எதார்த்தத்தைத் தாண்டிய கற்பனைகளையே குழந்தைகளைக் கவர்ந்து அந்தப் படைப்பில் ஐக்கியமாக்கிவிடுகிறது.
சுழல் காற்றில் வீட்டுடன் பறந்து செல்லும் டோரதி எங்கேயோ ஒரு நிலத்தில் விழுகிறாள். அவள் விழும் இடம் கெட்டவளான சூனியக்காரி வாழ்ந்த இடம் வீட்டோடு அந்த இடத்தில் விழுந்ததால் சூனியக்காரி இறந்து போகிறாள்.
தன் ஊருக்குச் செல்லும் வழியைத் தேடிக்கொண்டு போகும் வழியில் மூளை வேண்டிய வைக்கோல் மனிதன்,இதயம் வேண்டிய தகர மனிதன் ,தைரியம் வேண்டிய சிங்கம் என்று அனைத்தும் அவளுடன் பயணப்படுகிறது.கேட்ட அனைத்தும் வழங்கும் பெரிய மந்திரவாதி ஓஸ் இருக்கும் இடம் தேடி செல்கின்றனர்.
நான்கு திசையில் நான்கு சூனியக்காரிகள் இருக்கின்றனர் அதில் இரண்டு திசையில் இருப்பவர்கள் கெட்டவர்கள் அவர்கள் இருவரையும் டோரதி அழித்துவிடுகிறாள்.
பெரிய மந்திரவாதி என்று தன்னைக் காட்டிக் கொள்ளும் ஓஸ் ஒரு சாதாரண மனிதன் என்று தெரிந்த பிறகு எப்படித் தன் வீட்டை அடைவது என்ற குழப்பமே எழுகிறது டோரதிக்கு.
யார் யார் எது வேண்டும் என்று விரும்பினார்களோ அதுவே அவர்களுக்குக் கிடைக்கிறது மனதின் நம்பிக்கையே செயலில் நடைமுறைப்படுத்தும் என்பதைக் குழந்தைகளுக்கு அழகாக விளக்கிச் செல்கிறது இந்த இடத்தில் கதாபாத்திரத்தின் தன்மைகள்.
மந்திரசக்தியின் மூலம் டோரதி தன் மாமன் வீட்டிற்கு வந்து சேர்கிறாள் அவளுடன் பயணப்பட்டவர்கள் அனைவரும் அவர் அவர்கள் விரும்பிய வாழ்வுக்குத் திரும்பிவிடுகின்றனர்.