Tiruchirapalli Srinivasan Rangarajan, (Tamil: திருச்சிராப்பள்ளி ஶ்ரீனிவாசன் ரங்கராஜன்) professionally credited by his pseudonym Vaali (Tamil: வாலி) was an Indian poet who has the record for writing the most songs in Tamil cinema. He is also recognised for a five-decade long association in the Tamil film industry and has written over 15,000 songs. He acted in a number of films, including Sathya, Hey Ram, Paarthale Paravasam and Poikkal Kudhirai. He was honoured by the Government of India with the Padma Shri, India's fourth highest civilian honour in 2007.
2013 வாக்கில் வெளிவந்த புத்தகம். கலைமகள், ஆனந்த விகடன், குமுதம், இதயம் பேசுகிறது, புதிய பார்வை போன்ற பத்திரிகைகளில் பல வருடங்கள் முன் வந்த வெளிவந்த கதைகள்.
வாலி இப்புத்தகத்தின் முன்னுரையில், "சிறுகதை தான் என் எழுத்துப் பணிக்குப் பிள்ளையார் சுழி. சிறுகதையிலிருந்துதான் சித்திரத்திற்கு வந்தேன், சித்திரத்திலிருந்து தான் நாடகத்திற்கு வந்தேன்., நாடகத்திலிருந்து தான் கவிதைக்கு வந்தேன், கவிதையிலிருந்து தான் இசை பாடல்களுக்கு வந்தேன், இசை பாடல்களிலிருந்துதான் சினிமாவுக்கு வந்தேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அதற்கேற்றாற் போலவே இப்புத்தகத்திலுள்ள 6 கதைகளும்(ஒரு நெடுங்கதை உட்பட) ஒன்றும் சோடையில்லை .அனைத்தும் மனித மனத்தின் ஆழம் பார்க்கும் கதைகள்.
"அது அதில் இல்லை" - நெடிய கதை. சாத்திரமும் சங்கீதமும் கற்க இன்ன சாதியில்தான் பிறக்க வேண்டுமென்பதில்லை. காதலுக்கும் அப்படியே. இப்படிப்பட்ட முற்போக்கு கருத்தை கருவாக கொண்ட கதை.
"அனுமார் கோயில் மணியோசை" - தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளை, அவனுக்கும திருமணம் செய்து வைத்த பின், அவனும் அற்பாயுசில் இறக்கிறான். கணவன் சொன்ன வார்த்தைக்கு கட்டுப்பட்டு, மனைவியிழந்த மாமனாரை, ஊர் எவ்விதம் பழித்தாலும், விதவை மருமகள் கண்ணும் கருத்துமாக அப்பெரியவரை கவனித்துக்கொள்கிறாள். அப்பெரியவரின் இறப்பும், அம்மருமகளின் இறப்பும், இதை அருகிருந்து பார்க்கும் ஒரு அனுமன் பக்தரின் வழி சொல்லும் கதை
"பாவாடை" - மலராத மங்கையை மணந்த கோவில் அர்ச்சகர் எப்படி ஸ்த்ரீலோலனாக, உறவு கடந்து தீச்செயல் புரிந்து, அந்த மங்கை ருதுவான பின்பும் அவளை கேவலமாக நடத்தியதன் விளைவாக அவளுக்கு நேர்ந்த கதி கதையை சொல்லும் கதை. அவளுக்கு நேர்ந்ததை அவன் பூசிக்கும் அம்பாள், அவளது பாவாடையில் குங்குமத்தை இறுதியபடியே உணர்த்துகிறாள்.
பிராந்தி - ஒரு சாமானியனின் மனப்பிராந்தி எந்த கடைசி வரை செல்கிறது என்பதை நகைச்சுவையாக சொல்லும் கதை.
நாய்வால் - நாவலை நிமிர்த்த முடியாது என்பதை உதாரணமாக கொண்டு, தனது இளம் வயதில் ஆட்டம் போட்ட ஒரு பெரியவர், ஞானம் பெறுவது பற்றி சொல்லும் கதை.
நப்பின்னை - வாலி தனது முன்னாள் காதலியை, வயது முதிர்ந்த காலத்தில் சந்தித்தததாக, கவிதை நடையில் புனைந்த கதை.
சுவாரசியமிக்க கதைகள்.
புத்தகத்தின் பின் அட்டையிலிருந்து... // "சின்ன வயதில் இருந்தே சிறுகதைகளோடு எனக்குச் சிநேகம் அதிகம். திருவாளர்கள் லா.ச.ரா, பி.எஸ்.ராமையா, மௌனி, கரிச்சான் குஞ்சு, நா.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், என்.வி.வெங்கட்ராம்... என அத்தனை பேரின் கதைகளையும் அற்றை நாளில் விழுந்து விழுந்து படித்தவன். எனவே, சிறுகதைகளை நடுமுள் நடுங்காத தராசில் நிறுத்திப் பார்க்க எனக்கு ஓர் அனுபவம் உண்டு. ஆயினும்- மேற்சொன்ன கருத்தையொட்டி இந்த வயதில்- பரந்துபட்ட உலகத்தை, அதன் மேடு பள்ளங்களை; மேல்தட்டு கீழ்தட்டுக்களை; வர்க்கங்களை; வர்ணங்களை- அகவை எண்பத்தியிரண்டில் நான் அசைபோட்டுப் பார்ப்பதில்- எல்லா எழுத்துக்களும் எல்லாருக்குமான எழுத்துக்களாயிருந்திருக்கின்றனவா என்று - என்னுள் ஒரு அய்யம் அரும்புகிறது! மாதவிடாய் காலத்தே மாடியில் உட்கார்ந்து கொண்டு மாதரார் படிக்கும் மாத நாவல்களால்- பொழுது போகும்; பொல்லாச் சமூகத்தின் பழுது போகுமா? சிறுகதையோ: நெடுங்கதையோ; - இருந்தால் சவுக்காயிருத்தல் வேண்டும்; இல்லையேல் சவுக்காரமாயிருத்தல் வேண்டும். ஆம்; அதிகார வர்க்கங்களின் அகங்களில் அடை அடையாய் அப்பிக் கிடக்கும் அவலங்களாகிய அழுக்குகளை - சவுக்காயிருந்து அடித்து திருத்த வேண்டும்; அல்லது சவுக்காரமாயிருந்து அடித்து துவைக்க வேண்டும்!" - வாலி //