கலாச்சார அதிர்ச்சி (Culture Shock) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (Culture Surprises). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். தொன்னூறுகளில் உலகத்துக்குத் திறந்துவிடப் பட்ட இந்தியப் பொருளாதாரம் இந்தியாவுக்கும் உலகைத் திறந்துவிட்டது. அதுவும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கணிப்பொறித் துறையின் வளர்ச்சியும் ஒரு தலைமுறையின் தலையெழுத்தையே மாற்றி அம&