சென்று திரும்பி வந்து பட்டணத்தில் காசு கொடுத்தால் சாப்பாடு கிடைக்கும் என சொல்லும்போது அது நம்பால் “சாப்பாடு போட யார் காசு வாங்குவார்கள்” என வியாபாரம் என்றால் என்னவென்றே தெரியாத அந்த தூய ஆத்மா மௌனித்து போக அதை ஊர்ஞிசதம் செய்து கொண்டு ‘துட்டு வாங்கிட்டு சோறு போடலாமா, பூமா தேவி நம்மள வஞ்சிக்கமாட்டாளா’ என விசனப்படுவதாகட்டும், நீர்ப்பாய்ச்சியின் பரம்பரையும் தண்ணிருக்குள் மூச்சை அடக்கி மடைகளை சுத்தம் செய்யும் அவன் தந்தை ஊரை காக்க உயிர் விட்டு கருப்பனுக்கு துணையாக அவனும் சாமியாகிப் போனதையும், அந்த ஊருக்கு வந்த கள்ளன் கதையாகட்டும் அவனை பிடிக்க கருப்பனே ஒரு கதாபாத்திரமாவதாக இருக்கட்டும் ஒரு கிராமத்து வாழ்க்கையை அந்த கிராமத்தின் கதைகளினூடே வாழும் உணர்வே மிஞ்சுகிறது. இப்படியாக
தொக்கலின் கள்ளுக்கதை, இருளி
மொட்டையன், குரவன் சாமி கதை, சுவாரசியமான
மாகலிங்கம் பிள்ளைவாளின் வெற்றிலை சாகுபடி நுணுக்கம் கற்ற கதை, ஆண்டிபண்டராம் கதை,
அரண்மணை ஊழியன் நங்கரியான் கதையும் அதில் நங்கரியான் செய்த தவறுக்காக மன்னன் அவனை தண்டிக்க முற்படும்போது அதை தடுத்து மந்திரி சொல்லும் “இவன் செய்தது குற்றமல்ல பாவம். குற்றத்திற்கு மட்டுமே அரசன் தண்டனை கொடுக்க முடியும் என்றும் பாவத்திற்கு கொடுக்கமுடியாது” என்று கூறி குற்றத்தையும் பாவத்தையும் விளக்குவது ஞானம். இப்படியாக கிராமத்தின் தனி மனிதர்களின் கதைகளை விவரி்த்து பின் இரு கிராமத்திற்கு இடையே நடக்கும் கதையாகவும், பின்னர் பக்கத்து அரசன் கட்டபொம்மன், ஆங்கிலேய ஆதிக்கம் என கதை விரிந்து செல்வதும் அந்த காலத்திலேயே ஆங்கிலேயர்கள் மூலமாக அறிமுகமாகிற சர்ச்சுகளும் மதப்பிரசாரமுமாக வேறு தளத்தில் கதை பரிமாணம் அடைய. அதே சமயத்தில் அரண்மனை அம���னுஷ்ய கதையும் வந்துசேர நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்கிறது. இதிலிருந்து தான் ஊரில் நிகழும் மாற்றங்களும் கடவுள் மறுப்பை உருளைக்குடி மக்கள் எப்படி பார்த்தார்கள், புதிய அதிகாரங்களும், ஊர், இயற்கை பற்றிய அறிவு இன்றி வரும் அதிகாரிகள் வசம் கண்மாயும், ஊரும் அதன் பனைகளும் செல்ல ஊர் எப்படி கொள்ளையர்களின் கூடாராமாகி போகிறது என குப்பாண்டி சாமி, நீர்ப்பாய்ச்சி வருந்தி அவர்கள் விலகுவதுமாக கதை கடைசி 100 பக்கங்களுக்கு விரிந்து தூக்குணாங்குருவி கூட்டின் திசையை பொறுத்து வடகிழக்கு பருவமழை அதிகமா இல்லை தென்மேற்கு பருவமழை அதிகமா என அறிவதும், குருவிகளின் கூட்டை பார்த்து இந்த வருடம் மழை எப்படியிருக்கும் என கூறும் முத்தாண்டி தாத்தாவின் அறிவாகட்டும் இத்தகைய கிராமத்து அறிவை நாம் நாகரீகம், அறிவியல் என்ற பெயரில் இழந்துவிட்டோம் என்பதையும் தவறான அரசியல் அதிகாரங்களால் நாம் இழந்த கண்மாய், மரங்கள் முதல் நாட்டு மீன்வகைகள் வரையும், மக்கள் எப்படி காசை சுருட்டும் களவாணிகள் ஆனார்கள் என்பதையும் ஒரு கணத்த செய்தியுடன் பதிவு செய்து நாவல் முடிகிறது. நாம் சிறுவயதில் பார்த்த ஊர் இப்போது இல்லை நம் சிறுவயது அனுபவங்கள் இக்கால பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை என்பது எத்தகைய உணர்வை நமக்கு கொடுக்கிறதோ அதே போன்ற உணர்வை கிட்டத்தட்ட 100 ஆண்டாக ஒரு கிராமத்தில் வாழ்ந்து விட்டு கிடைப்பதாக இந்த புத்தகம் தருகிறது. உங்களை பல இடங்களில் சிரிக்கவும், சிந்திக்கவும், வருத்தப்படவும், கிராமத்து வசவுகள் எப்படியிருக்கும் என்று அறியவும் இந்த புத்தகம் தவறவிடாது ஒரு வாழ்வியல் அனுபவமாக மாற்றும்.
Profile Image for Balaji M.
221 reviews15 followers
May 16, 2020
"சூல்" - சோ.தர்மன்

இந்நாவல் பற்றிய முன்னுரையான "நாவல் உருவான கதை"யிலயே தெரிந்துவிடும், இதனின் உட்கரு என்ன என்று. தாம் படித்த ரஷ்ய புத்தகமாம், பிரஷ்னேவின் "தரிசுநில மேம்பாடு"விலிருந்த கதையொன்றில் விவசாய விதைப்பாடு பற்றிய சிறுகுறிப்பை உந்துதலாக கொண்டு, நமது முன்னோர்கள் காலம் காலமாக பாரம்பரிய முறையில் மழையை கணிப்பது , பயிர் விதைப்பாடு, ஏர்சால் மற்றும் பல இயற்கை முறையை, கதையின் ஊடாக ஆவணபடுத்தியிருக்கிறார், திரு சோ.தர்மன் எனும் சோ.தர்மராஜ்.

