என்ன தான் நினைவுகள் அழிந்து போனாலும் தன் துணையைக் கண்டவுடன் மனதில் எழும் உணர்வுகளைத் தடுக்க முடியாது.
ஒரு விபத்தில் இருந்து ஆரம்பிக்குறது. ராம் தன் மனைவி ,குழந்தையுடன் சென்னை வரும் வழியில் விபத்து ஏற்பட்டு சுமிக்கு அதிக அடிப்படுகிறது.
டாக்டரான ராம் தன் மருத்துவமனையில் சேர்த்து அவளைக் காப்பாற்றுகிறான். சில நாட்களுக்குப் பிறகு கண் விழிக்கும் சுமிக்கு அனைத்தும் மறந்து விடுகிறது.
ராம் அவள் யார் என்று சொல்லி குழந்தையும் காட்டுகிறான்.சுமியால் அந்த உண்மை ஏற்றுக் கொண்டாலும் ஓர் இடைவெளி விட்டே பழகுவதால் ராம் வெறுத்து போகிறான். பிளாஷ்பேக் எப்படி அவர்கள் திருமணம் நடந்தது என்று...
இரயில்வே ஸ்டேஷனில் ராம் சுமியை முதல் முறையாக பார்த்து காதல் வயப்படுகிறான். இரண்டு வருடங்களுக்குப் பிறகு இல்லத்தில் அவளைக் காண்கிறான். பெற்றோர் சம்மதத்துடன் திருமண ஏற்பாடு நடக்கும் போது ராமின் தந்தை இறந்துவிடுகிறார். தந்தை ஆசைப்படியே அதே நாளில் கல்யாணம் முடிந்து தந்தை விரும்பிய மருத்துவமனையைக் கட்டும் வரை புது மனைவியுடன் இருக்கும் நினைவு வராமல் அவளைத் தள்ளி வைக்கிறான் பிறகு தவறை உணர்ந்து சில வருடங்களில் வர்ஷா என்னும் குழந்தைக்குப் பெற்றோர் ஆகுகிறார்கள்.
நிகழ்காலத்தில் உடம்பு முழுவதும் குணமாகும் சுமி.. தன் கணவருடன் வீட்டுக்கு வந்து முதலில் தடுமாறி பிறகு நல்ல மனைவியாக ராமுடன் வாழ்கிறாள். இரெண்டாவது குழந்தை உருவாகும் போது தன் பழைய நினைவுகள் திரும்ப வந்து விடுகிறது சுமிக்கு.
ராமின் நண்பன் சிவா- மைதிலி மற்றொரு காதல் கதையும் வருகிறது.