ஒருவர் மீது மற்றொருவர் வைக்கும் நம்பகத்தன்மையே காதலை உயிர்ப்புடன் வாழ வைக்கும்.
இந்தியாவின் முன்னணி கதாநாயகி நிகிலா தன்னை மணமுடிக்க ஆசைப்பட்டதைப் பெரும் வாய்ப்பாகக் கருதிய கணேசன் தன்னுடைய காதலை மறைத்துவிட்டு புதுவாழ்வுக்குத் தயாராகும்போது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு காதலி மனோகரியை கொலை செய்யும் முடிவை எடுக்கிறான்.
தன் முதலாளி மகன் தன்னை விரும்பி மணமுடிக்க வந்ததால் செல்வ வாழ்விற்கு விரும்பிய மனோகரி எதிர்காலத்தில் எங்கே காதலன் கணேசனால் தொல்லை வருமோ என்று பயந்து தன் அண்ணனுடன் சேர்ந்து கணேசனை கொலை செய்ய முடிவெடுத்து அதையும் நிறைவேற்றிவிடுகிறாள். போனசாக நடிகை நிகிலாவின் பி.ஏ வையும் கொன்றுவிடுகின்றனர்.
நடிகை நிகிலாவிடன் தகவலால் காணாமல் போன கணேசனை தேடும் போது தான் கொலைகள் பற்றிய தகவல் எழுகிறது.
தன் முதலாளி மகனை மணக்கபோகும் நாளில் அண்ணனுடன் சேர்த்து கைது செய்யப்படுகிறாள் மனோகரி.
ஒரே ஒரு திருப்பம் மட்டுமே சற்று எதிர்பாராத மாதிரி இருந்தது. மற்றபடி எல்லாமே யூகிக்க கூடியதாகவே இருந்தது... கதை இறுதியின் திருப்பம் கூட எழுத்தாளரின் பெரும்பாலான கதைகள் போலவே...