உதாரணமாக, சாக்குருவியின் மனிதர்களின் மரணத்தை கணிக்கும் கூப்பாடு,
தூக்கணாங்குருவி கூடுகளை கட்டும் முறையை கொண்டு, அந்த ஆண்டின் மழை அளவை கணிப்பது,
மாடப்புறா தன் கூடுகளை முட்டைகள் வெளிதெரிய கட்டுவது
ஆண் பனை, பெண் பனை மரங்களின் வித்தியாசத்தை கண்டுபிடிப்பது என இப்படி பலவற்றில் முன்னோர்கள் கணிக்கும் முறையை நயம்பட வட்டார வழக்கில், வேளாண் குடிகளின் கேலி நகைச்சுவை பேச்சுகளினூடே சொல்லிச் செல்கிறார்.

ஆங்கிலேய ஆட்சியில்
தென்கோடி தமிழகத்தின் எட்டயபுரம் சமஸ்தான
பகுதியிலுள்ள, உருளக்குடி கிராமமும் அதன் நிறைசூலாய்(நீர்) கெதக் கெதக்கென நிறைந்திருக்கும் கண்மாயுமே கதைக்களம்.
இப்புதினத்தை வாசிக்கையில் இதன் 500 பக்கங்களும் கிராமிய மண்வாசனை மிக்கதாய் உணர்வீர்கள். அவரவர்க்கான கிராமவாழ்க்கைகளும் கிராம பயணங்களும் மனக்கண்முன் நிழலாடியபடியே வரும்.
20 அத்தியாயங்களால் ஆன நாவல் என்றாலும், தொடர்ந்து படிக்க கூடிய கதைவடிவமாய் இல்லாது, இயற்கையையும் வேளாண்மை தொழிலையும் கொண்ட வர்ணனைகளாகவே செல்கிறது இப்புதினம்.
அதேவேளையில் ஒவ்வொரு அத்தியாயத்திற்குள்ளும் கிராமவாசிகளின் கதைகளை சுமந்தவாறு அமைந்திருக்கிறது.

வேளாண்மை குறித்து பல தகவல்களும் இதில் காணக்கிடைக்கிறது. அதாவது,
பல்வேறு வகையான பயிர்களை பற்றியும், அதன் விதைப்பு,நடவு, அறுப்பு பதங்கள் பற்றிய கூறுகள் மிகத்தெளிவான வர்ணனைகளின் மூலம் அறியலாம்.
உதாரணமாக, வெற்றிலை பயிர்- கண்மாய் நீர் பாய்ச்சினால் வெற்றிலையில் காரம் கிடைக்காது என்றறிந்து, காரம் பெற, கண்மாய் நீர் கிடைத்தாலும் கிணறு தோண்டி, அக்கிணற்றுநீரை வெற்றிலைக்கு பாய்ச்சுவதாக கதையில் வருகிறது.

நாட்டார் தெய்வ வழிபாடுகள் முறைமையும் அறியகிடைக்கிறது. நாட்டார் தெய்வங்கள் எனப்படுவது முன்னோர்கள் வழிபாடாகவே அறியமுடிகிறது. அந்த ஊர் பொருட்டு ஏதோ ஒரு காலத்தில், ஒருபெரும் நற்காரணத்திற்காக தன்னால் இயன்றதை ஊருக்காக செய்து, அதனால் இறந்தவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக, அவர்கட்கு சிலைவைத்து, மாலை மரியாதை, பொங்கல் படைத்தல் என வருடந்தோறும் வணங்குகின்றனர். அவ்வாறாக, கண்மாய் நீர் அடைப்பை நீக்க, ஊரின் வேளான் போகம் செழிக்க, கண்மாய் நீருக்குள் மூழ்கி, மதகு அடைத்த கட்டையை பிடித்து கொண்டே உயிர்விட்ட நீர்பாய்ச்சி மடைகுடும்பன் முன்னோர்களில் ஒருவர் தெய்வமாக உருளக்குடி அய்யனார் கோவிலில் வணங்கப்படுகிறார்.

மழை வேண்டி நேமிக்கம் போடும் கிராம மக்களே, கண்மாய் நிறையும் அளவு மழை பெற்றவுடன்,
மழையை வழியனுப்பும் தூள்மாவு சாங்கியமுறை கொண்டு மழை நிறுத்தும் கலையும் பெற்றிருக்கின்றனர்.

அக்காலங்களில் தன்னலமற்ற பொதுநலம் எந்த அளவிற்கு மனிதர்களுள் வேர்விட்டு இறங்கியிருக்கிறது என்பதற்கு
கொப்புளாயியும், வழிபோக்கர்களுக்கு அவளின் மோர் தாழியும், அவள் நட்டு வைத்த மரங்களுமே சாட்சி என கதையாடல் செல்கிறது.

கிராமங்கள் தற்சார்பு கொண்டவை என்பதற்கு, உருளைக்குடி கிராமத்திலுள்ள இணக்கமான
பள்ளர் விவசாயிகள், விவசாயத்திற்கு பயன்படும் கலன்களை செய்யும்/மாடுகளுக்கு லாடம் அடிக்கும் ஆசாரிகள், பானை செய்யும் வேளார்கள், பனையேறிகள், தொழில்/வியாபாரம் செய்யும் நாடார்கள் மற்றும் செட்டியார்கள் என அனைவரும் ஒருவொருக்கொருவர் உதவும் விதமான தொழில்களை கொண்டவர்கள். பணபரிவர்த்தனைகள் குறைந்த தானிய கொடுக்கல் வாங்கல் கொண்ட சமூகம். பதுக்கல்கள் அற்ற சமூகம். அருமையில்லையா!!!
போலவே ஆசாரிகள் தொழில்முறை,
வேளான் கலன்களான ஏர், மாட்டு வண்டிகள், மம்பட்டி, கத்தி போன்ற வேளான் பொருட்கள் செய்யவும், மாடுகளுக்கு லாடம் அடிக்கவும், பொன்நகைகள் செய்யவும் என ஒவ்வொரு கிராமத்திலும் இருந்திருப்பதை அறியமுடிகிறது.

