இரண்டு கெட்டவர்கள் ஒரே இடத்தில் இணக்கமாகக் காலம் தள்ள முடியாது.
தொழில் பார்ட்னரான ஜெயராஜ் பொய் கணக்கு காட்டி பணத்தைத் திருடுவதால் எழும் சண்டையில் விஜயகுமார் கொல்லப்படுகிறான்,அவனின் உடல் தடம் தெரியாமல் அழிக்கப்படுகிறது.
தான் செய்த கொலையைப் பற்றி ஜெயராஜ் பேசும் போது அதைக் கேட்ட நவகோடியை கொன்று உடலின் சில பாகங்கள் தன் வீட்டில் இருப்பது போல் பார்த்துகொள்கிறான்.
போலீஸ் கேட்டாலும் யாரோ கொன்று விட்டு வீண் பழியைத் தன் மேல் போட முயல்கிறார்கள் என்று காரணத்தைச் சொல்லலாம் என்று உடல் பாகத்தை மனைவி கண்ணில் படுவது மாதிரி ஒளித்து வைக்கிறான்.
பெண்கள் விஷயத்தில் வீக்கான விஜயகுமார்,வெறுத்து போன அவனின் மனைவிக்கு நவகோடி மகன் தினகரனுடன் தொடர்பு. முன்பு கள்ளநோட்டு அடித்து மாட்டிய ஜெயராஜ் என்று முக்கியக் கதாபாத்திரத்திற்கெல்லாம் ஒரு குற்ற பின்னணியுள்ளது.