அரசியல்வாதி தன்னைப் பற்றிய உண்மைகள் பொதுவெளியில் வருவதைத் தவிர்க்க எத்தனை உயிர்ப்பலிகளையும் தரத் தயங்குவதில்லை.
புகழ்பெற்ற பெண் நாவலாசிரியரான செந்தமிழ்ச் செல்வி பூனையால் கொடூரமாகத் தாக்கப்பட்டு இறந்து போகிறார்,மறுநாள் பெண் போலீஸ் உயரதிகாரியான சத்யபாமாவும் அதுபோலவே தாக்கப்பட்டு இறந்து போகிறார்.
பூனையை வைத்து நல்ஆராய்ச்சி செய்யும் ஹேமந்த்தும் தற்கொலை செய்து இறந்து போகிறான் ஆனால் அது கொலை என்று விவேக்கால் கண்டுபிடிக்கப்படுகிறது.
சத்யபாமா தான் கடந்து வந்த பாதையை புத்தகமாக வெளியிட விரும்பி அதற்காகச் செந்தமிழ்ச் செல்வியிடம் எழுத்தின் நுணுக்கத்தைக் கேட்கிறார். எங்கே சத்யபாமா புத்தகம் எழுதினால் தங்களின் நிழல் வாழ்க்கை வெளிச்சத்திற்கு வந்துவிடுமோ என்று பயந்த அரசியல்வாதி சத்யபாமாவின் மருமகனை வைத்தே அவ்விருவரையும் கொடூரமாகக் கொன்று பழியைப் பூனையின் மேல் போட்டது விசாரணையில் தெரியவருகிறது.