ஒவ்வொருக்கும் அவர் சார்ந்த தொழிலின் குணமும் அப்படியே வந்துவிடும் என்பதற்கு குயவர்களான வேளார்களின் குணத்தையும் படம்பிடித்து காட்டபடுகிறது. அவர்களுக்கு மட்டுமல்ல அவர்களின் அஃறிணைகளுக்கும் அக்குணம் வந்துவிடுகிறது. உதாரணமாக, மிருதுவான மண்ணை கொண்டு பதமான முறையில் பானை செய்பவரின் குணம், அதிரந்து பேசாது அமைதியானதாக இருப்பதில் ஆச்சரியமில்லை. போலவே அவர்களின் வண்டிமாடுகளும். எளிதில் உடையக்கூடிய பானைகள் வண்டியில் உள்ளதை உணர்ந்து, கரடு முரடான பாதைகளிலும் பதவிசாக இட்டு செல்லும்.

கதைமாந்தர் பெயர்களாக முத்துவீரன், மடைக்குடும்பன் நீர்ப்பாய்ச்சி, கள்ளாளன், நங்கிரியான், மாதாயி, கொப்புளாயி, செண்பக வேளார், குப்பாண்டி, எலியன், பிச்சை ஆசாரி, முத்து, சித்தரை, மூக்கன் என பல்வேறு தனித்துவ பெயர்களை கொண்டதாக இருக்கிறது.

எலியன், பிச்சாசாரி எனும் கதைமாந்தர்கள் தங்களுடைய உதவிக்கு கைமாறாக, கட்டபொம்மன் வகையறாவிடமிருந்து பொன் நகைகள் பெற்று, அதை புதையலாக காத்துகொண்டு, ஆங்கிலேய ஆட்சி முடியுமென தலைமுறை தலைமுறையாக காத்து கொண்டிருந்தனர். அதையும்
புதையல்காக்கும் முனி என்ன செய்தது என சுவாரசியமாக சொல்லப்பட்டிருக்கிறது.

கிராமிய மாந்தர்களின் உரையாடல்கள் என்பது மெத்த படித்த நாசூக்கதனங்கள் கொண்டவையல்ல. அவரகளது பேச்சுகளில் அந்தரங்க விஷயங்கள் கேலியும் கிண்டலுமாய் வெளிப்படும் இருப்பினும் விரசம் இருக்காது. அதனை இந்நாவலிலும் காணலாம்.

உருளக்குடி கிராமத்தின் இயற்கையின் குளுமையை அனுபவித்தபடி வந்த நமக்கு கண்முன்னேயே அக்கிராமம் அழிவதாகவும் காட்டப்படுகிறது.
ஆங்கிலேயன் ஊக்குவித்த மதமாற்றம்,
அவன் கொணர்ந்து விட்டு சென்ற ஜிலேபி கெண்டை, கருவேலம், பயிர் உரங்கள்.
இதனால் கண்மாயில் வேறெந்த நாட்டு மீன்களும் இல்லாமல் பறவைகள் உண்ணாத இந்தகெண்டை மீன்கள் மட்டுமே பல்கி பெருகியது,. கருவேலமரங்களின் வளர்ச்சி மற்றும் பிறமரங்களின் அழித்தொழிப்பினாலும், பராமரிப்பில்லாத கண்மாயாலும் மேடேறி போய், சூல் வற்றி அழிந்தது நிறைய��்ற கண்மாய்.
கண்மாய் வற்றி கிணற்று பாசனமும் இல்லாது, விவசாயமும் அழிந்தது.
மேலும்,
சுதந்திரத்திற்கு பின்னான அரசியல் நாசங்கள் உருளக்குடியை கிட்டத்தட்ட சுடுகாடாகவே மாற்றிவிட்டிருந்தது என முடிகிறது நாவல்.
இதயம் கனக்கும்படியான முடிவு.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் கிராமங்களின் நிலை இதுதான் என பட்டவர்த்தனமாக படம்பிடித்து காட்டப்பட்டிருக்கிறது.

சாதிகள் பல இருந்தாலும் ஒற்றுமையாக வாழ்ந்த கிராமங்கள், இப்போதைய காலகட்டத்தில் சிலரின் தன்னலங்களாலும் பேராசைகளாலும் ஏதுமற்ற வனாந்திரங்களாக மாறிவருகின்றது. அதனை மிகத் தெளிவான முறையில் பெருநாவலாக வடித்திருக்ருக்கிறார், திரு சோ.தர்மன். இந்நாவல் நான்கு விருதுகள் பெற்றதில் ஆச்சரியமில்லை. அதற்கும் மேலான தகுதியுள்ளதே.

தனது ஊர் மண்ணை விட்டு குடிபெயர்ந்து வந்தவர்களுக்கு, மீண்டும் தனது ஊர்வாசம் நுகர ஓர் அறியவாய்ப்பு இந்நூல்.

சென்ற சென்னை புத்தக கண்காட்சியில்(2020),
இப்புத்தகத்தை எழுதிய திரு சோ.தர்மன் கையாலேயே இப்புத்தகத்தை பெற்றதில் பெரு மகிழ்ச்சி.

🙏🏻
183 reviews17 followers
August 18, 2017
So.Dharman is an important tamil writer, who has documented the lives of the Dalit community in his previous works such as Koogai. He is a natural successor to the writings of Ki.Rajanarayanan , Poomani who captured the rural lives of tamilnadu. Their stories are rooted in realistic portrayal of rural lives in tamil literature. They are masters in capturing reality in a photographic natural free flowing style. So.Dharman has captured the dalit life, the odds faced by them in rural life even today in his previous works. His previous novel Koogai captures the conflict and oppression faced by Dalits. சூல் his latest work which was awarded the best novel of year 2016 by Vikatan in their yearly awards, is a slight shift from his Dalit forte. It still is the rural life that Dharman explores but its in its entirety not just the Dalit but the whole of the rural life.

Sool has an interesting form as a novel, for eighty percentage of the novel the rural life exists in a timeless expanse. Timeless in the sense there is no clear indication of the time of the novel, still one can guess the time through incidents coming from outside. It gives us a feel that the rural life, its customs and traditions exist in a manner which is timeless, that has not changed from a long time. There is a certain rhythmic circularity and order about the rural life like that of the rains which bestow it with all the wealth. Rain is crucial to the rural life, every prosperity of the village stems from it. Hence we are introduced to the rural life with the NeerPachi ( Neer in tamil is water, pachi is the one who regulates the flow of water to the farms) who manages the Kanmaai(the tank in which water is stored), and regulates the flow of water to the village farms owned by the families. The management of Kanmaai is central to the rural life as it ensures the availability of water for farming. Every year before the rains arrive the excess silt deposited is cleared of from the kanmaai so that the capacity is not diminished. This silt as it is mineral rich is equally distributed to the farm families to be used in their land. The Neerpachi also monitors the Kanmaai for places of weakness and ensures that the trees and bushes around the Kanmaai are not destroyed because they act as natural fences to the Kanmaai. This integral management of the resources is well documented in the novel. The rural life captured by So.Dharaman is highly interdependent not just among the people living also the birds and animals which depend on the farm for survival. The agriculture as the first form of economic activity also creates ancillary work for carpenters, ironsmith, potters whom depend on the farm family for their life. The village is well contained and managed autonomously, we see very little impact from outside.

