மறைக்கப்படும் உண்மைகள் வெளிவரும் வேளையில் உச்சபட்ச தவறாக அது பதியும்.
காதலித்த அத்தை பையன் எதிர்பாராமல் இறந்த பிறகு அவனின் நினைப்பில் சுழலும் வேதாவிற்குத் தான் எதிர்பார்த்த அளவிற்கு அவன் நல்லவன் இல்லை என்று அறியும் போது முற்றிலும் அவனைப் பற்றிய நினைவில் இருந்து வெளிவந்து விடுகிறாள்.
தன் மேனேஜர் நந்தகோபால் விரும்பி மணக்க கேட்டதில் எவ்வித வித்தியாசத்தையும் உணராதவள் மணந்த பிறகு எதையோ தன்னிடம் மறைக்கிறான் என்ற உள்ளுணர்வு வேதாவை துரத்துகிறது.
மூன்றுவயது குழந்தைக்கு அப்பாவான நந்தகோபால், அக்குழந்தையின் பொருட்டே வேதாவை மணந்து கொண்டிருக்கிறான். முதல் திருமணம் நடந்ததையே மறைத்ததால் பிரிவை கையில் எடுக்கும் வேதா அக்குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நந்தகோபாலை மன்னித்துவிடுகிறாள்.