பெண் இந்த பூமியின் மைய அச்சாக இருக்கிறாள். காந்தமாக தன்னைச் சுற்ற்யிருக்கும் உலகை சுழல விடுகிறாள். ஆண்கள் எப்போதும் ரகசியமாக தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள். இந்த நாவலின் நாயகி தன் சதுரங்கக் கட்டத்தில் உறவுகளை அவ்வளவு தந்திரமாக நகர்த்தியவண்ணம் இருக்கிறாள். எந்த சந்தர்ப்பத்திலும் எவராலும் தீண்ட முடியாத அந்தரங்கம் ஒன்றை பாதுகாக்கிறாள். அந்த அந்தரங்கமே அவளை வெல்லபடமுடியாதவளாக மாற்றுகிறது. இந்த வாழ்க்கையை தங்கள் வழியில் கையாளக் கற்றுக்கொள்ளும் சரிதாக்களை இந்த உலகம் அன்பு மிகுதியிலோ ஆத்திரத்திலோ ‘ராட்சசி’ என்றே அழைக்கிறது.
வா. மு. கோமு ஈரோடு மாவட்டம் வாய்ப்பாடியைச் சேர்ந்த சிறுகதை, புதின எழுத்தாளர். கொங்கு மண்டல வட்டார வழக்கில் கிராமம் சார்ந்த பாலியல் கதைகளையும் எதார்த்த இலக்கியத்தையும் படைப்பவர். தமிழின் அனைத்து முன்னணி பத்திரிக்கைகளிலும் இலக்கிய பத்திரிக்கைகளிலும் இவரது கதைகள் வெளியாகியிருக்கின்றன. இவரது தவளைகள் குதிக்கும் வயிறு என்ற சிறுகதைத் தொகுப்பு 2008ம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விகடன் விருதை பெற்றது.