The rural life is highly religious and mythical and firmly believes in the idea of karma, especially the repercussions of bad karma. The novel also shows the formation of rural deities, a way in which the village attone's for collective mistakes or how it remembers the great sacrifices people made for the village.
These deities live and protect the life of people in rural life. The novel is full of amazing stories on heroic sacrifices especially the life of Koppulaai who being chid-less manages to become the loving of the mother of the entire village.

The novel takes dramatic turn after the arrival of the modern democratic government. Indian independence was achieved during the heights of modernity where people genuinely believed that modern science will radically change the world. So post Independence the government initiated steps to reform the agriculture practiced in rural villages and it in excited zeal was not in any mood to study the current practices prevalent in rural india. It completely reverses the holistic water management done by the traditional NeerPachi by appointing a government employee with very little first hand experience.
The rise of atheistic politics and complete disregard for the rural beliefs literally killed any morality. The newly elected rural head chief, who is a native of the same village completely disregards any tradition inspired by the
atheism promoted by his leader is corrupt to the core. He gets Puramboke land which is land belonging to commons written to his name. And he forces the Neerpachi to divert water to this land against practice that water from Kanmaai is used only for the Nanjai land. On Neerpachi's refusal appoints a government employee to oversee the Kanmaai. The destruction of the Kanmaai is slow and painful it reads like the destruction of all traditional knowledge and life.
The yearly removal of silt is stopped , which reduces the collective capacity of the Kanmaai. The pleas of the people to clean the Kanmaai was mostly ignored saying that things take time in government dealings. The water level in Kanmaai goes down, the non availability of the silt reduces the organic capacity of the farm land. Government ill introduction of Seemai Karuvelam tree from Australia as fences, grow in such breath take pace it sucks the already depleted water table.
The government also introduced the Silpa kendai a type of fish which continues to destroy native fish even today. The scant regard for the environment and the traditional agricultural practices is a classic case of throwing the baby with the bath tub.
It is understandable that our rural life was plagued with issues like caste system, the practice of untouchability etc but it also had years of traditional knowledge. It is unfortunate that we gave scant regard for our ancestors knowledge in agriculture. It is something which continues to impact us even today.

Important work ,

Profile Image for MP.
126 reviews1 follower
November 25, 2021
சூழ் - உருளைக்குடி என்ற ஒரு கிராமத்தின் கதை. ஒரு கண்மாயை சார்ந்து வாழும் கிராமத்து மக்களின் அன்றாட காரியத்தை பேசிக்கொண்டே நம் நாட்டின் கலாச்சாரங்களை விவரிக்கின்றது.

This book will give us a glimpse of what happened in the villages from the 18th century to somewhere around 1960 in a fictional way. In villages, you can find a lot of unique gods. You can never find that particular god in some other place. Sool explains about that unique god's creation as well. You will start to admire them.

You will understand a lot about the villages irrespective of whether you are from or not from a village.

This book ends with the events that destroyed the economy of the villages by the Britishers when they left India. You will start to think a lot after reading the book.

No wonder this book received the prestigious Sahitya Academy award.
Profile Image for Arunaa (IG: rebelbooksta).
129 reviews17 followers
July 24, 2021
In conjunction with Read! Fest 2021 organized by the National Reading Movement SG and National Library Board of Singapore. 🇸🇬
@readingnationsg @nlb.singapore
@nationallibrarysg
@publiclibrarysg

மதிப்பிற்குரிய ஐயா சோ தர்மன் எழுதிய 'சூல்', என் சந்ததியினருக்கு வழங்கப்பட்ட ஒரு மகத்துவமான சரித்திரப் படைப்பு. புனைவு இலக்கியமாக இருந்தாலும், இயற்கைத்தாயை மட்டுமே சார்ந்து உயிர் வாழும் உருளைக்குடி மக்களின் வாழ்க்கை கதை.

இந்த நாவலில் மொத்தம் 297 கதாப்பாத்திரங்கள், அதில் 53 பெண் கதாநாயகிகள். குறிப்பாக கொப்புளாயி என் மனதைக் கவர்ந்தவள். பல்வகை உணர்ச்சிகளை எழுப்பும் 'வெத்தலக்கொடி' என்ற கரிசல் காட்டுப் பேச்சு வழக்கில் எழதிருக்கிறார். இவைப் போன்ற குறிப்புகளை சமீபத்தில் நடந்த, சிங்கப்பூர் நூலக வாரியம் ஏற்பாடுச் செய்த மெய்நிகர் வாசகர் கூட்டத்தில் பகிர்ந்துக் கொண்டார்.

சூலி என்றால் உயிர்க் கொடுக்கும் தாய் அர்த்தம். அவ்வூரின் கண்மாய் குளத்தின் ஏற்றத்தாழ்வுகளை நன்கு புரிந்து அதாவது நீர் வற்றினாலோ அல்லது பெருகினாலோ, விவசாயத்தையும் தங்கள் வாழ்வுதனையும் எப்படி சாமர்த்தியமாக பராமரித்து வந்தார்கள் என்பதை வாசிக்கும் போது சற்றே வியப்புக்குரியது.

ஒரு தூக்கணாங்குருவி அதன் கூட்டின் வாசலை தென்மேற்கு திசையை நோக்கி கட்டிருந்தால், வடகிழக்கு பருவமழை அதிகம் வரும் என்பதற்கு அறிகுறி. அதுவே வடகிழக்கு திசையை நோக்கி கட்டிருந்தால் தென்மேற்கு மழை பெய்யும் என்று அறிகுறி.

பழங்குடியினரை உதாசீனப்படுத்தி இயற்கையை சீரழித்து வருகிறது நம் மனிதகுலம். பழங்குடி மக்கள் ஆதிவாசிகள் மகத்தான செயல்களை கையாண்டு இயற்கைத்தாயை வணங்கி இயற்கையை பேணிக் காத்தனர். நாம் செய்துக் கொண்டிருக்கும் அட்டகாசங்கள் உலகளவில் மீண்டும் மீட்க முடியா தண்ணீர்ப் பிரச்சினையை உண்டாக்கியுள்ளோம்.  பருவமழைக்கு பதிலாக, புயல்மழை வீசுகிறது. இப்போது அழிவு ராட்சத வேகத்தில் பேரழிவாக மாறிய சோதனை நிலை.

