எழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். "பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி? பரம(ன்) இரகசியம் நாவல், அறிவார்ந்த ஆன்மிகம் அமானுஷ்யன் நாவல் மற்றும் இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி நாவல் ஆகியவை அச்சு நூல்களாக வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். அதை தினத்தந்தி நூலாக 2016ல் வெளியிட்டுள்ளது.
இப்புவி உருவான காலம் தொட்டே நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் இடையேயான போர் நடந்து கொண்டே இருக்கிறது, வீரர்கள் அழியலாம் ஆனால் போர் எக்காலத்திலும் முடிவடைவதில்லை.
தனிமனித ஒழுக்கமே கூட்டமைப்பின் அடையாளமாகிறது.
அறிவில் சிறந்தவனும் அமைச்சரின் மகனுமான க்ரிஷை கொல்ல நினைத்து செய்த செயல் போலவே குற்றவாளியும் மடிந்து போகிறான்.காணாமல் போன க்ரிஷ் வந்து சேரும் போது பல பிரச்சனைகளின் ஆணிவேர் பிடிப்படத் தொடங்குகிறது.
இலுமினாட்டிகளின் தலைவனாகத் தன்னைப் பொருத்திக் கொள்ள பலவகைச் சக்திகளைப் பெறும் விஸ்வம் அனைத்தையும் தவறான வகையிலே பயன்படுத்தித் தன்னை “தீயவன்” என்ற அடைப்புக்குள் கொண்டு வருகிறான்.
வேற்றுகிரகவாசியின் தயவால் தனக்கு வந்த ஆபத்தில் இருந்து தப்பித்த க்ரிஷ் உலகின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் வல்லமை தனக்குள் இருப்பதை உணர மாஸ்டரின் உதவியை நாடுகிறான்.
அலைவரிசைகள்.சித்தர்களின் சாகசங்கள், அரசியல் பகடை ஆட்டங்கள், மக்களைக் காப்பாற்ற இயங்கும் ரகசிய அமைப்பு,வேற்றுகிரகங்களின் ஆராய்ச்சி,தனிமனித பேராசைகள் என்று நீளுவதில் மையமாக “நல்லவகைகளே நிலைத்து நிற்கும்” என்ற கருத்துடன் முடிவடைகிறது.
சர்வ சக்தியை கொண்ட விஸ்வமே தனக்கான எதிரியை உருவாக்கி கொண்டு அழிவையும் தேடிக்கொள்கிறான்.
ரொம்ப மெதுவாக நகரும் கதை..
பல சுவாரசிய விஷயங்கள் கதையின் போக்கிலே வந்து போகிறது.
நான் இதுவரை படித்ததில் மிக பெரிய நாவல் இது. கதையசிரியர் எக்கச்சக்க விஷயங்களை உள்ளடக்கி ஒரு மிக பெரிய தொகுப்பாக இந்த படைப்பை நமக்கு வழங்கியுள்ளார். இக்கதை வெவ்வெறு திசைகளில் பயணிக்கும் போது ஏற்படும் விறுவிறுப்பு, கதையாசிரியர் தன் எண்ணங்களை மீண்டும் மீண்டும் சொல்லி இருப்பதால் ஒருவித சலிப்பு ஏற்பட செய்கிறது. இதனாலே இந்த படைப்பு மிக பெரிதாக இருப்பதாக உணர வைக்கிறது. தம் எண்ணங்களை வாசகர்கள் மனதில் பதிய வைக்க வேண்டிய அவசியம் இருக்க வேண்டியதில்லை என்பது எனது அபிப்பிராயம். ஒரு சில இடங்களில் மிதமிஞ்சிய கருத்தும் என்னை சோர்வடைய செய்வதாய் உணர்தேன். இவை ஒரு புறம் இருக்கையில், கதாபாத்திர வடிவம், கதை தொடர்ச்சி, காலம் போன்றவை நன்கு அமைந்தது. சில இடங்களில் கற்பனையை மிஞ்சிய கதை வடிவத்தையும் உணர முடிந்தது. சில எதிர்பாராத திருப்புமுனை இருந்தாலும் பல இடங்கள் யுகிக்கும்படியாகவே கதை நகர்ந்தது. மீண்டும் மீண்டும் வரும் வாக்கியங்களையும் சில தத்துவங்களையும் குறைதிருந்தால் ஒரு நல்ல படைப்பாக இருந்திருக்கும். நானும் கதையை பற்றி மட்டும் விமர்சனம் எழுதி இருப்பேன்.