அரசியல்வாதிகள் தங்களின் பதவியைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் போகத் தயங்குவதில்லை.
மக்களிடம் தங்களுக்கு இருக்கும் அவப்பெயரை போக்க திரையுலகத்தின் முன்னணி நாயகியான நீலாம்பரியை கட்சியில் சேர வைக்க அவளைத் தவறாக எடுத்த வீடியோவை துருப்புசீட்டாகப் பயன்படுத்திக் கொள்ளச் சட்ட அமைச்சர் முயல்கிறார்.கணினி மூலம் நீலாம்பரியின் முகத்தை வேறு உடலில் ஒட்டியிருப்பது தெரியாமல் பயந்து போனவள் போலீஸ் அதிகாரியான துர்காதேவியின் உதவியை நாடுகிறாள்.
டெல்லியில் இருந்து அக்கா மோகனாவை பார்க்க வந்த ஜெயகோபியை போலீஸ் அதிகாரி ராஜேந்திரன் விசாரணை என்ற பெயரில் முரட்டுத்தனத்தைக் காட்டி ஆளுங்கட்சி சார்பாக இவனைத் தீக்குளிக்க ஏற்பாடு செய்கிறான்.
திடீரென ராஜேந்திரன் நல்லவனாக மாறி ஜெயகோபியை விடுவிப்பதுடன் ஆளுங்கட்டி எம்எல்ஏவையும் சட்ட அமைச்சரையும் கொன்று இவ்வளவு நாள் செய்திருந்த தவறுக்குப் பிராயசித்தம் தேடி கொள்ள,நீலாம்பரியின் கேசட் அனைத்தும் துர்காதேவியால் அழிக்கப்படுவதுடன் ஆட்சியும் மத்தியரசால் கலைக்கப்படுகிறது.