சோ தர்மன் அனுபவப் பூர்வமாகவும் அதே சமயம்  தத்துருபமாகவும் எழுதி இம்மாபெரும் படைப்புக்குத் தக்க சாகித்ய அகாடமி விருதுப் பெற்றுள்ளார். உலகத்திற்கே நிகர் இல்லா சேவையை தமது எழுத்து மூலம் செய்துக் கொண்டிருக்கிறார்.

#சோதர்மன் #சூல் #நாவல் #அடையாளம்பதிப்பகம் #தமிழ்நாவல் #கண்மாய் #igreads #bookstagram #sgbookstagram #tamilbookstagram #ReadFest #nlbsg #publiclibrarysg #whatareyoureadingsg #readingnationsg #tamilbooks #tamilauthor #sool #chodharman #bookworm #book #read #booklover #tamil #nationalreadingmovement #ReadFest2021 #NLB #adaiyaalamindia
Profile Image for Ramprakash Vivekananthan.
5 reviews
May 24, 2020
நீரின்றி அமையா துலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

- முப்பாலின் முதற்பாலில் ஒரு துளி எடுத்து இந்த "சூல்" புதினத்தின் நோக்கத்தை, என் அறிவுக்கு எட்டிய அளவில் விமர்சனம் செய்கின்றேன்.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Jagan Sagaya Nathan.
26 reviews2 followers
April 6, 2020
சுதந்திரம் அடைந்த பின்னர். சில அரசியல் கயவர்களின் தன்னலத்தால், நாம் இழந்த பெரும் வரங்கள் எவ்வளவு என்பதனை, சூல் வாசித்த பிறகு தான் நான் தெரிந்து உணர்ந்தேன்...
Profile Image for Sathish Karky.
21 reviews
June 19, 2021
அரசியல் சாயல் கொண்ட ஓர் குப்பைக் கதை.
Profile Image for Ananthaprakash.
84 reviews2 followers
March 9, 2024
சூல் - சோ. தர்மன்

எட்டயபுர சமஸ்தானத்திற்கு உட்பட்ட ஊரான உருளைக்குடியும் அங்கு நிறைசூலியாருக்கும் கண்மாயையும் அதைச் சுத்தி வாழ்ற கரிசல் மண்ணின், மக்களின் வாழ்வையும், அறத்தையும் நூறாண்டுகளுக்கு முன் தொடங்கி சுதந்திரத்துக்குப் பின் வரையிலான கண்மாய் கரை நாகரிகத்தைக் கொண்ட ஒரு கிராமத்தின் ஒட்டுமொத்த ஆவணம் தான் சூல்.

கதை தொடங்குனதுல இருந்தே ஆரம்பிக்கிற - வெறும் இயற்கையை மட்டுமே நம்பி விவசாயம் செய்கிற கரிசல் மக்களின் பட்டறிவையும், தூக்கணாங்குருவி கூடு கட்டுகிற உயரத்தை மட்டுமே வைத்து மழையோடா அளவையும், கூட்டின் வாசல் எந்தப்பக்கம் இருக்குன்னு பார்த்து அதை வைத்தே மழையோட திசையை கணிக்கிறதும், கண்மாய்க்கும், அந்த ஊர் மக்களுக்கும் காவலாக இருக்கிற நாட்டார் தெய்வங்களான அய்யனார் சாமிகளும், மடைக்குடும்பன் சாமிகளும், இருளப்ப சாமிகளும், குரவைசாமிகளும் எப்படி அந்த ஊரிலேயே வாழ்ந்து மறைந்து சாமிகளாக ஆனாங்கனும், அனுமன் முனி கதை, பேய்க் கதை, பக்கத்து ஊரு வெற்றிலைக்கு மவுசு அதிகம்னு தெரிந்து பொய் சொல்லியாச்சும் அதோட ரகசியத்தை கத்துக்கிற சுவாரசியமான வெற்றிலை விவசாயி கதைன்னு - அப்படியே கொட்டி கிடக்கிற நாட்டார் கதைகளைப் படிக்கப் படிக்க ஒரே வியப்பும் ஆச்சரியம் தான் எனக்கு.
உருளைக்குடியையும், ஒரு போதும் காசுக்குச் சாப்பாடு தருவார்கள் அப்படிங்கறதே ஏத்துகவே முடியாத, மனுசங்க, மாடுங்கன்னு எல்லாருக்கும் தாயாகிப் போன கொப்ளாயும், கண்மாய நிறைசூலியா பார்க்கிற நீர்ப்பாச்சியும், ஊரையே அப்படி நேசிக்கிற குப்பாண்டி சாமியும் ஒரு போதும் மறக்கவே முடியாத மனுசங்களா மாறி படிச்சு முடிச்ச பிறகும் கூட அப்படியே மனசுலையே நிக்கிறாங்க.

400 பக்கங்களுக்குக் கண்மாய், கரிசல் மண், அதைச்சார்ந்த மனிதர்கள், மரம், செடி, கொடி, பறவைகள், மீன்கள், அவர்களுடைய வாழ்வியல், அற உணர்வு, தொன்மம், கலாச்சாரம், கேலியும், கிண்டலும் நிறைந்த வட்டார வழக்கு, மண் சார்ந்த கதைகள், கிளைக்கதைகள் இப்படின்னே சுவாரசியமா நகர்கிற இந்த நாவலின் இறுதி பக்கங்கள் மட்டும் மிகப்பெரிய ஏமாற்றம்.

கடைசி 100 பக்கங்களில் சுதந்திரத்திற்கு பின்னான உருளைக்குடியை காட்சிப்படுத்தின இடங்களில், எழுத்தாளர் தன்னுடைய சுய அரசியல் விருப்பு, வெறுப்புகளையும், பிற்போக்கான கருத்துகளையும் திணித்த இடங்கள் ஒரு மாதிரி நெருடலாகத் தான் இருந்துச்சு.

