தமிழ்நாட்டில் உள்ள புவனகிரியில் பிறந்த ஸ்ரீராகவேந்திரர், வேதங்களைக் கற்று, உபநயனம் செய்துகொண்டு, திருமணம் செய்துகொண்டு, சன்னியாசம் மேற்கொண்டு, பாத யாத்திரை சென்று, வழியில் பல்வேறு வாதங்களை மேற்கொண்டு பலரை வென்று, இறுதியில் ஆந்திராவில் உள்ள மந்த்ராலயத்தில் ஜீவ சமாதி அடைந்ததாக அவரது வாழ்க்கை வரலாறு விவரிக்கிறது. ராகவேந்திரர் பற்றிய வாழ்க்கை வரலாறுகள் முழுவதுமே அவரை ஒரு சித்தராகவும், மகானாகவுமே காட்டுகின்றன. அவர் தொட்டார், கண் பார்வை வந்தது. அவரை ஆசி வழங்கியதும் படிப்பறிவு வந்தது. இப்புத்தகத்தில் மகான் ஸ்ரீராகவேந்திரர் வாழ்வில் நடந்த சுவையான, சுவாரஸ்யமான விஷயங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு : ஸ்ரீ ராகவேந்திரர் - இளமைக் கால&