Bhimrao Ramji Ambedkar was born in 1891 into an “Untouchable” family of modest means. One of India’s most radical thinkers, he transformed the social and political landscape in the struggle against British colonialism. He was a prolific writer who oversaw the drafting of the Indian Constitution and served as India’s first Law Minister. In 1935, he publicly declared that though he was born a Hindu, he would not die as one. Ambedkar eventually embraced Buddhism, a few months before his death in 1956.
Book 39 of 2024 புத்தகம் : அம்பேத்கர் இன்றும் என்றும் எழுத்தாளர் : அம்பேத்கர் பதிப்பகம் : விடியல் பதிப்பகம் பக்கங்கள் : 598 நூலங்காடி: பனுவல் விலை : 500
🔆 நம் சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை எவ்வாறு புகுத்தப்பட்டது மற்றும் வர்ணம் என்ற பெயரில் மக்களை எவ்வாறு பிரித்தனர் என அனைத்தையும் தெரிந்துக் கொள்ளலாம்.
🔆 ஒரு பெண் திருமணத்திற்கு பிறகு எப்படி இருக்க வேண்டும், கணவர் இறந்ததற்கு பிறகு அந்தப் பெண்ணுக்கு நடக்கும் கொடுமைகள் - என மனு தர்மத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
🔆 இந்து என்ற ஒரு மதம் உருவானது, பல கடவுள்கள் உருவானது, ஒரு கடவுளை பெரியது எனக் காட்ட, மற்ற கடவுள்களை எவ்வாறு பழி சொன்னார்கள் என்பதை வேதங்கள் வாயிலாக தெரிந்துக் கொள்ளலாம்.
🔆 இன்னும் நிறைய தகவல்கள் உள்ள புத்தகம். சில பகுதிகள் கடினமானதாக உள்ளதால் பொறுமையாக வாசிக்கலாம்.
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
The essays are detailed. Reading this book is an arduous task but it gives you deep knowledge and insights about Hinduism & its mythology and caste system. A must read book for everyone who seek to understand about the caste system.
அம்பேத்கர் இன்றும் என்றும் ❤️ • அம்பேத்கர் தன் வாழ்நாளில் எழுதிய ஏராளமான கட்டுரைகளிலும் ஆய்வுகளிலும் முக்கியமானதும் அவசியமானதுமான சிறந்த தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளை கொண்ட தொகுப்பே இந்த பொக்கிஷம். • “இந்து மதத்தில் புதிர்கள்” என்ற தலைப்பின் கீழ் வேதங்களின் தோற்றம், இந்துக் கடவுள்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் மாற்றமும், பெண் தெய்வங்களின் தோற்றம், வருணங்களின் தோற்றம், ஆசிரமங்களின் தோற்றம், சாதிகளின் தோற்றம், தந்தை வழி, தாய் வழி சமூக மாற்றங்கள், மனுவின் கோட்பாடுகள் என இந்து மதத்தின் அடிப்படைகளையும் அத்திவாரத்தையும் மிகவும் ஆழமாக விளக்குகிறார் அம்பேத்கர். • அதனை தொடர்ந்து பண்டைய இந்தியாவின் சமூக அமைப்பு முறை, பிராமணீயம், பௌத்த சமயத்தின் தோற்றமும் வீழ்ச்சியும், பிராமணீய இலக்கியம், குடும்ப ஒழுக்க நெறிகள், போன்றவை தொடர்பான ஆய்வுகளையும் பிராமணர்களுக்கும் சத்திரியர்களுக்கும் இடையிலான போராட்டங்கள், சூத்திரர்கள் மற்றும் பெண்களின் எதிர்ப் புரட்சிகளையும் ஆராய்ந்து தெளிவாக விளக்கும் பகுதி “பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்” என்ற தொகுப்பு. • இறுதியாக “தீண்டாமை” என்ற தொகுப்பில் தீண்டாமையின் தோற்றம், தீண்டாமை தோன்றியதற்கான காரணங்கள், இவ்வாறு எங்கெல்லாம் நடந்துள்ளது, அவர்கள் ஏன் கிராமத்திற்கு வெளியே வசித்தார்கள், தொழில் ரீதியான மரபு மூலம், மாட்டிறைச்சி பிரச்சினை, பிராமணர்கள் ஏன் புலால் உணவை கைவிட்டு காய்கறி உணவு உண்பவர்களாக மாறினார்கள், தூய்மையற்றவர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்குமான வேறுபாடு என தீண்டாமை தொடர்பான கேள்விகள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து விளக்கியுள்ளார். • அதிக நாட்கள் எடுத்துக்கொண்டு வாசித்த ஒரு புத்தகம் இது. அவ்வளவுக்கு புதிய தகவல்கள். இந்து மதம் தொடர்பாக எனக்கிருந்த ஏராளமான கேள்விகளையும், குழப்பங்களையும் தீர்த்துவைத்திருக்கிறது இந்த புத்தகம். தெளிவுபெற்ற திருப்தி. நிச்சயம் அனைவரும் படிக்கவேண்டிய புரட்சியாளர் அம்பேத்கர். • “அறிவைப் பெறுவதற்கு ஆராய்ந்து உண்மை காணும் ஆர்வம் முதலில் ஏற்படவேண்டும். இந்த ஆர்வம் வரவேண்டுமானால் ஐயம் எழுப்பும் மனப்பான்மை ஏற்படவேண்டும். ஐயம் இல்லை என்றால் ஆய்வு நடக்காது. ஆய்வு இல்லை என்றால் அறிவு வளராது. ஏனென்றால் அறிவு என்பது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மிடம் வந்து சேருகின்ற பொருள் அல்ல; தேடித் தேடித்தான் அதை அடைய முடியும். பெரும் முயற்சியும், தியாகமும் செய்வதன் விளைவாகத்தான் அறிவு கிட்டுகிறது.”