மன்னர் ஆட்சியில் மக்கள் அவர் அவர்களுக்கான தொழிலை செய்து நிம்மதியா வாழ்ந்தாங்கனு சொல்லி மக்களாட்சியை விமர்சிக்கிறதும், மதம் மாற்றத்தை ஒரு கதையா கொண்டு வந்து ரொம்ப தீவிரமா மதமாற்றத்தை விமர்சிக்கிறதும்.
கடவுள், சாத்திரங்களை மதிக்காத கூட்டத்தால தான் கலாச்சார சீரழிவுன்னு ஒரு குறிப்பிட்ட கொள்கை பேசுகிற அரசியல் தலைவர்களை மட்டும் விமர்சிப்பதும், மாடுகளை கொல்கிறதும் இறைச்சியா சாப்பிடறதும் வம்ச பாவமென்றும், பூணூல் போட்ட பிராமணனும், தாலி போட்ட பொம்பளையும் தன்னோட மார்புல சத்தியத்தையே சொமந்துட்டு இருக்காங்க. தாலி போட்ட பொம்பள சத்தியத்தை மீறுவாளா? அதே மாதிரி, பூணூல் போட்ட பிராமணன் வாக்கு தவற மாட்டானும்- இது மாதிரி இன்னமும் எத்தனையோ நெருடல்கள்.

இறுதியா கடைசி 100 பக்கங்களையும், மேலே சொன்ன நெருடலான இடங்களை தவிர்த்திட்டு பார்த்தா பரபரப்பிற்கும் , விறுவிறுப்புக்கும் கொஞ்சமும் குறையில்லாத நாவல் தான் சூல். என்னதான் நாவலின் ஒரு சில இடங்களின் மீது விமர்சனம் இருந்தாலும், சோ. தர்மருடைய எழுத்துநடைக்காகவும், அவர்கிட்ட கணக்கே இல்லாமல் கொட்டி கிடக்கிற கரிசல் மண் சார்ந்த நாட்டார் கதைகளுக்காகவும், அவருடைய வேறு சில படைப்புகளையும் கட்டாயம் படிக்கணும்னு ஆவலைத் தூண்டின நாவல் தான் சூல்.
Profile Image for Sangamithra.
58 reviews26 followers
February 11, 2021
நூல் : சூல்
ஆசிரியர் : சோ.தர்மன்
பக்கம் : 500
பதிப்பகம் : அடையாளம்

நீங்கள் பேருந்திற்கு முன்பதிவு செய்ய வேண்டியதில்லை. தாத்தா பாட்டியிடம் ஊருக்கு வருகிறேன் என முன்கூட்டியே தகவல் சொல்ல வேண்டியதில்லை. இந்தப் புதினத்தின் வாயிலாகவே தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் ஒரு கிராமத்திற்கு நீங்கள் செல்லலாம். நுழையும் காலம் மன்னராட்சியாகவும் வெளியேறும் காலம் மக்களாட்சியாகவும் இருக்கும். உங்களுடைய வயது கூடியிருக்காது. கவலை வேண்டாம். அலமாரியில் இருந்து வெளியே விழும் ‘நார்னியா’வின் முக்கிய கதாபாத்திரங்கள் போல நீங்கள் அதே வயதிலேயே இருப்பீர்கள்.

கிராமங்களில் வாழும் சாதாரண மனிதர்களை மையமாகக் கொண்ட கதை இது. இயற்கையோடு கலந்த வாழ்வே கதையின் அச்சாணி. நரிகள், பூனைகள் வந்து முட்டையை எடுத்துப் போகும் எனத் தெரிந்தும் மாடப்புறா ஏன் தாழ்வான இடத்திலேயே கூடு கட்டி முட்டையிடுகிறது? தூக்கணாங்குருவி ஏன் பெரும்பாலும் ஆண் பனையிலேயே கூடு கட்டுகிறது? ஏன் கூட்டின் பக்கவாசல் சில நேரங்களில் வடக்கு பார்த்தும் சில நேரங்களில் தெற்கு பார்த்தும் இருக்கிறது? இந்த மாதிரியான கேள்விகளுக்கு நகரங்களில் வாழும் நம் போன்ற மனிதர்களுக்கு பெரும்பாலும் விடை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சபைகளில் பேசுவதற்கான வார்த்தை அல்ல என வரையறுக்கப்பட்ட கொச்சை வார்த்தைகளும், இரட்டை அர்த்தங்கள் பொதிந்த வசனங்களும் உரையாடல்களில் மிகுந்திருக்கும் கதைக்களம் கிராமம் என்பதால். சாதி சில இடங்களில் பிரிவுகள் போலவும் சில இடங்களில் பிரிவினைகள் போலவும் காட்டப்பட்டிருக்கும். நமது பண்பாட்டுடன் ஒட்டிப் போன நம்பிக்கைகளுடன் சேர்த்து ‘என்னம்மா இப்பிடி பண்றீங்களேமா’ என்ற அளவிற்கான சில மூடநம்பிக்கைகளும் வந்து போகும்.

புத்தகத்தின் கடைசி அத்தியாயம் வரையும் புதிய புதிய கதாபாத்திரங்கள் வருவதால் அடுத்து என்ன நடக்கும் என்பது போன்ற மர்மங்கள் சூழ்ந்த பெரும் விறுவிறுப்புடன் புத்தகம் நகரவில்லை. ஆனால் கூட்டமான ஒரு கிராமத்தின் மத்தியில் இருப்பது போன்ற உணர்வு மேலிடுவதால் சலிப்பு உண்டாகவில்லை.

யாரெல்லாம் படிக்கலாம்?
நாட்டுப்புறவியல் மீது ஆர்வம் உள்ளவர்கள்
மண் சார்ந்த இலக்கியங்கள் மீது காதல் கொண்டவர்கள்
தூத்துக்குடி மாவட்ட வட்டார வழக்குச் சொற்கள், அன்றாடம் பயன்படுத்தும் கருவிகளின் பெயர்கள், நெல், மீன் வகைகளின் பெயர்கள் பற்றிய குறிப்புகளைத் தேடும் ஆராய்ச்சியாளர்கள்
துடியான நாட்டார் தெய்வங்களின் பின்னணியை அலசுபவர்கள்
நகைச்சுவையான உரையாடல்களைப் படித்து மன அழுத்தத்திலிருந்து விடுபட நினைப்பவர்கள்
முக்கியமாக மாடப்புறா, தூக்கணாங்குருவி புதிரை அவிழ்க்க முனைபவர்கள் அனைவரும் இந்தப் புத்தகத்தை வாசிக்கலாம்.

