காதல் என்பது உணர்வு பூர்வமானது. விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் ஒரு உறவு. காதல் கை கூடவில்லையென்றால் கூட கடமையை நிறைவேற்றும் ஒரு லட்சியப்பெண்ணின் கதை தான் உன்னை ஒன்று கேட்பேன். காதலின் ஒவ்வொரு அம்சமும் அற்புதமானது. அதில் இது ஒரு புது வகை. படித்துப் பாருங்களேன் உங்களுக்கே தெரியும்.