வாசக நெஞ்சங்களுக்கு அன்பு வணக்கம்! மின்னூலின் வாயிலாக உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. “பேசும் மொழியிலெல்லாம்...”- வெற்றிமாறன், நயனிகா மற்றும் ப்ரமோத் இம்மூவரின் கோணத்தில், காதலின் முப்பரிமாணத்தைப் பேசவிருக்கிறது. காதலின் வெற்றி-திருமணத்திலா? அதன் உன்னதத்திலா? அல்லது இவ்விரண்டிலுமா? “பேசும் மொழியிலெல்லாம்...” - உங்கள் உள்ளத்துடனும் உணர்வுகளுடனும் பேசக் காத்திருக்கிறது! இக்கதையின் பிரதான பாத்திரங்கள் பேசிய மொழி, உங்கள் இதயங்களைத் தொட்டுச் சென்றிருப்பின், அவ்வனுபவங்களை shameeda0203@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பகிர்ந்து கொள்ளுங்கள். முகநூல் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக, எனது பிற படைப்பாக்கங்களுக்கும் தங்க