ஆனந்த தாண்டவம் என்ற உடனேயே எல்லோருக்குள்ளும் சிவபெருமானின் நாட்டிய உருவம் தான் ஞாபகத்திற்கு வரும். வேறு எதுவும் வராது என்பதும் ஒரு பேருண்மை. ஆனந்தம் ஏற்படப்போய் அவர் ஆடுகிற படியால் அப்படி ஒரு பெயரா இல்லை அதைப் பார்ப்பவர்க்கு ஆனந்தம் வரும் என்பதால் அப்படி ஒரு பெயரா என்று நாம் ஆனந்ததாண்டவம் குறித்து நிறையவே விவாதிக்கலாம்.அந்த தாண்டவம் விவாகத்துக்கு உரியது மட்டுமல்ல. பெரும் ஆராய்ச்சிக்கும் உரியது. அதற்கான ஆராய்ச்சிகளும் நடந்தபடியே இருக்கின்றன. ஒரு ரகசியம் எழுத்தில் எழுத்தாகத்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. அது தோற்றத்திலும் இருக்கலாம்.
இந்த சிந்தனைகளை எல்லாம் உள்ளடக்கியே இந்த தொடர் நாவலை எழுதினேன். வெகுஜன இதழ்களில் எழுதும்போது விறுவிறுப்புக்கு குந்தகம் வந்துவிடக்கூடாது என்று எதிர்பார்ப்பு இருக்கும். அப்படிப்பட்ட விறுவிறுப்போடு என் ஆன்மிக எண்ணங்களையும் குழைத்தே இதை எழுதினேன். இப்படி நான் எழுதுவது ஒன்றும் புதிதல்ல. சிவமயம், சிவம், ருத்ரவீணை, கிருஷ்ணதந்திரம், எங்கே என் கண்ணன் என்று என் பல படைப்புகள் இந்த ரகமே!
என் வாசகர்கள் வழக்கம் போல இந்த தாண்டவத்தில் திளைப்பார்கள் என்று நம்புகிறேன்.
எப்போதாவது வாசிப்பில் சற்று சலிப்பு தட்டினால் நான் முதலில் நாடுவது இந்திரா சௌந்தர்ராஜனின் புத்தங்கங்களைத் தான். அவர் கதைகளில் வரும் சுவாரஸ்சயங்களும் மர்மங்களும் ஆன்மீக கருத்துக்களும் வாசிப்பை பரபரப்பாக்குகின்றது. அப்படி ஒரு கட்டத்தில் நான் வாசிக்க நேர்ந்ததே இப்புத்தகம்.
மழையே இல்லாது வாடி கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் தேவபுரம். அங்குள்ள கோவிலில் திடீரென்று தேவதாசி குலத்தை சேர்ந்த கமலாம்பாள் நடனம் ஆடுகிறாள். அதை தொடர்ந்து மழை பெய்ய; அது சரியாக மூன்று நாள் நீடிக்கிறது. இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்த பத்திரிகையாளன் பிரபாகரன் இந்த மர்ம முடிச்சை அவிழ்க்க அங்கு வருகிறார். அனைத்தும் கடவுள் செயல் என்ற நம்பிக்கையை முறியடிக்க முயல்கிறார் அவர். இதற்கிடையில் சொர்ணம் என்ற ஒரு திருநங்கை கமலாம்பாளின் சதங்கைகளையும் தட்டுக்கட்சியையும் திருடிகிறாள். ஒரு சாபத்தால் மழையின்றி அவதிப்படும் தன் ஊர் நஞ்சுண்டாபுரத்துக்காக. அங்கு என்ன நடக்கிறது? பிரபாகரனால் இந்த மர்மத்தை கண்டறிய முடிந்ததா? திருட்டு போன பொருட்கள் மீட்டெடுக்கபட்டதா? என்பது தான் கதைக்களம்.
ஏற்கனவே சொன்னது போல் கதைகளை பரபரப்பாக கொண்டு போகும் திறமை உடையவர் இந்திரா சௌந்தர்ராஜன். இந்த புதினமும் அப்படியே. ஆரம்பத்தில் ஒரு ஐந்து பக்கங்கள் வரை சற்று தொய்வாக இருந்தாலும் பிறகு நன்றாகவே சென்றது. ஒரு இடத்தில் கூட சலிப்பு தட்டவில்லை. ஏனென்றால் ஏதாவது ஒரு சம்பவம் நடந்து கொண்டே இருந்தது. எழுத்தாளரின் மற்று கதைகளை போல் இதிலும் ஆன்மிகம் மற்றும் நாத்தீகம் இடையிலானு பட்டிமன்றம் நடக்கின்றது கதாபாத்திரங்களின் வாயிலாக. சொர்ணம், குருக்கள் இவர்கள் எல்லாவற்றையும் ஆன்மீக ரீதியாக பார்க்க; பிரபாகரனோ எல்லாம் விஞ்ஞானம் மற்றும் பகுத்தறிவோடு அணுகுகிறான். நமக்குள் எடக்கு மடக்காக எழும் கேள்விகள் அனைத்தையும் பிரபாகரன் வழியாக இதில் கேட்க படுகிறது. சொர்ணம் என்ற பாத்திரம் திருநங்கையாக வருகிறாள். ஒரு திருநங்கையின் கோணத்தில் எழுதின பகுதிகள் இந்த காலகட்டத்திற்கு ஏற்றதே. தேவதாசிகளை பற்றியும் சில விஷயங்கள் இந்த புத்தகத்தினூடே தெரிந்து கொன்டேன். பிரபாகரன், அஸ்வதி, பத்திரிகை ஆசிரியர், நர்த்தகி, சொர்ணம், கமலாம்பாள், குருக்கள், யோகி என்று எல்லா பாத்திரங்களுக்கும் அவர்களுக்குண்டான முக்கியத்துவம் அளிக்க பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆன்மீக ரீதியான சிந்தனைகளையும் விஞ்ஞான ரீதியாக கேள்வி கேட்டு கடைசியில் அவருக்கே உரிய பாணியில் ஆன்மீக சிந்தனைகளை நிலை நாட்டுகிறார் எழுத்தாளர். இந்திரா சௌந்தர்ராஜன் எழுத்துக்கள் புடிக்கும் அனைவரும் வாசிக்க தகுந்த ஒரு புத்தகமே இது.