மொத்தத்தில் உருளைக்குடி கிராமத்திலிருந்து கனத்த மனதுடனோ அல்லது ‘இதுதான் நம்ம நாட்டோட நெலம(டெல்லி விவசாயிகள் போராட்டம்)’ என்ற வருத்தத்துடனோ வெளியேறுவீர்கள். கிராமத்திற்கான அடையாளத்தைக் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து நகரத்திற்கான அடையாளத்தை, தொழில்நுட்ப வசதிகளைக் கொஞ்சம் கொஞ்சமாய் ��ற்று வரும் இந்த மாற்றம் சரியானதா தவறானதா எனத் தெரியவில்லை. முற்றிலும் தவறானது எனப் புறந்தள்ளவும் முடியவில்லை. எல்லா மாற்றங்களையும் ஏற்றுக்கொண்டேதான் இந்த வையம் சுழன்று கொண்டிருக்கிறது.

நீருடன் வளமாக இருந்தாலும் சரி, வறண்டு போயிருந்தாலும் சரி வருடத்திற்கு ஒருமுறை கோயில் கொடைக்கு செல்லும்போது நமது சொந்த கிராமம் நம்மை வரவேற்க எப்போதும் தவறுவதில்லை.
Profile Image for Bharath Kumar.
6 reviews1 follower
March 20, 2022
இந்த நாவல் உருவான கதை என்று 2 - 3 பக்கங்கள் எழுதியிருந்ததை படித்த பின்னர் இது விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் அதன் நுணுக்கங்களை அதை நாம் மறந்த கதையை கூறும் நாவல் என்று நினைத்தேன். ஆனால், நாவலாசிரியர் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உருளைக்குடி மக்களின் வாழ்வியலைப் பற்றி எழுதியிருக்கிறார். 200 வருட வரலாற்றை நம் முன் கொண்டுவந்திருக்கிறார்.

குளத்தின் முக்கியத்துவத்தையும் குளம் சார்ந்து வாழ்வது மனிதர்கள் மட்டும் அல்ல, பல விதமான பறவைகள், எண்ணற்ற மீன்கள், கால்நடைகள், பயிர்கள், கிணறுகள் போன்ற எல்லாமே குளத்தை நம்பி இருப்பதையும் அதை பராமரிக்க ஊரே ஒன்று கூடி தூர்வாரி சுத்தம் செய்து அனைவரும் ஒன்றாக வேறுபாடில்லாமல் பகிர்ந்து ஒற்றுமையாக வாழ்ந்த அழகை கண் முன் காட்டுகிறார். குளம் பராமரிப்பதில் எல்லோரும் பங்கு கொண்டு அனைவரும் அவர் அவர் வேலையே செய்து பாதுகாத்தார்கள்.

நம் முன்னோர்கள் பாடுபட்டு குளத்தை பாதுகாத்து தெய்வத்திற்கு ஈடாக வணங்கி வந்தார்கள், ஆனால் சுதந்திரத்திற்கு பின் மக்களாட்சியில் அரசின் தலையீட்டால் எல்லாம் சீரழிந்து சின்னாபின்னமாயின.

சக மனிதர்களிடம் காட்டும் அக்கறை, அவர்களின் பண்பு, கேலி, கூத்து, கிண்டல், கும்மாளம், சோம்பேறித்தனமில்லாத வாழ்வு, கால்நடைகளிடமும் இயற்கையிடம் காட்டும் காதல் பற்றி குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கும் போது அந்த வாழ்வுமுறை இப்போது இல்லை என்று ஏங்க வைக்கிறது.

அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் வழிபட்ட தெய்வங்கள், சித்தர்கள், பண்டாரங்கள் அவர்கள் பின்பற்றிய சடங்குகள், சம்பிரதாயங்கள், செய்த பாவங்கள் அதற்கான பரிகாரங்கள் மற்றும் பேய்கள், பிசாசுகள், முனிகள் பற்றி பார்க்கும்போது ஆச்சரியமாகவும் நம்பமுடியாமலும் நம்பால் இருக்கமுடியாதவாறும் உள்ளது.

மன்னர் கட்டபொம்மு மற்றும் ஊமைத்துரையின் வரலாறு சிறப்புத்தோற்றம் போல் வந்து செல்கிறது.

நீர்பாய்ச்சி, கொப்புளயி, குப்பாண்டி முதலிய கதாபாத்திரங்கள் என் மனதை விட்டு நீங்காமல் என்றும் நிலைத்திருப்பார்கள்.

நம்முடைய இயற்கை செல்வங்களைப் பற்றி அறியும்போது ஆச்சரியமாகவும் அதே சமயம் அதை நாம் பாதுகாத்துப் பேணாமல் அதை அழித்து அனைத்திற்கும் பிறரை நம்பி இருக்கும் நிலையை நினைக்கும்போது அதிர்ச்சியாகவும் உள்ளது.

உழவுத்தொழில் சுதந்திரத்திற்கு முன் எப்படி இருந்தது பிறகு எப்படி மாறியது என்பதை தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்.

இதெல்லாம் பார்க்கும் போது வெள்ளைக்காரனே நம்மை ஆட்சி செய்திருக்கலாம் என்றே எண்ணவைக்கிறதைத் தவிர்க்க இயலவில்லை.
Profile Image for Shanmugam Udhayan.
50 reviews10 followers
August 12, 2017
2016 ஆம் ஆண்டிற்கான சுஜாதா விருதை பெற்றது இந்த 'சூல்' நாவல்... நான் படிக்க தேர்ந்தெடுத்தற்கான முழு காரணம்... இந்த நாவலை வாசிக்கும் போது எனக்கு நினைவில் வந்த நூல்களை கூறினால், சூல் எந்த வகையான நாவல் என்பது எளிதில் புரியும்... கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள் மற்றும் ஆதிமங்களத்து விஷேசங்களை நினைவுப்படுத்தியது... உருளக்குடி கிராமத்தின் மனிதர்களையும் அவர்களின் நம்பிக்கை மற்றும் வாழ்க்கை முறைகளையும் பதிவு செய்துள்ளார், முத்துவீரன் என்ற கதாபாத்திரம் சொல்லும் இரட்டை அர்த்த உரையாடல்கள் தனிச்சிறப்பு வாய்ந்தது, ஊருக்கு ஒரு பெருசு அப்படிதான் இருப்பாங்க என்பதே அதற்கு காரணம், 'சூல்' என்ற தலைப்பு இது பெண்ணின் பெருமை பேசும் நாவல் என்றிருந்தேன், ஆனால் ஊரின் நீர் நிறைந்த கண்மாயை சூல் என்று நிறுவுகிறார்.... உருளக்குடி மக்களின் மூடநம்பிக்கைகள் நம்பிக்கைகளாகவே தந்திருக்கிறார்... முற்போக்காக சிந்திக்ககூடியவர்கள் இதை எப்படி எடுத்து கொள்வார்கள் என தெரியவில்லை.... கதையில் வரும் மனிதர்களையும் சில நிகழ்வுகளையும், என பால்ய கால வாழ்க்கையின் மூலம் அறிவேன்...கண்மாயும் அதை சுற்றியுமே கதை நகர்கிறது... கடவுள் மறுப்பு, அரசியல் கட்சிகளின் செயல்பாடு ஆகியவற்றை மறைமுகமாக பகடி செய்கிறார்.... தவறவிட கூடாத ஒரு முக்கியமான நாவல்....
Profile Image for Titus Manoj Kumar.
20 reviews
March 19, 2022
"சூல்" ஒரு வித்யாசமான எழுத்து நடையை கொண்டது. நான் இதுவரை வாசித்த புத்தகங்களில் இந்த நடையை பார்த்ததில்லை. அதாவது, ஒரு கதைக்கு நாயகன் அல்லது நாயகி இருப்பர். அவர்களை சுற்றி கதை நகரும். "சூல்" ஒரு கண்மாயை நாயகனாக நாயகியாக வைத்து கொண்டு அதை நம்பி இருக்கும் மனிதர்களின், மீனின், கொக்கின், பறவையின் வாழ்வியலை வெளிப்படுத்துகிறது. எஸ் ரா வின் சஞ்சாரத்தில் இந்த நடையை சிறிது காணலாம்.

