விமலாதித்த மாமல்லனின் மூன்றாவது தொகுதியான உயிர்த்தெழுதல் 1994ல் வெளியாயிற்று. 1989க்குப் பின், எவ்வளவு முயன்றும் எழுத முடியாமல் இருந்து ஐந்து வருட இடைவெளிக்குப் பின் ஆறே மாதங்களுக்குள் எழுதிய (ஒளி, புள்ளிகள், பந்தாட்டம் - மே 94 குல்லா, உயிர்தெழுதல், தாம்பத்யம் -ஜூன், சோழிகள் - செப்டம்பர் 94, விபத்து - அக்டோபர்94) எட்டு கதைகளில் பத்திரிகைகளில் வெளியான ஆறு கதைகளைக் கொண்ட தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
நிழல் 1989ல் எழுதப்பட்ட நெடுங்கதை, சுந்தர ராமசாமி 1991ல் வெளியிட்ட காலச்சுவடு சிறப்பிதழில் வெளியாகி, நிறைய வாசகர்களால் இன்றும் நினைவு கூறப்படும் கதையாக இருக்கிறது.
விமலாதித்த மாமல்லன் (Vimaladhitha Maamallan) (பி. ஜூன் 19, 1960) தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், குறுநாவல்கள், இலக்கிய விமர்சனம் என இதுவரை 6 அச்சு நூல்களும் 70க்கும் மேற்பட்ட மின்னூல்களும் வெளியாகியுள்ளன. மத்திய கலால், சரக்கு மற்றும் சேவைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் சென்னையில் வசிக்கிறார்.
பறக்க தொடங்கும் முன் அனைத்து பறவைகளுக்கும் இருக்கக் கூடிய பிரச்சினை தான் இந்தக் கதை. ஒன்றை சாதிக்க நினைக்கும் முன் நமக்கு தோன்றக்கூடிய சந்தேகங்கள், சுற்றம் எப்படி நம்மை பார்க்கிறது, பறந்த பின்னர் இந்த உலகம் எப்படி நம்மை பார்க்கிறது போன்றவற்றை விவாதிக்கிற சிறுகதை. நான் வாசித்த முதல் விமலாதித்த மாமல்லனின் கதை.
தத்துவசிக்கல்களை தர்கரீதியிலேயே கடைசி வரை கொண்டு செல்கிறார். மாயையும் எதார்தமும் ஒன்று மற்றொன்றாக தெரியும் வண்ணம் கதை அமைப்புகளை கொண்டதில் புத்திசாலித்தனம் அருமை. சவாலான கதைகளாய் வாழ்க்கை பாடங்களாய் உள்ளன. தாம்பத்யம் கதை ஒர் உதாரணம். நின்று நிதானமாய் படிக்க வேண்டிய கதைகள்.