கடவுள் மீதான நம்பிக்கையை ஆராய முற்படும் போது அதன் மீதே பற்றுக் கொண்டு அதன் நுணுக்கத்தில் தன்னைத் தொலைப்பதே மனித வாழ்வின் செயலாகிறது.
முழுமனதாக நம்பிக்கை கொண்டு செய்யப்படும் செயல் வெற்றிப் பெறும் போது அதற்குக் காரணம் கடவுள் என்று பூசப்படும் சாயத்தைக் கடவுளின் அணுக்கத்தை முழுமையாக அறிந்தவனாலே உண்மை நிலையை மற்றவருக்கு எடுத்துரைக்க முடியும்.
மழையின்றி ஊரே தகித்துக் கொண்டிருக்கும் வேளையில் தாசி குலத்தைச் சேர்ந்த கமலாம்பாள் கால் எடுத்து வைக்கமாட்டேன் என்று விட்டு சென்ற மகா தேவபுரத்தின் கோவிலில் மீண்டும் கால்பதித்தது மட்டுமில்லாமல் நாட்டியத்தையும் அரங்கேற்ற வான்மழை பூமியை தொட்டுவிடுகிறது.தனக்கு இடப்பட்ட வேலையை முடித்து விட்டேன் என்ற நிறைவுடன் பூமியில் இருந்து புறப்படுகிறாள்.
ஒரு கிராமத்தில் மட்டும் மூன்று நாள் தொடர்மழை பெய்வது பத்திரிக்கையாளனான பிரபாகரனை அவ்வூருக்கு இழுத்துவர போதுமாகிறது.
அனைத்திற்கும் கடவுள் தான் காரணம் என்று சொல்வதற்கு மறுப்பு சொல்லி அதை ஆராயும் பிரபாகரனுக்கு அடுத்து அடுத்து ஆச்சரியங்களே நிகழ்கிறது.
பெண் சாபத்தால் நஞ்சுண்டாபுரம் ஊரே அழிந்து கொண்டிருப்பது அவ்வூரின் அரவாணியான சொர்ணாவால் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படுகிறது அதற்கு மகாதேவபுரத்தின் தாசியான கமலாம்பாளின் பரம்பரை சலங்கை உதவி செய்கிறது..
கடவுள் என்ற வட்டத்திற்குள்ளே பிரபாகரனை கொஞ்சம் கொஞ்சமாக இழுத்துக் கொண்டு போகும் நிகழ்வு அவனைச் சித்தனாக முடிவுக்குத் தள்ளிவிடுகிறது.
One of those latest books of indira soundarrajan. The historical part or explanation on bharatha natyam and its postures seem to be repetitive without much of data. Comparing with rudra veenai where historical facts would be explained in depth, this book lacks there a lot.
But bringing in the thought process of transgender and different kind of explanation to a transgender which I have never thought through was something that makes this book a unique one.
Go for it if u are an indira soundarrajan fan it will not disappoint u... if not please start with some other book of him since this is not one among the best.
Excellent imagination. Interesting imagination. Author try to expose science and spirituality, it confused. Each and every pages, there is a lot of Proof Mistakes.
கோடையில அவனவன் அடிக்கிற வெய்யிலை வைதுகொண்டிருக்க இந்த மகாதேவபுரத்துல மட்டும் மழை பெய்தால் கடுப்பாகத்தான் இருக்கும். அந்த செயதியைக்கேட்டு, கலை ஊஞ்சல் பத்திரிக்கையிலிருந்து பிரபாகரும் அஸ்வதியும் கிளம்புகிறார்கள். மழையை எப்படி ஆடிப்பெய்ய வைத்தார்கள் என்று அறிய முற்படுகையில், அங்கு ஓர் திருட்டு நிகழ்கிறது. அந்த திருட்டு அவர்களை பல ஸ்வாரஸ்யமான அனுபவங்களுக்கு உள்ளாக்குகிறது.
Same things were repeated. At the end, satisfaction of knowing things is missing. Author could have given more information. Felt like author's research were incomplete.