மனித இயல்பின் மேன்மையையும் கீழ்மையையும் அவ்வாழ்வியல் மூலமாய் சோ தர்மன் நமக்கு கற்று கொடுக்கிறார். அதே போல் அந்த நிலத்தின், இயற்கையின் அறிவியலை அம்மக்கள் எவ்வாறு புரிந்து கொண்டுள்ளனர் மற்றும் அந்த அறிவியலை எவ்வாறு அடுத்த தலைமுறைக்கு கடத்தி செல்கின்றனர் என்றும் சோ தர்மன் எடுத்துரைக்கிறார்.

மொத்தத்தில் "சூல்" ஒரு நல்ல வாசிப்பு, நன்றி சோ தர்மனுக்கு.
3 reviews
March 14, 2020
இந்நாவல் கண்மாயை கதாநாயகியாக கொண்டுள்ளது.. கண்மாய் ஆயிரம் ஆயிரம் உயிர்களை பிரசவிப்பதாக தர்மன் ஐயா வார்த்தையின் வாயிலாக, கண்மாயை தாயாகவே பார்க்க முடிகிறது... கண்மாயை கருப்பொருளாக வைத்து, தமிழகத்தின் அரசியலை அவர் பார்வையில் பேசி இருக்கிறார் தர்மன்...
Profile Image for Ramakrishnan.
1 review
Read
January 25, 2021
good plots. brings the complete liveliness to village during the last century of British rule in India.
Many characters with unique and exceptional casting.
3 reviews
September 17, 2021
Sool is yet another tamil classic every tamil book reader should read.
This book gives a dimension of the village from understanding and saving the environment with the minute details.
Profile Image for Vishnu M.
13 reviews1 follower
January 4, 2022
நாவல் பற்றிய விமர்சனங்கள் இருப்பினும், தூர் வாராத கண்மாய்யினால் நீர் சேமிப்பற்ற ஊர் எப்படி அல்லோலப்படும் சம்சாரிகளின் விவசாயம் எவ்வாறு பாதிப்பாகும் என்பதை விளக்குகிறார் -சோ தர்மன் அவர்கள்
27 reviews1 follower
April 15, 2022
அற்புதம்!
வெள்ளையர்கள் காலத்திலும், சுதந்திரம் அடைந்த காலத்திலும் இந்திய கிராமங்கள் கண்ட அரசியல் மாற்றங்கள், அவை இயற்கை வளங்களில் ஏற்படுத்திய பாதிப்புகள் என இவ்வரலாற்று புதினம் நம்மை கொண்டு செல்லும் பாதை மிக மிக சுவாரஸ்யம்!
Profile Image for Dhanush K.
22 reviews1 follower
August 14, 2023
"சூல் - ஒரு கிராமம் (கண்மாய்) முழுவதுமாக அளிக்கப்பட்ட கதை"

ஒரு நூற்றாண்டு காலத்திற்குள் ஒரு கிராமத்தின் அழிவை அருகில் இருந்த காணும் அனுபவத்தை கொடுக்கிறது சூல்

எண்ணிலடங்கா கதாபாத்திரங்கள் உள்ளடங்கிய போதிலும் எந்த இடத்திலும் சிறிதளவு சலிப்பையும் கொடுக்கவில்லை

நாவலில் வரும் ஒவ்வொரு இறப்பும் வருத்தத்தை நிரப்புகிறது

நாவலை படித்து முடிக்கும் வரை பல வெள்ளந்தி மனிதர்களுடன் வாழும் கிராம வாழ்க்கையின் உணர்வை நம்மில் உருவாக்குகிறது

நாகரீகம், கடவுள் மறுப்பு, முன்னேற்றம் என்ற பெயரில் நாம் இயற்கையுடன் கூடிய உறவிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம்

மேலும் இவை தேவைதானா என்ற கேள்வியையும் நம்மில் எழுப்புகிறது சூல்

கடவுள் பற்றி நகையாடும் சில இடங்களில் கூகை நாவலில் வரும் சீனி - அய்யர் பேசிக்கொண்டதை நினைவு படுத்தியது
"கடவுளே இல்லனு சொல்றான், எல்லாமே இயற்கையின்னு சொல்றான்,
நம்ம இயற்கையதானே கடவுள்னு சொன்னோம்..."
14 reviews
February 4, 2023
தமிழ்நாட்டின் நீர் நிலைகள் பற்றிய மிக முக்கியமான நாவல்,

ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு குறிப்பாக திராவிட இயக்கங்கள் எவ்வாறு நீர் நிலைகளிலை பராமரிக்க தவறினார்கள் என்பது பற்றி தகவல் சொல்லப்படுகிறது.

பறவைகள், செடிகள், மிருகங்கள் இயற்கை வேளாண்மைக்கு எவ்வாறு முக்கிய பங்காற்றுகிறது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது இந்நாவல்
Profile Image for Dani Daniel.
6 reviews
January 2, 2021
கதையின் கதாபாத்திரங்கள் தன்மை முன்னுக்குப் பின் முரணாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Displaying 1 - 30 of 31 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.