கரையில் நின்று கடலை பிரமித்த பார்க்கும் மக்களின் ஒருவனாக நான் நினைப்பதெல்லாம் தொடுவானத்தினை கடலில் பயணித்து துரத்தி பிடிக்கமுடியுமா? என்பதே. கரையில் நின்றே கடலை ரசிப்பன், கடற்கரையில் உற்சாகமாக வலம் வருபவன், கப்பலில் வேலைசெய்யும் நண்பரின் கப்பல் பயண அனுபவங்களின் கட்டுரை தொகுப்பு புத்தகத்தை(கற்றது கடலளவு) படித்தபோது நான் இதுநாள் வரை கேள்விப்பட்ட, கப்பலில் வேலை என்றால் கரையில் ஆறுமாதம், கடலில் ஆறுமாதம். கரையில் உள்ள ஆறுமாதமும் கம்பெனி சம்பளம் கொடுத்துவிடும், இந்த ஆறுமாத கணக்கு, விடுமுறையுடன் கூடிய சம்பளம் என்பது போன்ற செய்திகள் யாரோ சொன்ன பொய் என்பதை சரக்குகப்பலில் இன்ஜின்ரூம் இன்ஜினியர்யாக பணியாற்றும் கணேஷன் அவர்கள் எழுதிய கற்றது கடலளவு புத்தகம் தெளிவுபடுத்துகிறது.
மேலும், 30க்கும் அதிகமான நாடுகளுக்கு கப்பலில் சென்று அங்கு தனக்கு கிடைத்த அனுபவங்களையும், துறைமுகம் சார்ந்த தகவல்களையும், கடல் கொள்ளையர்களினால் ஏற்றப்பட்ட இழப்புகள், பிரேசில் துறைமுகத்தின் அருகில் இருக்கும் பார்ரில் இவர் சந்தித்த விலைமாதுவின் கள்ளங்கபடமற்ற அன்பு, கடலில் முழ்கிப்போன விஷ்வமோஹினி கப்பலில் இருந்து உயிர்பிழைத்தவரின் அனுபவங்கள், பூமத்தியரேகைய கடக்கும் திருவிழா, கடல்வழி பாதைகளில் ஆர்பரித்து அச்சமூட்டும் கடல் அலைகள், கப்பலின் கட்டமைப்பு மற்றும் கப்பல் இயங்கும் முறைகள், துறைமுக பைலெட்டுகளின் அத்தியாவசியம், சூயஸ் கால்வாய்& பனமா கால்வாய்களில் சிறப்புகள் மற்றும் இந்த கால்வாய்களை கப்பல் கடக்கும் நிகழ்வுகள், கப்பலில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை, கிரேக்க கப்பல்களில் உள்ள பணிச்சிக்கல்கள், கடலில் தொலைந்துபோன நண்பரின் கதை, கப்பலை நிறுத்த கப்பலுக்கு பிரேக் இல்லை!!! என பல ஆச்சரியங்களும், அச்சமூட்டும் நிழ்வுகளும் அடங்கிய அனுபவ கட்டுரைகளின் தொகுப்பு இந்த கற்றது கடலளவு.
கப்பல்ல வேல பாக்கறவனுக்கு கடல் அளவு சம்பளம் என்பது உண்மையாக இருந்தாலும் கப்பலின் வேலையாட்களுக்கு சனி, ஞாயிறு என எந்த விடுமுறை நாட்களும் இல்லை கப்பல் கடலில் உள்ள எல்லா நாட்களும் வேலை நாட்களே!!!.
-கலைச்செல்வன் செல்வராஜ்.